தாவரவியல் - தொல்லுயிர் தாவரங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம் - தமிழ்நாடு | 11th Botany : Chapter 2 : Plant Kingdom
தொல்லுயிர் தாவரங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவக்கரை கிராமத்தில் "தேசியக் கல்மரப் பூங்கா" (National Wood Fossil Park) அமைந்துள்ளது. இங்கு ஏறக்குறைய 20 மில்லியன் ஆண்டுகளுக்கும் முன்பு வாழ்ந்து மடிந்த மரக்கட்டைகளின் எச்சங்கள் (Petrified wood fossils) உள்ள ன. 'உரு பேரினம்' (Form genera) என்ற சொல் தொல்லுயிர் எச்சத்தாவரங்களுக்கு பெயர் சூட்டப் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் தொல்லுயிர் எச்சங்கள் முழுத் தாவரங்களாகக் கிடைப்பதில்லை. பதிலாக அழிந்தபோன தாவரப் பகுதிகள், உறுப்புகள் சிறுசிறு துண்டுகளாகவே பெறப்படுகின்றன. ஷிவாலிக் தொல்லுயிர்ப் பூங்கா - ஹிமாச்சல பிரதேசம், மாண்ட்லா தொல்லுயிர்ப் பூங்கா-மத்தியப்பிரதேசம், இராஜ்மஹால் குன்றுகள் - ஜார்கண்ட், அரியலூர் பூங்கா - தமிழ்நாடு ஆகியவை நம் நாட்டில் காணக்கூடிய சில முக்கியத் தொல்லுயிர் எச்சம் மிகுந்த பகுதிகளாகும். பலவகைத் தாவர வகுப்புகளைச் சார்ந்த சில தொல்லுயிர் எச்சங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
பாசிகள் - பேலியோபொரல்லா,
டைமார்ஃபோசைஃபான் பிரையோஃபைட்கள் - நயடைட்டா, ஹெப்பாட்டிசைட்டிஸ்,
மஸ்ஸைடஸ்
டெரிடோஃபைட்கள் - குக்சோனியா, ரைனியா, பாரக்வாங்கியா, கலமைட்டஸ்
ஜிம்னோஸ்பெர்ம்கள் - மெடுல்லோசா, லெப்பிடோகார்பான், வில்லியம் சோனியா, லெப்பிடோடெண்ட்ரான்
ஆஞ்சியோஸ்பெர்ம்கள் - ஆர்க்கியாந்தஸ், ஃபார்குலா
பேரா பீர்பல் ஸானி (1891-1949)