இந்தியாவின் சர்வதேச உறவுகள் | குடிமையியல் | சமூக அறிவியல் - ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில்கள் | 10th Social Science : Civics : Chapter 5 : India’s International Relations
அலகு 5
இந்தியாவின் சர்வதேச உறவுகள்
பயிற்சி
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.
1. மக்மகான் எல்லைக்கோடு எந்த இரு நாடுகளுக்கும் இடையே
உள்ள எல்லை ஆகும்?
அ)
பர்மா
- இந்தியா
ஆ) இந்தியா - நேபாளம்
இ) இந்தியா - சீனா
ஈ) இந்தியா - பூடான்
[விடை: (இ)
இந்தியா – சீனா]
2. இந்தியா பின்வருவனவற்றுள் எந்த அமைப்பில் உறுப்பினராக
இல்லை?
1) ஜி 20
2)
ஏசியான் (ASEAN)
3) சார்க் (SAARC)
4)
பிரிக்ஸ் (BRICS)
அ) 2 மட்டும்
ஆ) 2 மற்றும் 4
இ)
2,
4 மற்றும் 1
ஈ) 1, 2
மற்றும் 3
[விடை: (அ)
2 மட்டும்]
3. ஓபெக் (OPEC) என்பது
அ)
சர்வதேச காப்பீட்டு நிறுவனம்
ஆ)
ஒரு சர்வதேச விளையாட்டுக் கழகம்
இ) எண்ணெய் ஏற்றுமதி நிறுவனங்களின் அமைப்பு
ஈ) ஒரு சர்வதேச நிறுவனம்
[விடை: (இ)
எண்ணெய் ஏற்றுமதி நிறுவனங்களின் அமைப்பு]
4. இந்தியா தனது மிக நீண்ட நில எல்லையை எந்த நாட்டோடு
பகிர்ந்து கொள்கிறது?
அ) வங்காளதேசம்
ஆ) மியான்மர்
இ) ஆப்கானிஸ்தான்
ஈ) சீனா
[விடை: (அ)
வங்காளதேசம்]
5. பின்வருவனவற்றைப் பொருத்தி கீழே கொடுக்கப்பட்ட குறியீடுகளிலிருந்து
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
i)
சல்மா அணை - 1. வங்காளதேசம்
ii)
பராக்கா ஒப்பந்தம் - 2. நேபாளம்
iii)
சுக்கா நீர்மின்சக்தி திட்டம் - 3. ஆப்கானிஸ்தான்
iv)
சாரதா கூட்டு மின்சக்தித் திட்டம் - 4. பூடான்
அ) 3 1 4 2
ஆ) 3 1 2 4
இ)
3 4 1 2
ஈ) 4 3
2 1
[விடை : (அ) 3 1 4 2]
6. எத்தனை நாடுகள் இந்தியாவுடன் தன் எல்லையைப் பகிர்ந்து
கொள்கின்றன?
அ) 5
ஆ) 6
இ) 7
ஈ) 8
[விடை : (இ) 7]
7. எந்த இரண்டு தீவுநாடுகள் இந்தியாவின் அண்டை நாடுகள்
ஆகும்?
அ) இலங்கை மற்றும் அந்தமான் தீவுகள்
ஆ) மாலத்தீவு மற்றும் லட்சத் தீவுகள்
இ) மாலத்தீவு மற்றும் நிக்கோபார் தீவு
ஈ) இலங்கை மற்றும் மாலத்தீவுகள்
[விடை: (ஈ)
இலங்கை மற்றும் மாலத்தீவுகள்]
8. எந்த இந்திய மாநிலம் மூன்று நாடுகளால் சூழப்பட்டுள்ளது?
அ) அருணாச்சலப் பிரதேசம்
ஆ) மேகாலயா
இ) மிசோரம்
ஈ) சிக்கிம்
[விடை: ஈ)
சிக்கிம் * அ) மற்றும் ஈ)]
9. எத்தனை மாநிலங்கள் நேபாளத்துடன் தங்கள் எல்லையைப்
பகிர்ந்து கொள்கின்றன?
அ) 5
ஆ) 4
இ) 3
ஈ) 2
[விடை : அ)
5]
10. சுதந்திரமடைந்த பாகிஸ்தானுக்கான எல்லைகளை வகுத்தவர்
அ) மவுண்ட்பேட்டன் பிரபு
ஆ) சர் சிரில் ராட்க்ளிஃப்
இ) கிளமன்ட் அட்லி
ஈ) மேற்கூறிய ஒருவருமில்லை
[விடை: (ஆ)
சர் சிரில் ராட்க்ளிஃப்]
II. கோடிட்ட இடத்தை நிரப்புக.
1.
இமயமலையில் உள்ள ஒரு சிறிய முடியாட்சி நாடு பூடான் ஆகும்.
2.
இந்தியா, தென்கிழக்காசியாவிற்குள் செல்வதற்கான
ஒரு நுழைவு வாயிலாக மியான்மர் இருக்கிறது.
3.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இடைப்படு நாடு நேபாளம் ஆகும்.
4.
இந்தியாவிற்குச் சொந்தமான டீன்பிகா என்ற
பகுதி மேற்கு வங்காளம் - வங்காளதேச எல்லையில் அமைந்துள்ளது.
5.
இடி மின்னல் நிலம் என்று அறியப்படும் நாடு பூடான் ஆகும்.
6.
இந்தியாவும் இலங்கையும் பாக்நீர்ச்சந்தி ஆல் பிரிக்கப்படுகின்றன.
III. சரியான கூற்றினைத்
தேர்ந்தெடுக்கவும்.
1. இந்தியா மற்றும் மியான்மாரின் கலடன் போக்குவரத்துத் திட்டம் பின்வரும் போக்குவரத்து
முறைகளில் எந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளது?
1.
சாலை
2.
ரயில் வழி
3.
கப்பல்
4.
உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைப் பயன்படுத்தி சரியான விடையைத்
தேர்ந்தெடுக்கவும்.
அ)
1,
2 மற்றும் 3
ஆ) 1, 3 மற்றும் 4
இ) 2, 3
மற்றும் 4
ஈ) 1,
2, 3 மற்றும் 4
[விடை: (ஆ)
1, 3 மற்றும் 4]
2. கூற்று : இந்தியாவும் பிரான்சும்
சர்வதேச சூரியசக்திக் கூட்டணியைத் (International Solar Alliance)
தொடங்கியுள்ளன.
காரணம் : இது கடகரேகை மற்றும் மகரரேகை ஆகியவற்றுக்கு இடையேயான நாடுகளைச் சூரிய
ஆற்றலுக்கான ஒத்துழைப்பில் ஒன்றிணைப்பதற்காகும்.
அ) கூற்று சரி. காரணம் கூற்றிற்கான
சரியான விளக்கமாகும்.
ஆ)
கூற்று சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று தவறு; காரணம் சரி.
ஈ)
கூற்று,
காரணம் இரண்டும் தவறு.
[விடை: (அ)
கூற்று சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.]
3. பின்வரும் கூற்றுகளில் எது / எவை உண்மையானவை?
1. இந்திய பண்பாட்டு உறவுகளுக்கான குழு, டாக்கா பல்கலைக்கழகத்தில் 'தாகூர் இருக்கை' ஏற்படுத்த வழிவகை செய்துள்ளது.
விடை: சரி
2. மேற்கத்திய நாடுகளுக்கான இந்தியாவின் நுழைவு வாயில் மியான்மர்
ஆகும்.
விடை: தவறு
3. நேபாளம், பூடான் ஆகியவை நிலப்பகுதிகளால்
சூழப்பட்ட நாடுகளாகும்.
விடை: சரி
4.
இந்தியாவின் நாளந்தா பல்கலைக்கழகத் திட்டத்தின் ஒரு பங்குதாரர் நாடு
இலங்கையாகும்.
விடை: சரி
அ)
1,
2 மற்றும் 3
ஆ) 2, 3
மற்றும் 4
இ) 1, 3
மற்றும் 4
ஈ) 1, 2
மற்றும் 4
[விடை: (இ)
1, 3 மற்றும் 4]
4. கூற்று : இந்தியாவின் பெருளாதார
வளர்ச்சியில் ஓபெக் (OPEC) ஆர்வம் காட்டியுள்ளது
காரணம் : தேவையான எண்ணெய் வளங்கள் இல்லாததால் இந்தியா விவசாயம் மற்றும் தொழில்துறை உற்பத்தியில்
கவனம் செலுத்துகிறது.
அ)
கூற்று சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்று தவறு; காரணம் சரி.
இ) கூற்று, காரணம் இரண்டும் சரி.
ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு.
[விடை: கூற்று,
காரணம் இரண்டும் சரி.]
IV. பொருத்துக.
1.
பிராண்டிக்ஸ் (Brandix) - வியன்னா
2.
தகவல்தொடர்பு இணக்கத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தம்
(COMCASA) – ஜப்பான்
3.
ஷிங்கன்சென் - ஷாங்காய்
4.
பிரிக்ஸ் (BRICS) - அமெரிக்க
ஐக்கிய நாடுகள்
5.
ஒபெக்
(OPEC) - விசாகப்பட்டினத்தின்
ஆடை நகரம்
விடை:
1. பிராண்டிக்ஸ் (Brandix) -
விசாகப்பட்டினத்தின் ஆடை நகரம்
2. தகவல்தொடர்பு இணக்கத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தம் (COMCASA) – அமெரிக்க ஐக்கிய நாடுகள்
3. ஷிங்கன்சென் - ஜப்பான்
4. பிரிக்ஸ் (BRICS) - ஷாங்காய்
5. ஒபெக் (OPEC) – வியன்னா