Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | வளர்ச்சியடைந்த நாடுகளுடனான இந்தியாவின் உறவுகள்

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை - வளர்ச்சியடைந்த நாடுகளுடனான இந்தியாவின் உறவுகள் | 10th Social Science : Civics : Chapter 5 : India’s International Relations

   Posted On :  27.07.2022 02:28 pm

10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு - 5 : இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

வளர்ச்சியடைந்த நாடுகளுடனான இந்தியாவின் உறவுகள்

ஒரு வளர்ந்த நாடு என்பது இறையாண்மை கொண்ட நாடாகும். இது மிகவும் வளர்ந்த பொருளாதாரம் மற்றும் குறைந்த தொழில்மயமான தேசத்துடன் ஒப்பிடும்போது மேம்பட்ட தொழில்நுட்ப உள்கட்டமைப்பைக் கொண்டுள்ளதும் ஆகும்.

வளர்ச்சியடைந்த நாடுகளுடனான இந்தியாவின் உறவுகள்

ஒரு வளர்ந்த நாடு என்பது இறையாண்மை கொண்ட நாடாகும். இது மிகவும் வளர்ந்த பொருளாதாரம் மற்றும் குறைந்த தொழில்மயமான தேசத்துடன் ஒப்பிடும்போது மேம்பட்ட தொழில்நுட்ப உள்கட்டமைப்பைக் கொண்டுள்ளதும் ஆகும். இந்தியா வல்லரசு நாடுகளுடன் மிக கவனத்துடன் தன்னைச் சமநிலைப்படுத்தி உள்நாட்டு வளர்ச்சிக்கான அதிகப் பலனைப் பெறுவதற்கு முயன்று வருகிறது.



. அமெரிக்க ஐக்கிய நாடுகள்

அமெரிக்காவும் இந்தியாவும் புதிய தலைமுறை இராணுவக் கூட்டாண்மைக்கு வழிவகுக்கும் தகவல் தொடர்பு, இணக்கத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் (Communication Compatibility and Security Agreement - COMCASA) கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தம் 10 ஆண்டுகள் காலவரையறை கொண்டதாகும். இதன்படி அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு உபகரணங்களில் பயன்படுத்தப்படும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தைப் பெறுவதற்கான வழிவகை ஏற்படுவதோடு, இரு நாடுகளின் இராணுவங்களுக்கிடையே நிகழ்நேரத் தகவல் பகிர்வுக்கும் அனுமதியளிக்கிறது.


. ஐரோப்பிய நாடுகள்

அனைத்து விவகாரங்களிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருந்து வருவதோடு குறிப்பாகப் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, அணுசக்தி ஆற்றல், விண்வெளி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றம் அதிகரித்து வருகிறது. பிரான்ஸ் நாட்டின் விண்வெளி ஏவுதளங்கள் இந்தியாவின் இஸ்ரோ (ISRO) அமைப்பினால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பிரான்ஸ் நாடு இந்தியாவில் உள்ள சண்டிகர், நாக்பூர் மற்றும் பாண்டிச்சேரி போன்ற நகரங்களை திறன்மிகு நகரங்களாக மேம்படுத்த இந்தியாவோடு கூட்டாக ஒத்துழைக்கிறது. இந்தியாவும் பிரான்சும் சர்வதேச சூரியசக்தி கூட்டணியை (International Solar Alliance) அறிமுகப்படுத்தி கடகரேகை மற்றும் மகரரேகை ஆகியவற்றிற்கு இடையே உள்ள நாடுகளைச் சூரிய ஆற்றலுக்கான ஒத்துழைப்பில் ஒன்று சேர்க்கின்றன.


. ஆஸ்திரேலியா

இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் நம்பிக்கைக்குரிய திட்டங்களைப் பல ஆண்டுகளாக மெதுவாகவும் படிப்படியாகவும் ஏற்படுத்தி வருகின்றன. ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் ஒருங்கிணைந்து இந்திய ஆஸ்திரேலிய கடற்படை பயிற்சி (AUSINDEX) ஒத்திகையின் மூலம் கடல் சார் ஒத்துழைப்பை மேம்படுத்த உறுதி பூண்டுள்ளன.


. ஜப்பான்

ஜப்பான் நாட்டின் ஷிங்கன்சென் (Shinkansen) முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்த முடிவு செய்தது. இது பாதுகாப்பு மற்றும் துல்லியத் தன்மை கொண்ட உயர்தர அதிவேக ரயில் அமைப்பு ஆகும். டெல்லி மெட்ரோ ரயில் ஜப்பானிய ஒத்துழைப்பில் உருவான வெற்றிகரமான எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகும். மும்பை, அகமதாபாத் இடையேயான அதிவேக ரயில் போக்குவரத்து (MAHSR) இருநாட்டு ஒத்துழைப்பின் மற்றுமொரு முயற்சியாகும்.

ஜப்பானிய அரசாங்கம் இந்தியக்குடிமக்களுக்கு இந்திய ரயில்வே துறையில் பணிபுரியும் வகையில் ஜப்பானியப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டப்படிப்பைப் படிக்க ஆண்டுதோறும் 20 இடங்களை வழங்கி வருகிறது.

உற்பத்தித் துறையில் உற்பத்தி மற்றும் திறன் இந்தியா (Make in India, Skill India) திட்டங்க ளில் பங்களிக்கவும் ஜப்பானிய உற்பத்தித் திறன்களை வழங்கி இந்தியாவின் உற்பத்தித் தொழில்துறை தரத்தை மேம்படுத்தவும் 30,000 இந்திய மக்களுக்குப் பயிற்சி வழங்க ஜப்பான் இந்தியா உற்பத்தி நிறுவனம் (Japan India Institute of Manufacturing) அறிவித்துள்ளது.

2017ஆம் ஆண்டு குஜராத், கர்நாடகம், இராஜஸ்தான் மற்றும் தமிழ்நாடு ஆகிய 4 மாநிலங்களில் ஜப்பான் - இந்தியா உற்பத்தி நிறுவனம் (JIM) ஏற்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு ஜப்பானிய மானியம் மூலமான படிப்புகள் (Japanese Endowed Courses) ஆந்திரப்பிரதேச பொறியியல் கல்லூரிகளில் தொடங்கப்பட்டுள்ளன.

தகவல் தொழில்நுட்பங்கள் தொடர்பான (இணையதள பொருள்கள், செயற்கை நுண்ணறிவு, பெருமளவு தரவு பகுப்பாய்வு) மூன்று இந்திய - ஜப்பான் கூட்டு ஆய்வகங்களை நிறுவுவது சமீபத்திய முயற்சிகளில் அடங்கும்.


Tags : India’s International Relations இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை.
10th Social Science : Civics : Chapter 5 : India’s International Relations : India’s Relationships with Developed Countries India’s International Relations in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு - 5 : இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை : வளர்ச்சியடைந்த நாடுகளுடனான இந்தியாவின் உறவுகள் - இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு - 5 : இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை