அணு அமைப்பு | அலகு 12 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - வேதிச் சேர்மங்களுக்குப் பெயரிடும் முறை | 8th Science : Chapter 12 : Atomic Structure
வேதிச் சேர்மங்களுக்குப் பெயரிடும் முறை
ஒன்றிற்கு மேற்பட்ட தனிமங்கள் வேதிப்பிணைப்பில் ஈடுபட்டு உருவாகக்கூடிய
பொருள்களே வேதிச் சேர்மங்கள் ஆகும். இச் சேர்மங்களின் பண்புகள் அவற்றிலுள்ள தனிமங்களின்
பண்புகளிலிருந்து மாறுபடுகின்றன. இச்சேர்மங்களுக்குப் பெயரிடும்போது ஒருசில வழிமுறைகள்
பின்பற்றப்படுகின்றன. அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1. உலோகம் மற்றும் அலோகம் ஆகிய இரண்டும் கலந்த சேர்மத்தின் பெயரினை
எழுதும்போது உலோகத்தின் பெயரினை முதலிலும் அலோகத்தின் பெயரினை அடுத்ததாகவும் எழுதவேண்டும்.
அலோகத்தின் பெயருடன் 'ஐடு' என்ற பின்னொட்டைச் சேர்த்து எழுதவேண்டும்.
உதாரணம்
NaCl - சோடியம் குளோரைடு
AgBr - சில்வர் புரோமைடு
2. உலோகம், அலோகம் மற்றும் ஆக்சிஜன் கலந்த பெயரினை எழுதும்போது
சேர்மத்தின் உலோகத்தின் பெயரினை முதலிலும் அலோகத்தின் பெயரினை அடுத்ததாகவும் எழுதவேண்டும்.
அலோகத்தின் பெயருடன் 'ஏட்' (ate) என்ற பின்னொட்டையோ (அதிக அளவில் ஆக்சிஜன் அணுக்கள்
இருந்தால்) அல்லது 'ஐட்' (ite) என்ற பின்னொட்டையோ (குறைந்த அளவில் ஆக்சிஜன் அணுக்கள்
இருந்தால்) சேர்த்து எழுதவேண்டும்.
உதாரணம்
Na2SO4 - சோடியம் சல்பேட்
NaNO2 - சோடியம் நைட்ரைட்
3. இரு சேர்மங்களுக்குப் அலோகங்களை மட்டும் கொண்ட பெயரிடும்போது
அலோகங்களின் பெயருக்கு முன்னொட்டாக மோனோ, டை, டிரை, டெட்ரா, பெண்டா... என்பவற்றைச்
சேர்த்து எழுதவேண்டும்.
உதாரணம்
SO2 - சல்பர் டைஆக்சைஞ
N2O5 - டைநைட்ரஜன் பென்டாக்சைடு
செயல்பாடு 4
வேதிச்
சேர்மங்களின் பெயர்களை எழுதுக.