Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | கீழ்க்கண்ட வினாக்களுக்கு விரிவான விடையளி

ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் | வரலாறு | சமூக அறிவியல் - கீழ்க்கண்ட வினாக்களுக்கு விரிவான விடையளி | 9th Social Science : History: Colonialism in Asia and Africa

   Posted On :  06.09.2023 10:20 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம்

கீழ்க்கண்ட வினாக்களுக்கு விரிவான விடையளி

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் : கீழ்க்காண்பனவற்றிற்கு விரிவான விடையளி.

VI. விரிவாக விடையளிக்கவும்

1 இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியின் பொருளாதாரத் தாக்கத்தை

விவாதிக்கவும்.

விடை:  

ஆங்கிலேய ஆட்சியின் பொருளாதார தாக்கம்

வேளாண்மைச் சூழல் :

) நிரந்தர நிலவரித் திட்டம் :

காரன்வாலிஸ் பிரபு

இந்தியாவில் முதன் முறையாக ஜமீன்தார்கள் என்ற பெயரில் நிலப்பிரபுக்கள் என்னும் வர்க்கத்தார் உருவாக்கப்பட்டனர். இவர்கள் நில உரிமையாளர்களாக சொத்துக்களை மற்றவர்களுக்கு விற்க, வாரிசாக நிலங்களைப்பெற உரிமை பெற்றனர். விவசாயிகள் வெறும் குத்தகைதாரர்களாக மாற்றப்பட்டனர்.

வங்காளம், பீகார், ஓடிசா பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தீர்வு நிரந்தர நிலவரித்திட்டம் என அழைக்கப்பட்டது.

) ரயத்துவாரி முறை :

தென்னிந்தியாவில் அறிமுக செய்யப்பட்ட வித்தியாசமான நிலவருவாய் வரி முறை ரயத்துவாரி முறை எனப்பட்டது.

தனி நபருக்குச் சொந்தமான நிலங்கள் பதிவு செய்யப்பட்டன. நிலங்களை விற்கவும், அடகு வைக்கவும், குத்தகைக்கு விடவும், நிலத்தின் மீதான உரிமையை வேறொருவருக்கு வழங்கவும் விவசாயி உரிமை பெற்றிருந்தார். நிலவரி செலுத்தத் தவறினால் நிலத்திலிருந்து வெளியேற்றப்படுவதோடு, அவருக்குச் சொந்தமான கால்நடைகளையும், பிற உடைமைகளையும் அரசு பறிமுதல் செய்து கொள்ளலாம்.

நிலவரி வருவாயும், விவசாயிகள் வறுமைக்கு ஆளாக்கப்படுதலும்

) நிலவரி :

ஆங்கிலேயரின் வருவாய்க்கு முக்கிய ஆதாரமாக திகழ்ந்த நிலவரி பலவந்தமான முறைகளில் வசூல் செய்யப்பட்டது.

) வட்டிக்கடைக்காரர்கள் :

அரசாங்கம் கடன் வசதிகள் செய்து தராததால் விவசாயிகள் வட்டிக்கடைக்காரர்களையே சார்ந்திருந்தனர். வறட்சி, வெள்ளம், பஞ்சம் போன்ற காலங்களில் வட்டிக்குக் கடன் வழங்குவோரின் தயவையே நம்பியிருந்தனர்.

) வேளாண்மை வணிகமயமாக்கல் :

காலனியரசுவேளாண்மையை வணிகமயமாக்கும்கொள்கையைப் பின்பற்றியது. வணிகப் பயிர்களான பருத்தி, சணல், வேர்க்கடலை, எண்ணெய் வித்துக்கள், கரும்பு, புகையிலை ஆகியன சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப லாபகரமான விலையைப் பெற்றிருந்தன. விவசாயி சந்தையின் விலை நிலவரங்களைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை உருவாகியது.

நீர்பாசனம் :

ஆங்கிலேயர்கள் 19ம் நூற்றாண்டின் முதல் பாதி காலப்பகுதியில் நீர்ப்பாசனத்தைப் புறக்கணித்தனர்.

பஞ்சங்கள் :

ஆங்கிலேயரின் சுதந்திர வணிகக் கொள்கையும், கடுமையான வள வசூல் முறையும் பஞ்சங்கள் தோன்றுவதற்கு வழியமைத்துக் கொடுத்தன. (ஓடிசா பஞ்சம் - 1866 - 67, மிகப்பெரும் பஞ்சம் - 1876 - 78)

 

2. ஆப்பிரிக்காவில் காலனி ஆதிக்கம் ஏற்பட்டதை விவரி.

விடை:  

ஆப்பிரிக்கா காலனியாதல் :

ஐரோப்பிய சக்திகள் ஆப்பிரிக்காவின் மீது படையெடுத்து, கைப்பற்றியக் காலனிகளை ஏற்படுத்திய ஏகாதிபத்திய சகாப்தமானது (1881-1914) ஆப்பிரிக்காவைப் பங்கிடுதல் அல்லது ஆப்பிரிக்கப் போட்டி என அழைக்கப்படுகிறது.

• 1875க்கு முன்னர் சகாராவிற்கு தெற்கேயிருந்த ஆப்பிரிக்கப் பகுதிகள் பெரும்பாலும் வெளியுலகத்தினரால் அறிப்படாமலே இருந்தனர்.

தென் ஆப்பிரிக்கா :

ஆங்கிலேயர் பகுதிகள் - நேட்டால், கேப் காலனி,

டச்சுக்காரர் (உள்நாட்டில் போயர்) பகுதிகள் - டிரான்ஸ்வால், சுதந்திர ஆரஞ்சு நாடு.

• 1886ல் டிரான்ஸ்வாலில் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டவுடன் பிரிட்டிஷ் சுரங்க வல்லுனர்கள் பெரும் எண்ணிக்கையில் ஜோகன்னஸ் பார்க் மற்றும் அதன் சுற்றப்புறங்களில் குடியேறத் தொடங்கினர். போயர் அவர்களைக் கண்டு அச்சம் கொண்டு அவர்களை வெறுத்தனர். அந்நியர் என்றே அழைத்தனர்.

கேப் காலனியின் பிரதமர் டிரான்ஸ்வாலுக்கு வடக்கே ஆங்கிலேயரின் விரிவாக்கத்தை ஊக்குவித்தனர். இது ஆங்கிலேயருக்கும் போலருக்கும் இடையிலான உறவை சீர்குலைத்தது. இதனால் போயர் போர்கள் நடைபெற்றன. 26000 போயர் மக்கள் உணவு, படுக்கை, மருத்துவ வசதி, சுகாதார வசதி பற்றாக்குறை காரணமாக மரணமடைந்தனர்.

• 1909ல் நான்கு நாடுகளும் ஒன்றாக இணைவதற்கு ஒப்புக்கொண்டதால் தென்னாப்பிரிக்கா என்ற நாடு உதயமானது.

ரொடிசியா :

• 1889ல் உருவாக்கப்பட்ட பிரிட்டிஷ் தென் ஆப்பிரிக்கா கம்பெனியின் வெள்ளையினக் குடியேறிகளுக்குப் பண்ணை நிலங்கள் வழங்கப்பட்டன. இருப்புப்பாதைப் போக்குவரத்தும் தந்தி முறையும் மேம்படுத்தப்பட்டன. இக்குடியேற்றம் பின்னர் சிசில் ரோட்ஸ் பெயரால் ரொடீசியா என அழைக்கப்பட்டது

மேற்கு ஆப்பிரிக்கா:

ஆங்கிலேயர் :

• 1854ல் கோல்டு கோஸ்டில் அமைந்துள்ள கடற்கரைப் பகுதி அரசுகள் ஆங்கிலேயரின் காலனியானது நைஜீரியா அடிமைச் சந்தையாகப் பயன்பட்டது.

1886ல் உருவாக்கப்பட்ட ராயல் நைஜர் கம்பெனி 1900ல் ஆங்கிலேய அரசால் எடுத்துக்கொள்ளப்பட்டது.

பிரெஞ்சுக்காரர்:

செனிகல் பிரான்சின் தளமாக இருந்து வந்தது

பின்னர் கினியா, ஜவரி கோஸ்ட், டகோமெஸ் ஆகிய சகாராவுக்கு தெற்கேயுள்ள பகுதிகளோடு இணைக்கப்பட்டன.

கிழக்கு ஆப்பிரிக்கா

ஆங்கிலேயர் :

ஜான்ஜிபார் சுல்தானுக்குச் சொந்தமான பகுதிகள் இங்கிலாந்தின் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியால் நிரிவகிக்கப்பட்டது.

ஜெர்மனியர் :

ஜெர்மானிய கிழக்கு ஆப்பிரிக்கா என பின்னர் உருவான பகுதியில் தங்கள் ஆட்சியை நிறுவினர். ஆப்பிரிக்ர்கள் ஜெர்மானியர்களால் பொருளாதார சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டனர்.

போர்த்துகீசியரின் அங்கோலா மற்றும் மொசாம்பிக் :

போர்த்துகீசியர் 16ஆம் நூற்றாண்டிலிருந்தே கினியாவை பயன்படுத்தி வந்தனர்.1870க்குப் பின்னர் போர்த்தக்கீசியர் பெரும் எண்ணிக்கையில் தென் ஆப்பிரிக்காவின் மேற்கு, கிழக்குப் பகுதிகளில் அமைந்திருந்த அங்கோலா, மொசாம்பிக் பகுதிகளில் குடியேறினர்.

 

வரலாற்றுடன் வலம் வருக

மாணவர்களுக்கான செயல்பாடுகள்

1. இந்தியாவில் ஆங்கிலேயக் காலனியாதிக்கதின்போது பஞ்சங்களால் பாதிக்கப்பட்ட பல பகுதிகள் பற்றிய புகைப்படங்களைச் சேகரித்துப் படத்தொகுப்பு ஒன்றைத் தயார் செய்யவும்.

 2. இந்தியாவிற்கும் தென்கிழக்கு ஆசியாவிற்கும் இடையிலான கலாச்சார தொடர்புகள் பற்றி விவரிக்கவும்.

ஆசிரியர் வழிகாட்டுதலுடன் ஒப்படைப்பு:

1. இந் தியாவில் ஆங்கிலேய ஆட்சியின் நன்மைகள், தீமைகள் குறித்து வகுப்பறையில் ஒரு வாதத்தை நடத்த ஏற்பாடு செய்யவும்.

2. ஆங்கிலேய - பர்மாவில் காலனி ஆதிக்கத்தின் தாக்கத்தை ஆராய்க.

 

மேற்கோள் நூல்கள்

1. Irfan Habib, A People's History of India Se ries - Indian Economy under Early British

Rule, 1757-1857, Tulika.

 2. Irfan Habib, Essays In Indian History, Manohar

3. Irfan Habib, Indian Economy, 1858-1914, Tulika

4. D.G.E. Hall, A History of Southeast Asia, Macmillan

5. R.D. Cornwell, World History in the Twen tieth Century, Longman, 1980.

 

இணையத் தொடர்புகள்

1. https://www.ukessays.com(The Political Economy: Decolonisation in India)

2. http://www.seasite.niu.edu/crossroads/wilson/colonialism.htm (Constance Wilson, Colonialism and Nationalism in Southeast Asia)

Tags : Colonialism in Asia and Africa | History | Social Science ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் | வரலாறு | சமூக அறிவியல்.
9th Social Science : History: Colonialism in Asia and Africa : Answer in detail Colonialism in Asia and Africa | History | Social Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் : கீழ்க்கண்ட வினாக்களுக்கு விரிவான விடையளி - ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் | வரலாறு | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம்