அணு அமைப்பு | அலகு 12 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - தாம்சனின் அணு மாதிரி | 8th Science : Chapter 12 : Atomic Structure
தாம்சனின் அணு மாதிரி
எலக்ட்ரான்களின் கண்டுபிடிப்புக்குப் பிறகு ஜே. ஜே. தாம்சன் என்ற இங்கிலாந்து நாட்டு அறிவியல் அறிஞர் 1904ம் ஆண்டு தனது அணுக் கொள்கையை வெளியிட்டார்.
அணுவின் வடிவமானது, 10மீ ஆரமுடைய கோளத்தை ஒத்துள்ளது என்று தாம்சன் கருதினார். எதிர்மின்
சுமையுடைய துகள்கள் நேர்மின் சுமையுடைய கோளத்தில் புதைந்து காணப்படுகின்றன. எனவேதான்
ஒரு அணுவானது நடுநிலைத் தன்மையுடன் உள்ளது என்றும் அவர் கருதினார். தாம்சனின் மாதிரியானது
பிளம் புட்டிங் மாதிரி (Plum Pudding Model) அல்லது தர்பூசணிப்பழ மாதிரி (Water
Melon Model) எனவும் அழைக்கப்படுகிறது. விதைகள் எலக்ட்ரான்களாகவும் சதைப்பகுதியானது
தர்பூசணிப் பழத்திலுள்ள எதிர்மின்சுமையுடைய சிவப்பு நிற அதிலுள்ள நேர்மின் சுமையுடைய
புரோட்டான்களாகவும் கருதப்படுகின்றன. மேலும், அணுவின் நிறையானது அணு முழுவதும் சமமாகப்
பரவியிருப்பதாகக் கருதப்பட்டது.
தாம்சன்
அணு மாதிரியின் வரம்புகள்
தாம்சன் அணு மாதிரியானது அணுவின் நடுநிலைத் தன்மையை விளக்குகிறது.
ஆனால், கீழ்க்கண்டவற்றிற்கான சரியான விளக்கங்களை அதனால் தர இயலவில்லை.
1. நேர்மின்னூட்டம் பெற்ற கோளம் எவ்வாறு எதிர்மின்னூட்டம் பெற்ற எலக்ட்ரான்களை மின் நடுநிலைத் தன்மை ஈர்த்து அடைவதிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்கிறது என்பதை விளக்க முடியவில்லை.
2. இந்த அணு மாதிரியானது புரோட்டான்கள் மற்றும் எலக்ட்ரான்களைப் பற்றி மட்டும் விவரிக்கிறது. நியூட்ரான்களைப் பற்றிக் கூறவில்லை.