இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை - பாடச்சுருக்கம், கலைச்சொற்கள் | 10th Social Science : Civics : Chapter 5 : India’s International Relations
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை
பாடச்சுருக்கம்
• இந்தியா எப்பொழுதும் அமைதியை விரும்பும்
நாடாக இருப்பதோடு உலக அமைதிக்குத் தொடர்ந்து கடுமையாகப் போராடி வருகிறது.
• இந்தியா அதன் அனைத்து அண்டை நாடுகளுடன்
வரலாற்று ரீதியாகவும்,
சமூக-பொருளாதார, இனம் மற்றும்
மொழியியல் உறவுகளைக் கொண்டுள்ளது.
• பொது சுகாதாரம், சிறு அளவிலான தொழில்கள்,
தொலைத்தொடர்பு, கல்வி போன்றவற்றை மேம்படுத்துவதற்கும்
மற்றும் சாலைகள், பாலங்கள் அமைப்பதற்கும் அண்டை நாடுகளுக்கு உதவுகிறது.
• ஆய்வகக் கட்டடங்கள், மருந்தகங்கள்,
ஆழ்குழாய் கிணறுகள் போன்றவைகளை அமைத்திட அண்டை நாடுகளுக்குப் பெரும்
நிதி உதவி செய்கிறது.
• இந்தியா தன் அண்டை நாடுகளின் வளர்ச்சிக்குப்
பண உதவி மற்றும் நிதி உதவி ஆகியவற்றை தன் பங்களிப்பாக முன்கூட்டியே செய்கிறது.
• இந்தியா வல்லரசுகளுடன் நல்ல உறவைக்
கொண்டுள்ளது. மேலும் தன் உள்நாட்டு வளர்ச்சிக்கான அதிகபட்ச நலனைப் பெற முயன்று வருகிறது.
• ஐ.நா. சபையின் அனைத்து முயற்சிகளிலும்
இந்தியா தன் ஒத்துழைப்பை நல்குகிறது.
• பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பில்
இந்தியா ஒரு தீவிர உறுப்பினராக இருப்பதால் உலக அளவில் தன்னை வடிவமைக்கவும் இது வழிகோலுகிறது.
ஓரினத்தைச்
சேர்ந்த : homogenous of
the same kind / alike
இருதரப்பு
வர்த்தகம் : bilateral
trade trading between two countries
நீர்
மின்சார திட்டம் : hydroelectric
project producing electricity by using the power of fast moving water
உள்கட்டமைப்பு : infrastructure the
basis organisational facilities
தொன்மை : antiquity the ancient past
இரண்டாகப்
பிரித்தல் : bifurcation to divide into two parts
கண்காணிப்பு : surveillance Close observation