Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | இந்தியாவும் மேற்கு ஆசியாவும்

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை - இந்தியாவும் மேற்கு ஆசியாவும் | 10th Social Science : Civics : Chapter 5 : India’s International Relations

10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு - 5 : இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

இந்தியாவும் மேற்கு ஆசியாவும்

மேற்கு ஆசியா என்பது எகிப்து, அரேபிய தீபகற்பம், துருக்கி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளை உள்ளடக்கியது ஆகும். இந்தியாவும் மேற்கு ஆசிய நாடுகளும் வரலாற்றுக்கு முந்திய காலத்திலிருந்தே உறவுகளைக் கொண்டிருக்கின்றன.

இந்தியாவும் மேற்கு ஆசியாவும்

மேற்கு ஆசியா என்பது எகிப்து, அரேபிய தீபகற்பம், துருக்கி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளை உள்ளடக்கியது ஆகும். இந்தியாவும் மேற்கு ஆசிய நாடுகளும் வரலாற்றுக்கு முந்திய காலத்திலிருந்தே உறவுகளைக் கொண்டிருக்கின்றன. சிந்துவெளி மற்றும் மெசபடோமியா நகரங்களுக்கு இடையே வணிக உறவு ஏற்படுத்தப்பட்டிருந்தது.



மேற்கு ஆசியா பொருளாதார அடிப்படையில் குறிப்பிடத்தக்க பகுதியாக இந்தியாவிற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. நிலத்தால் சூழப்பட்ட, எண்ணெய் வளமிக்க மத்திய ஆசியாவிற்கு ஒரு நுழைவு வாயிலாக அமைந்துள்ளது.

புதிய நூற்றாண்டு தொடங்கியதிலிருந்து இந்தியா மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (Gulf Cooperation Council) இடையிலான உறவில் அசாதாரணமான திருப்பம் ஏற்பட்டுள்ளது.

சபஹார் ஒப்பந்தம் எனப்படும் முக்கூட்டு ஒப்பந்தம் இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி சபஹார் துறைமுகத்தைப் பயன்படுத்தி மூன்று நாடுகளிலும் போக்குவரத்து வழிதடங்கள் ஏற்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்துறைமுகம் பாகிஸ்தானைத் தவிர்த்து ஆப்கானிஸ்தான் மற்றும் ஆசியா ஆகிய சந்தைகளை இந்தியா அணுக ஒரு நுழைவு வாயிலாக இருக்கும்.

உலகின் மிகப் பழமையான கடல் வர்த்தக பாதைகளில் ஒன்று சுமேரியாவில் இருந்து பஹ்ரைன் வழியாக மெலுக்கா என்று அழைக்கப்பட்ட சிந்துவெளி நாகரிகம் வரை அமைக்கப்பட்டிருந்தது.

பிரபல அறிஞரான எம் எஸ் அக்வானி, "இடைக்காலத்தில் இந்தியர்களின் மருத்துவம் கணிதம் மற்றும் வானியல் திறமைகளை அரேபிய மற்றும் ஈரானிய அறிஞர்கள் பெரிதும் மதித்ததோடு, இறுதியில் அவர்களது அறிவுசார் பாரம்பரியத்தின் பகுதியாகவும் ஆனது” என்றும் குறிப்பிடுகிறார்


Tags : India’s International Relations இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை.
10th Social Science : Civics : Chapter 5 : India’s International Relations : India and West Asia India’s International Relations in Tamil : 10th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு - 5 : இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை : இந்தியாவும் மேற்கு ஆசியாவும் - இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை : 10 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு - 5 : இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை