பருவம் 2 இயல் 2 | 6 ஆம் வகுப்பு தமிழ் - துணைப்பாடம்: மனம் கவரும் மாமல்லபுரம்: கேள்விகள் மற்றும் பதில்கள் | 6th Tamil : Term 2 Chapter 2 : Paadarinthu ollukudal
மதிப்பீடு
சிறுவினா
1.
மாமல்லபுரம் எப்படி உருவானது?
அதற்குக் காரணமான நிகழ்வு யாது?
விடை
மாமல்லபுரம் உருவான விதம் :
மாமல்லன் கடற்கரையில் பாறையின் நிழல் யானை போலத்
தெரிந்ததைப் பார்த்தான். உடனிருந்த மகேந்திரவர்மனும் கோவில் போலத் தெரிந்த பாறையின்
நிழலைப் பார்த்தான். நிழலை நிஜமாக மாற்ற சிந்தித்தனர். அச்சிந்தனையில் தோன்றியதே மாமல்லபுரம்.
யானை, கோவில் போல் தெரிந்த பாறைகளை மட்டுமல்லாமல் அங்குள்ள
ஒவ்வொரு குன்றையும் சிற்பமாக மாற்றினர். நந்தி, சிங்கம் என்று பாறைகளைச் சிற்பமாக மாற்றினர்.
இதனைத் தொடர்ந்து நான்கு தலைமுறைகளில் உருவாக்கப்பட்டதே மாமல்லபுரம். மாமல்லனால் உருவான
நகரம் என்பதால் மாமல்லபுரம் என்ற பெயர் பெற்றது. தற்போது மகாபலிபுரம் என்று அழைக்கிறோம்.
மாமல்லபுரம் உருவானவதற்குக் காரணமான நிகழ்வு
:
பல்லவ அரசரான நரசிம்மவர்மன்(மாமல்லன்) சிறுவனாக
இருந்தபோது, கடற்கரையில்
விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கிருந்த பாறைகளின் நிழல் யானை போலத் தெரிவதைக்
கூறினான். அவருடைய தந்தையும் கோவில் போலத் தெரிந்த குன்றின் நிழலைக் காட்டினார். அப்பாறைகளைக்
கோவிலாகவும் யானையாகவும் மாற்றிவிடலாம் என்ற சிந்தனை தோன்றியதால் உருவானதே மாமல்லபுரம்.
2. மாமல்லபுரத்தில் அர்ச்சுனன் தபசுப் பாறையில் உள்ள சிற்பங்களைப் பற்றி எழுதுக.
விடை
மாமல்லபுரத்தில் ‘அர்ச்சுனன் தபசு’ பாறையில் உள்ள சிற்பங்கள் : மனிதர்கள், விலங்குகள், பறவைகள் போன்ற புடைப்புச் சிற்பங்கள். ஒருவர்
கண்களை மூடி, இரு
கைகளையும் உயர்த்தி வணங்குவது போல ஒரு சிற்பம். அவரது உடல் மெலிந்து, எலும்புகளும் நரம்புகளும் வெளியே தெரிவது போலச்
செதுக்கப்பட்டிருக்கும். ‘அர்ச்சுனன்
தபசு’ என்று பெயர் பெற்ற அர்ச்சுனன் தவம் செய்யும் காட்சி.
இதனைப் ‘பகீரதன் தவம்’ என்றும்
கூறுவர்.
இரண்டு பாறைகளுக்கு இடையில் நீர் வடிந்து ஓடுவதற்கு
ஏதுவாய் அமைக்கப்பட்டுள்ளது. அவ்விடம் ஆகாய கங்கை பூமிக்கு வருவது போல அழகான காட்சி
தரும். யானைச் சிற்பங்கள், சிங்கம், புலி, அன்னப் பறவை, உடும்பு, குரங்குகள் என எல்லாம் உயிருள்ளவை போலச் செதுக்கப்பட்டுள்ளன.
மான் தன் காலைத் தூக்கி முகவாயைச் சொறிந்து கொள்வது போன்ற சிற்பம். உண்மையிலேயே மான்
ஒன்று இருப்பதைப் போலத் தோன்றும்.
கற்பவை கற்றபின்
1.
நீங்கள் சென்ற சுற்றுலா பற்றிய செய்திகளை நண்பர்களுடன் பகிர்க.
விடை
கடந்த வாரம் என் பெற்றோருடன் நானும் குற்றாலம்
சென்று வந்தேன். அங்கு நான் கண்ட காட்சிகளை எவ்வாறு எடுத்துரைப்பது என்றே தெரியவில்லை!
பஞ்சுப் பொதிகளைப் போல மேகக் மேக கூட்டங்கள் மலைகளிலே
தவழுகின்ற காட்சி மிக அழகாக இருக்கிறது. குளிர்ந்த காற்று, சுற்றிலும் பசுமை மாறாக் காட்டுச் சூழல், ஓங்கி 6 வளர்ந்திருக்கும் மரக்கூட்டங்கள் கண்ணிற்குப்
பசுமையைத் தருகின்றன.
‘ஆயிரம்
கண்போதாது வண்ணக்கிளியேகுற்றால அழகை நாம் காண்பதற்கு வண்ணக் கிளியே”-என குற்றாலத்தைப் பற்றி கவிஞன் பாடியிருப்பது
முற்றிலும் உண்மையே! திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசிக்கு அருகில் மேற்குத் தொடர்ச்சி
மலையின் ஒரு பகுதியாகிய திரிகூட மலையின் அடிவாரத்தில் தான் குற்றாலம் இருக்கிறது. நாம்
கூட ‘குற்றாலக் குறவஞ்சி’ என்ற நூலின் சில பாடல்களைப் பாடப்பகுதியில் படித்திருக்கிறோமே!
உனக்கு நினைவிருக்கிறதா?
“வானரங்கள்
கனிகொடுத்து மந்தியொரு கொஞ்சும் மந்திசிந்தும் கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்.” – என்ற பாடலில் வரும் காட்சிகளையெல்லாம் கண்டேன்.
குற்றால அருவிநீர் நோய் போக்கும் ஆற்றலைக் கொண்டதால்
நான் பலமுறை அருவியில் நீராடினேன். இந்த நல்ல இடத்தைக் காண நாடெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர்
வந்த வண்ணமாய் இருக்கின்றனர். எனவே, நீங்களும் வாய்ப்பு ஏற்படும்போது சென்று பார்த்து
மகிழ்ந்திட வேண்டுகிறேன்.
2.
தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களைப் பற்றிய செய்திகளைத் திரட்டுக.
விடை
தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்கள் : குற்றாலம், தஞ்சைப் பெரியகோவில், சென்னை – மெரினாக் கடற்கரை, மதுரை மீனாட்சியம்மன் கோவில், காஞ்சி காமாட்சியம்மன் கோவில் (காஞ்சிபுரத்தில்
புகழ்பெற்ற பல கோவில்கள்) கும்பகோணம் – கோவில்கள், மேட்டூர் அணை, வைகை அணை, கல்லணை, கன்னியாகுமரி இவை போன்ற நிறைய இடங்கள் உள்ளன.
குற்றாலம் :
இது மேற்குத் தொடர்ச்சி மலையின் அழகிய பின்னணியில்
உள்ளது. மழைக்காலத்தில் இங்குள்ள அருவியில் குளிப்பதற்காகச் சுற்றுலாப் பயணிகள் பல
பகுதிகளில் இருந்தும் இங்கு வந்து குவிகின்றனர்.
குறு ஆல் என்பது ஒருவகையான ஆலமரம். இம்மரங்கள்
அதிகமாகக் காணப்பட்டதால் குற்றாலம் என்ற பெயர் பெற்றுள்ளது. சங்க காலத்தில் இது தேனூர்
என்ற பெயரில் அழைக்கப் பெற்றுள்ளது. தென் மேற்கு பருவகாலம் ஆரம்பித்தவுடன் குற்றால
அருவியில் நீர் ஆர்ப்பரித்து விழத் தொடங்கிவிடும். ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் குற்றால சீசன் என அழைக்கப்படுகிறது.
குற்றால அருவிகள் தென் தமிழகத்தில் திருநெல்வேலி
மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. சிற்றாறு, மணிமுத்தாறு, பச்சையாறு மற்றும் தாமிரபரணி ஆகிய ஆறுகளின் பிறப்பிடமாக
இம்மலை விளங்குகிறது. குற்றால அருவிக்கரையில் குற்றால நாதர் கோவில் உள்ளது. இங்கு பேரருவி, ஐந்தருவி, சிற்றருவி, பாலருவி, புலியருவி, பழத்தோட்ட அருவி, செண்பகா தேவியருவி, பழைய குற்றால அருவி, தேனருவி என ஒன்பது அருவிகள் உள்ளன.
இங்கு அருவிகளைத் தவிர வேறு சில இடங்களும் பார்க்க
வேண்டிய இடங்களாகும். அவை குற்றாலநாதர் கோயில் சித்திர சபை, தொல்லியல் அருங்காட்சியகம் – குற்றாலம், சிறுவர் பூங்கா, கலைவாணர் அரங்கம் ஆகியனவாகும்.
குற்றாலம் ஏழைகளின் சொர்க்கபுரி. இங்கு அகத்திய
முனிவர் வாழ்ந்ததாகப் புராணக் கதைகளும் உண்டு. அரிய வகை மூலிகைகளும் நிரம்பிய இடம்.
மூலிகைக் காடுகளின் வழியாக ஓடிவந்து அருவியாக கொட்டுகின்ற நீரில் குளிப்பதற்காகவே மக்கள்
கூட்டம் சேர்கின்றது. மூலிகைக் குளியலான அருவிகளைக் கொண்ட குற்றாலத்தைத் தென்னகத்தின்
‘ஸ்பா’ எனக்
கூறுகிறார்கள். இங்குள்ள அருவியில் குளிப்பது ஆனந்தத்தைத் தருகிறது.
இவ்வளவு இன்பத்தைத் தரும் குற்றாலம் சென்று வந்ததில்
எனக்குப் பேரின்பம். மீண்டும் எப்போது அங்கு செல்வோம் என்ற எண்ணத்துடனேயே இருக்கிறேன்.
மீண்டும் வாய்ப்புக் கிடைத்தால் நண்பர்கள் நாம் அனைவரும் பெற்றோரை அழைத்துக் கொண்டு
செல்வோம்.
ஸ்ரீ பிரகதீஸ்வரர் கோவில் :
10-வது நூற்றாண்டு சோழ அரசர் ராஜராஜனால் கட்டப்பட்ட
ஸ்ரீ பிரகதீஸ்வரர் ஆலயம். சோழ கட்டடக்கலை ஆடம்பரத்திற்கு ஒரு அற்புத உதாரணம் ஆகும்
அற்புதமான 14 மாடிகளைக் கொண்ட கிரானைட் கோவில் 216 அடி உயரத்திற்கும், மத்திய ஆலயம் என்ற பீடம் 45,72 சதுர மீ மற்றும்
சரியான சன்னதி 30.48 சதுர மீ அளவிட்டிலும் உள்ளது. 60.96 மீட்டர் உயரம் ஒரு சதுர தளத்தில்
இருந்து செங்குத்தாக உயரும் ஸ்ரீ பிரகதீஸ்வரர் கோவில் விமானம் மற்றும் மேல் தங்க-பூசப்பட்ட
செம்பு கலசம் 339.5 கிலோ எடையுள்ளது.
20 டன் எடையுள்ள பெரிய காளை, நந்தி, ஒரே கல்லில் இருந்து சிற்பமாக செதுக்கப்பட்டது
மற்றும் கருவறைக்கு நேர் எதிராகவே அமர்ந்துள்ளது. ஸ்ரீ பிரகதீஸ்வரர் கோவிலின் இந்த
மகத்தான அமைப்புக்குள்ளே, 7 மீட்டர்
உயர சிவலிங்கம் தலைமை தாங்குகிறது. கோவில் உள் சுவர்களில் மற்றும் கூரையில் அழகான ஓவியங்கள்
மற்றும் சிறப்பான சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள மலைவாசஸ்தலங்கள் :
கோத்தகிரி மலை வாசஸ்தலம், குன்னூர், ஏற்காடு மலை வாசஸ்தலம், உதகமண்டலம் மலைவாசஸ்தலம், ஏலகிரி மலைவாசஸ்தலம், ஊட்டி மலைவாசஸ்தலம், கொடைக்கானல் மலை வாசஸ்தலம்.
3.
மாமல்லபுரச் சிற்பங்கள் பாறைகளில் செதுக்கப்பட்டவை. வேறு எந்தெந்தப் பொருள்களால் சிற்பங்களைச் செய்யலாம் எனக் கலந்துரையாடுக.
விடை
(i) கற்கள் : கருங்கல், மாக்கல், பளிங்குக்கல், சலவைக்கல்.
(ii) உலோகம் : பொன், வெள்ளி, வெண்கலம், செம்பு.
(iii) செங்கல் : மரம், சுதை, தந்தம், மெழுகு.
4.
கலைகளுள் ஒன்று சிற்பக்கலை. இது போன்ற பிற கலைகளின் பெயர்களைத் திரட்டி எழுதுக.
விடை
கலைகளின் பெயர்கள் : ஓவியக்கலை, நடனக்கலை, நாடகக் கலை, இசைக்கலை, கட்டடக்கலை, . கவிதைக்கலை, ஒப்பனைக்கலை, தையற்கலை, நீச்சல்கலை இவை போன்ற அறுபத்து நான்கு கலைகள் உள்ளன.