Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | அறிமுகம்,வகைகள் மற்றும் பண்புகள் - திசுத்தொகுப்பு
   Posted On :  06.07.2022 09:44 am

11 வது தாவரவியல் : அலகு 9 : திசு மற்றும் திசுத்தொகுப்பு

அறிமுகம்,வகைகள் மற்றும் பண்புகள் - திசுத்தொகுப்பு

நீங்கள் முன்னரே கற்றுக் கொண்டது போல, தாவரச் செல்கள் திசுக்களாகவும் இத்திசுக்கள் உறுப்புகளாகவும் ஒருங்கமைக்கப்படுகின்றன.

திசுத்தொகுப்பு (The tissue system)


அறிமுகம், வகைகள் மற்றும் பண்புகள்


நீங்கள் முன்னரே கற்றுக் கொண்டது போல, தாவரச் செல்கள் திசுக்களாகவும் இத்திசுக்கள் உறுப்புகளாகவும் ஒருங்கமைக்கப்படுகின்றன. தாவரத்தில் உள்ள பல்வேறு உறுப்புகள் அவற்றின் உள்ளமைப்பில் வேறுபட்டுக் காணப்படுகின்றன. அத்தியாயத்தின் இப்பகுதியானது தாவர உறுப்புகளின் பல்வேறு சூழல்களுக்கான வெவ்வேறு வகையான உள்ளமைப்பியல் வேறுபாடுகளையும், அவற்றின் தகவமைவுகளையும் கையாளுகிறது.

தாவர உடலில் அவற்றின் இருப்பிடத்தைப் பொருத்து இல்லாமல், ஒரே விதமான பணியை மேற்கொள்கின்ற பல திசுக்கள் சேர்ந்த தொகுதி திசுத்தொகுப்பு எனப்படும். ஜெர்மன் அறிவியலார் ஜுலியஸ்வான் சாக்ஸ் (Julius Von Sachs) என்பவர் 1875-ல் தாவரங்களில் உள்ள திசுத் தொகுப்புகளை மூன்று வகைகளாகப் பிரித்துள்ளார். அவைகளாவன

1. புறத்தோல் திசுத்தொகுப்பு (Epidermal tissue system) (புரோட்டோடெர்மிலிருந்து உருவாகிறது)

2. அடிப்படைத்திசுத்தொகுப்பு (Ground tissue system(தள ஆக்குத்திசுவிலிருந்து உருவாகிறது)

3. வாஸ்குலத் திசுத்தொகுப்பு (Vascular tissue system (புரோகேம்பியத்திலிருந்து உருவாகிறது ) 

உங்களுக்குத் தெரியுமா?

திசு அமைப்பியல் (HISTOLOGY):

(கிரேக்கம் ஹிஸ்டாஸ் - வலை, லோகஸ் - அறிவியல்)

நுண்ணோக்கியின் உதவியுடன் திசுக்கள், அவற்றின் அமைப்பு கட்டமைப்பு ஆகியவற்றை உற்றுநோக்கும் படிப்பு ஆகும்.


 

உங்களுக்குத் தெரியுமா? 

சின்சைட் (SYNCYTE) :

செல்கள் ஒன்றாக இணைந்து உண்டாவது  சின்சைட் (கூட்டுசெல்) எனப்படும்.

எடுத்துக்காட்டு :சைலக்குழாய்கள் (இறந்த சின்சைட்) சல்லடை குழாய் (உயிருள்ள சின்சைட்).



 




11th Botany : Chapter 9 : Tissue and Tissue System : Introduction to Tissue System, Types and Characteristics of tissue System in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது தாவரவியல் : அலகு 9 : திசு மற்றும் திசுத்தொகுப்பு : அறிமுகம்,வகைகள் மற்றும் பண்புகள் - திசுத்தொகுப்பு - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது தாவரவியல் : அலகு 9 : திசு மற்றும் திசுத்தொகுப்பு