Home | 6 ஆம் வகுப்பு | 6வது தமிழ் | கவிதைப்பேழை: ஆசாரக்கோவை

பெருவாயின் முள்ளியார் | பருவம் 2 இயல் 2 | 6 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: ஆசாரக்கோவை | 6th Tamil : Term 2 Chapter 2 : Paadarinthu ollukudal

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2 : பாடறிந்து ஒழுகுதல்

கவிதைப்பேழை: ஆசாரக்கோவை

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2 : பாடறிந்து ஒழுகுதல் : கவிதைப்பேழை: ஆசாரக்கோவை - பெருவாயின் முள்ளியார் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் இரண்டு

கவிதைப்பேழை

ஆசாரக்கோவை



நுழையும்முன்

நல்லொழுக்கமே நல்ல மனிதர்களை உருவாக்கும். நாம் ஒழுக்க நெறிகளை அறிந்தால்தான் அவற்றைப் பின்பற்றி நல்வாழ்வு வாழ முடியும். இந்த நோக்கத்திற்காகவே நம் முன்னோர் அற நூல்களைப் படைத்தனர். நாம் பின்பற்ற வேண்டிய நற்பண்புகனை அறநூல்கள் விளக்குகின்றன. அவற்றை அறிவோம் வாருங்கள்.

நன்றியறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு

இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு

ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை

நல்லினத் தாரோடு நட்டல் - இவையெட்டும்

சொல்லிய ஆசார வித்து

- பெருவாயின் முள்ளியார்

 

சொல்லும் பொருளும்

நன்றியறிதல் – பிறர் செய்த உதவியை மறவாமை

ஒப்புரவு - எல்லோரையும் சமமாக பேணுதல்

நட்டல் - நட்புக் கொள்ளுதல்

பாடலின் பொருள்

பிறர் செய்த உதவியை மறவாதிருத்தல்; பிறர் செய்யும் தீமைகளைப் பொறுத்துக் கொள்ளுதல்; இனிய சொற்களைப் பேசுதல்; எவ்வுயிர்க்கும் துன்பம் செய்யாதிருத்தல்; கல்வி அறிவு பெறுதல்; எல்லோரையும் சமமாகப் பேணுதல்; அறிவுடையவராய் இருத்தல்; நற்பண்புகள் உடையவரோடு நட்புக் கொள்ளுதல் ஆகிய எட்டும் நல்லொழுக்கத்தை விதைக்கும் விதைகள் ஆகும்.

நூல் வெளி

ஆசாரக்கோவையின் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார். இவர் பிறந்த ஊர் கயத்தூர். ஆசாரக்கோவை என்பதற்கு நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு என்பது பொருள். இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இந்நூல் நூறு வெண்பாக்களைக் கொண்டது.

Tags : by Peruvaen mulliyar | Term 2 Chapter 2 | 6th Tamil பெருவாயின் முள்ளியார் | பருவம் 2 இயல் 2 | 6 ஆம் வகுப்பு தமிழ்.
6th Tamil : Term 2 Chapter 2 : Paadarinthu ollukudal : Poem: AsaraKovai by Peruvaen mulliyar | Term 2 Chapter 2 | 6th Tamil in Tamil : 6th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2 : பாடறிந்து ஒழுகுதல் : கவிதைப்பேழை: ஆசாரக்கோவை - பெருவாயின் முள்ளியார் | பருவம் 2 இயல் 2 | 6 ஆம் வகுப்பு தமிழ் : 6 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2 : பாடறிந்து ஒழுகுதல்