Home | 6 ஆம் வகுப்பு | 6வது தமிழ் | இலக்கணம்: மயங்கொலிகள்: கேள்விகள் மற்றும் பதில்கள்

பருவம் 2 இயல் 2 | 6 ஆம் வகுப்பு தமிழ் - இலக்கணம்: மயங்கொலிகள்: கேள்விகள் மற்றும் பதில்கள் | 6th Tamil : Term 2 Chapter 2 : Paadarinthu ollukudal

   Posted On :  30.06.2023 07:50 am

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2 : பாடறிந்து ஒழுகுதல்

இலக்கணம்: மயங்கொலிகள்: கேள்விகள் மற்றும் பதில்கள்

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2 : பாடறிந்து ஒழுகுதல் : இலக்கணம்: மயங்கொலிகள்: கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மதிப்பீடு


சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. சிரம் என்பது தலை (தலை / தளை )

2. இலைக்கு வேறு பெயர் தழை  (தளை / தழை)

3. வண்டி இழுப்பது காளை (காலை/காளை)

4. கடலுக்கு வேறு பெயர் பரவை (பரவை / பறவை)

5. பறவை வானில் பறந்தது (பறந்தது/பரந்தது)

6. கதவை மெல்லத் திறந்தான் (திறந்தான் / திரந்தான்)

7. மணம் வீசும். (மனம்/மணம்)

8. புலியின் கண் சிவந்து காணப்படும். (கன்/கண்)

9. குழந்தைகள் பந்து விளையாடினர். (பந்து/பன்து)

10. வீட்டு வாசலில் கோலம் போட்டனர். (கோலம்/கோளம்)

 

தொடர்களில் உள்ள மயங்கொலிப் பிழைகளைத் திருத்தி எழுதுக.

1) எண் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மனம் வீசின.

என் விட்டுத் தோட்டத்தில் மலர்கள் மணம் வீசின.

2) தேர்த் திருவிலாவிற்குச் சென்றனர்.

தேர்த் திருவிழாவிற்குச் சென்றனர்.

3) வாழைப்பலம் உடலுக்கு மிகவும் நல்ளது.

வாழைப்பழம் உடலுக்கு மிகவும் நல்லது.

 

குறுவினாக்கள்

1. மயங்கொலி எழுத்துகள் யாவை?

விடை

, ,

, ,

, ஆகிய எட்டும் மயங்கொலி எழுத்துகள் ஆகும்.

 

2. ,, ஆகிய எழுத்துகள் பிறக்கும் முறையைக் கூறுக.

விடை

- நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் நடுப் பகுதியைத் தொடுவதால் ணகரம் பிறக்கிறது.

- நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் முன் பகுதியைத் தொடுவதால் னகரம் பிறக்கிறது.

- நாவின் நுனி மேல்வாய்ப் பல்லின் அடிப் பகுதியைத் தொடுவதால் நகரம் பிறக்கிறது.

 

 

மொழியை ஆள்வோம்


கேட்க

தொலைக்காட்சி / வானொலியில் வேளாண்மை தொடர்பான நிகழ்ச்சிகளைக் கேட்டு வந்து வகுப்பில் கூறுக.

 

பேசுக

1. மாட்டுப்பொங்கலன்று மாடுகள் பேசிக் கொள்வதாகக் கற்பனை செய்து உரையாடுக.

2. உங்கள் பகுதியில் கொண்டாடப்படும் திருவிழாக்கள் குறித்துப் பேசுக.

 

சொல்லக் கேட்டு எழுதுக.

பொறையுடைமை, ஆசாரக்கோவை, நந்தவனம், முத்தேன், தைத்திங்கள், தலைவாழை, மஞ்சுவிரட்டு, மாமல்லன், ஆகாயகங்கை, மயங்கொலிகள்.

 

பத்தியைப் படித்து வினாக்கள் அமைக்க.

முகிலன் பொங்கல் விழாக் கொண்டாடத் தாத்தா வீட்டிற்குச் சென்றான். அங்குச் செவலை என்ற காளை இருந்தது. அக்காளையை முகிலனுக்கு மிகவும் பிடிக்கும். அதற்குத் தீவனம் வைப்பது அவனது வழக்கம். வீட்டிற்குப் பின்புறம் உள்ள தோட்டத்தில் இருந்து காய்கறிகள் பறித்துக் கொடுத்துத் தாத்தாவுக்கு உதவுவான். அவன், தாத்தா பாட்டியோடு மகிழ்ச்சியுடன் பொங்கல் விழாவைக் கொண்டாடுவான்.

(. கா.) முகிலன் யார் வீட்டிற்குச் சென்றான்?

விடை

1. முகிலன் எதற்காகத் தாத்தா வீட்டிற்குச் சென்றான்?

2. முகிலனின் தாத்தா வீட்டில் என்ன இருந்தது?

3. முகிலனின் வழக்கம் என்ன?

4. முகிலன் தாத்தாவிற்கு எவ்வாறு உதவுவான்?

5. முகிலன் தன் தாத்தா பாட்டியோடு எவ்விழாவைக் கொண்டாடுவான்?

 

சரியான தொடர் எது? கண்டறிந்து எழுதுக.

1. கதிரவன் மறையும் காலையில் உதித்து மாலையில்

2. மாலையில் காலையில் உதித்து மறையும் கதிரவன்

3. கதிரவன் காலையில் உதித்து மாலையில் மறையும்

4. மறையும் காலையில் கதிரவன் உதித்து மாலையில்

[விடை : 3. கதிரவன் காலையில் உதித்து மாலையில் மறையும்]

 

உரையாடலை நிரப்புக.

செல்வன் : வாங்க மாமா. நலமாக இருக்கின்றீர்களா?

மாமா : நான் நலமாக இருக்கிறேன். நீ எப்படி இருக்கிறாய்?

செல்வன் : நன்றாக இருக்கிறேன். உட்காருங்கள் மாமா.

மாமா : அப்பா, அம்மா எங்கே சென்றுள்ளார்கள்?

செல்வன் : இருவரும் கடைவீதிக்குச் சென்றுள்ளார்கள்.

மாமா : அப்படியா. நீ எப்படிப் படிக்கிறாய்?

செல்வன் : நன்றாகப் படிக்கிறேன் மாமா.

மாமா : நாளை சுதந்திர தினவிழா. உங்கள் பள்ளியில் போட்டிகள் நடத்துகிறார்களா?

செல்வன் : ஆம் மாமா. நான் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்கிறேன்.

மாமா : வெற்றி பெற வாழ்த்துகள்.

செல்வன் : நன்றி மாமா!

நட்பு என்னும் தலைப்பில் கவிதை எழுதுக.

இன்பம் கொடுப்பது நட்பு

மகிழ்ச்சி அளிப்பது நட்பு

கைக் கொடுப்பது நட்பு

ஊக்கம் அளிப்பது நட்பு.

 

கீழ்க்காணும் தலைப்பில் கட்டுரை எழுதுக.

பொங்கல் திருநாள்

 

 

மொழியோடு விளையாடு

 

 

கீழே உள்ள சொற்களைச் சேர்த்துப் புதிய சொற்களை உருவாக்குக.

(.கா.) கல்+ல்+உண்டு = கல்லுண்டு, கல்+ல்+இல்லை = கல்லில்லை.

விடை

1. பல் + ல் + உண்டு = பல்லுண்டு

பல் + ல் + இல்லை = பல்லில்லை .

 

2. மின் + ன் + உண்டு = மின்னுண்டு

மின் +ன் + இல்லை = மின்னில்லை

 

3. மண் + ண் + உண்டு = மண்ணுண்டு

மண் + ண் + இல்லை = மண்ணில்லை.

 

கட்டங்களில் மறைந்துள்ள சுற்றுலாத் தலங்களைக் கண்டுபிடித்து எழுதுக.


விடை :

சுற்றுலாத்தலங்கள் :

1. கன்னியாகுமரி

2. தஞ்சாவூர்

3. மாமல்லபுரம்

4. ஏற்காடு

5. கல்லணை

6. சுருளி

7. குற்றாலாம்

8. மதுரை

9. செஞ்சி

10. ஊட்டி

 

செயல்திட்டம்

1. இரவு நேர வானத்துக் காட்சியை வரைந்து வண்ணம் தீட்டி மகிழ்க.

2. உங்கள் ஊரில் அல்லது மாவட்டத்திலுள்ள பண்பாட்டுச் சின்னங்கள் குறித்த படத்தொகுப்பைச் செய்தியுடன் சேகரிக்க.

 

 

நிற்க அதற்குத் தக

 

என் பொறுப்புகள்...

1. நமது நாட்டின் பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாப்பேன்.

2. தமிழர் நாகரிகத்தையும் பண்பாட்டையும் உணர்ந்து அதன்வழி நடப்பேன்.

3. நற்பண்புகளுடன் அனைவரும் போற்றும்படி வாழ்வேன்.

4. நாட்டுப்புறக் கலைகளைப் போற்றுவேன்.

 

கலைச்சொல் அறிவோம்.

1. நல்வரவு – Welcome

2. சிற்பங்கள் – Sculptures

3. சில்லுகள் – Chips

4. ஆயத்த ஆடை – Readymade Dress

5. ஒப்பனை – Makeup

6. சிற்றுண்டி – Tiffin

 


 இணையத்தில் காண்க

 

தமிழ்நாட்டில் உள்ள புகழ்மிக்க பண்பாட்டுச் சிறப்பு மிக்க இடங்களை இணையத்தில் காண்க.

 


கற்பவை கற்றபின் 


 

1. , , ஆகிய எழுத்துகள் அமைந்த சொற்களைப் பொருளுடன் தொகுக்க.

விடை

1. அலகு பறவை மூக்கு

அளகு பெண் பறவை

அழகு வனப்பு

 

2. அலை திரை, திரி

அளை தயிர்

அழை கூப்பிடு

 

3. இலை தழை

இளை மெலி

இழை நூல்

 

4. ஒலி ஓசை

ஒளி வெளிச்சம்

ஒழி கெடு

 

5. கலை வித்தை

களை நீக்க

கழை மூங்கில்

 

6. கிலி அச்சம்

கிளி ஒரு பறவை

கிழி துண்டாக்கு

 

7. தலை சிரசு

தளை கட்டுதல்

தழை இலை

 

8. தால் நாக்கு

தாள் கால், பாதம்

தாழ் பணி

 

9. வலி வலிமை

வளி காற்று

வழி பாதை

 

10. வால் விலங்குகளின் வால் பகுதி

வாள் கத்தி

வாழ் உயிர் வாழ்.

 

2. மயங்கொலி எழுத்துகளை உங்களது நண்பரிடம் ஒலித்துக் காட்டுக.

விடை

1. அரம் ஒரு கருவி

2. அறி தெரிந்து கொள்

3. உரிய சொந்தமான

4. அருகு பக்கம்

5. அரை பாதி

6. இரங்கு மனமுருகு

7. இறங்கு கீழிறங்கு

8. உரை சொல்

9. கூரை முகடு

10. தரு மரம்

11. மாரி மழை

12. மறை வேதம்

13. மறம் வீரம்

14. ஆழி கடல்

15. குழம்பு காய்கறிக் குழம்பு

16. சோளம் தானியம்

17. ஆணை கட்டளை

18. கணி கணக்கிடு

19. வளி காற்று

20. விழி கண்திற

 

Tags : Term 2 Chapter 2 | 6th Tamil பருவம் 2 இயல் 2 | 6 ஆம் வகுப்பு தமிழ்.
6th Tamil : Term 2 Chapter 2 : Paadarinthu ollukudal : Grammar: Mayaholikal: Questions and Answers Term 2 Chapter 2 | 6th Tamil in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2 : பாடறிந்து ஒழுகுதல் : இலக்கணம்: மயங்கொலிகள்: கேள்விகள் மற்றும் பதில்கள் - பருவம் 2 இயல் 2 | 6 ஆம் வகுப்பு தமிழ் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2 : பாடறிந்து ஒழுகுதல்