Home | 6 ஆம் வகுப்பு | 6வது தமிழ் | இலக்கணம்: மயங்கொலிகள்

பருவம் 2 இயல் 2 | 6 ஆம் வகுப்பு தமிழ் - இலக்கணம்: மயங்கொலிகள் | 6th Tamil : Term 2 Chapter 2 : Paadarinthu ollukudal

   Posted On :  30.06.2023 07:40 am

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2 : பாடறிந்து ஒழுகுதல்

இலக்கணம்: மயங்கொலிகள்

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2 : பாடறிந்து ஒழுகுதல் : இலக்கணம்: மயங்கொலிகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் இரண்டு

கற்கண்டு

மயங்கொலிகள்


 

மணம் - மனம்

மேலே உள்ள இரண்டு சொற்களையும் கவனியுங்கள். உச்சரிக்கும் போது ஏறத்தாழ ஒன்று போலவே ஒலிக்கின்றன. ஆனால் இரண்டுக்கும் இடையே பொருள் வேறுபாடு உண்டு. இவ்வாறு உச்சரிப்பில் சிறிதளவு மட்டுமே வேறுபாடு உள்ள ஒலிகளை மயங்கொலிகள் என்கிறோம்.

, ,

, ,

, ஆகிய எட்டும் மயங்கொலி எழுத்துகள் ஆகும்.

, , - எழுத்துகள்


- நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் நடுப் பகுதியைத் தொடுவதால் ணகரம் பிறக்கிறது.

- நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் முன் பகுதியைத் தொடுவதால் னகரம் பிறக்கிறது.

- நாவின் நுனி மேல்வாய்ப் பல்லின் அடிப் பகுதியைத் தொடுவதால் நகரம் பிறக்கிறது.

(ட், ண்) (த், ந்) (ற், ன்) ஆகியவை இன எழுத்துகள்.

இந்த இன எழுத்துகளைக் கொண்டு டகரத்தை அடுத்து வரும் ணகரம் டண்ணகரம் என்றும்,

கரத்தை அடுத்து வரும் கரம் தந்நகரம் என்றும்,

கரத்தை அடுத்து வரும் கரம் றன்னகரம் என்றும் அழைக்கப்படுகின்றன.

தெரிந்து தெளிவோம்

சொற்களில் , இடம்பெறும் வகை

என்னும் எழுத்துக்கு முன் ண் வரும்

(.கா.) கண்டம், வண்டி, நண்டு

என்னும் எழுத்துக்கு முன் ன் வரும்

(.கா.) மன்றம், நன்றி, கன்று

கரம் வர வேண்டிய இடத்தில் னகரம் எழுதப்படுமானால் பொருள் மாறுபடும் என்பதை உணர்க.

(.கா) வாணம் - வெடி

பணி - வேலை

வானம்-ஆகாயம்

, , எழுத்துகள்


- நா (நாவின் இருபக்கங்கள் தடித்து) மேல் பற்களின் அடியைத் தொடுவதால் லகரம் தோன்றும். இது '' போல இருப்பதால் 'வகர லகரம்' என்கிறோம்.

- நா (நாவின் இருபக்கங்கள் தடித்து) மேல் அண்ணத்தின் நடுப்பகுதியைத் தொடுவதால் ளகரம் தோன்றும். இதனைப் பொது ளகரம் என்கிறோம். இது '' போல இருப்பதால் 'னகர னகரம்' என்று கூறுவர்.

- நாவின் நுனி மேல்நோக்கி வளைந்து வருடுவதால் முகரம் தோன்றும். (எகரமும் ழகரமும் ஒரே இடத்தில் ஒலிக்கப்படும்). தமிழுக்கே சிறப்பானது. எனவே இதனைச் சிறப்பு ழகரம் என்று அழைக்கிறோம். இது '' போல இருப்பதால் 'மகர ழகரம்' என்று கூறுவது இலக்கண மரபு.

பொருள் வேறுபாடு உணர்க.

விலை - பொருளின் மதிப்பு

விளை - உண்டாக்குதல்

விழை - விரும்பு

இலை - செடியின் இலை

இளை - மெலிந்து போதல்

இழை - நூல் இழை

, எழுத்துகள்


- நாவின் நுனி மேல் அண்ணத்தில் முதல் பகுதியைத் தொட்டு வருவதால் ரகரம் தோன்றுகிறது. இஃது இடையின எழுத்து என்பதால் இடையின ரகரம் என்கிறோம்.

- நாவின் நுனி மேல் அண்ணத்தில் மையப்பகுதியை உரசுவதால் றகரம் தோன்றுகிறது. இது வல்லின எழுத்து என்பதால் வல்லின றகரம் என்கிறோம்.

பொருள் வேறுபாடு உணர்க

ஏரி - நீர்நிலை

கூரை - வீட்டின் கூரை

ஏறி - மேலே ஏறி

கூறை - புடவை

Tags : Term 2 Chapter 2 | 6th Tamil பருவம் 2 இயல் 2 | 6 ஆம் வகுப்பு தமிழ்.
6th Tamil : Term 2 Chapter 2 : Paadarinthu ollukudal : Grammar: Mayaholikal Term 2 Chapter 2 | 6th Tamil in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2 : பாடறிந்து ஒழுகுதல் : இலக்கணம்: மயங்கொலிகள் - பருவம் 2 இயல் 2 | 6 ஆம் வகுப்பு தமிழ் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2 : பாடறிந்து ஒழுகுதல்