தாயுமானவர் | பருவம் 3 இயல் 2 | 6 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: பராபரக் கண்ணி: கேள்விகள் மற்றும் பதில்கள் | 6th Tamil : Term 3 Chapter 2 : Ellarum enbura
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1.
தம் + உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) தம்முயிர்
ஆ) தமதுயிர்
இ) தம் உயிர்
ஈ) தம்முஉயிர்
[விடை : அ) தம்முயிர்]
2.
இன்புற்று + இருக்க என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) இன்புற்றிருக்க
ஆ)இன்புறுறிருக்க
இ) இன்புற்று இருக்க
ஈ) இன்புறு இருக்க
[விடை : அ) இன்புற்றிருக்க]
3.
'தானென்று'
என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) தானெ +
என்று
ஆ) தான் +
என்று
இ) தா +
னென்று
ஈ) தான் +
னென்று
[விடை : ஆ) தான் + என்று]
4.
'சோம்பல்'
என்னும் சொல்லுக்குரிய பொருத்தமான எதிர்ச்சொல்
அ) அழிவு
ஆ) துன்பம்
இ) சுறுசுறுப்பு
ஈ) சோகம்
[விடை : இ) சுறுசுறுப்பு]
நயம் அறிக
பராபரக்கண்ணி பாடலில் இடம் பெற்றுள்ள எதுகை,
மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.
விடை
பராபரக்கண்ணி பாடலில் இடம் பெற்றுள்ள எதுகை, மோனைச் சொற்கள் :
எதுகை :
தம் உயிர்போல் – செம்மையருக்கு
அன்பர்பணி – இன்பநிலை
எல்லாரும் – அல்லாமல்
மோனை :
அன்பர்பணி – இன்பநிலை, தம்உயிர்போல் – தண்டருள்
எல்லாரும் – அல்லாமல், இன்புற்று – இருக்க
அல்லாமல் – அறியேன்
குறுவினா
1.
யாருக்குத் தொண்டு செய்ய வேண்டும்?
விடை
அனைத்து உயிர்களையும் தம் உயிர்போல் கருதும் கருணை மிகுந்த சான்றோர்க்குத் தொண்டு செய்ய வேண்டும்.
2.
இன்பநிலை எப்போது வந்து சேரும்?
விடை
அன்பர்களுக்குத் தொண்டு செய்பவராகத் தன்னை ஆக்கிவிட்டால் போதும். இன்பநிலை தானே வந்து சேரும்.
சிறுவினா
பராபரக்கண்ணியில் தாயுமானவர் கூறுவன யாவை?
விடை
(i) அனைத்து உயிர்களையும் தம் உயிர்போல் கருதும் கருணை மிகுந்த சான்றோர்க்குத் தொண்டு செய்ய வேண்டும்.
(ii) அன்பர்களுக்குத் தொண்டு செய்பவராகத் தன்னை ஆக்கிவிட்டால் போதும். இன்பநிலை தானே வந்து சேரும்.
(iii) எல்லாரும் இன்பமாக வாழவேண்டும். அதைத்தவிர, வேறு எதையும் நினைக்கமாட்டேன்.
சிந்தனைவினா
குளிரால் வாடுபவர்களுக்கு நீங்கள் எவ்விதம் உதவுவீர்கள்?
விடை
குளிரால் வாடுபவர்களுக்குப் போர்வை தருவேன். வீட்டில் தேவைக்கு அதிகமாக உள்ள . போர்வையைத் தருவேன். இல்லையெனில், புதிய போர்வை வாங்கித் தருவேன். அரசாங்கத்தால் நடத்தப்படும் இலவச ஆதரவற்றோர்க்கான இல்லங்களில் தங்க வைப்பேன்.
கற்பவை கற்றபின்
1.
உங்கள் வீட்டில் வளர்க்கும் உயிரினங்கள் பற்றிக் கூறுக.
விடை
எங்கள் வீட்டில் வளர்க்கும் உயிரினங்கள் :
(i) எங்கள் வீடு வயல்கள் சூழ்ந்த கிராமத்தில் உள்ளது. என் வீட்டில் ஆடு, மாடு, கோழி, நாய், பூனை ஆகிய உயிரினங்கள் வளர்க்கப்படுகின்றன. நாங்கள் நாய், பூனை ஆகியவற்றைக் கட்டிப்போட மாட்டோம்.
(ii) அவற்றைச் சுதந்திரமாக விளையாட விடுவோம். நாய்க்கும் பூனைக்கும் ஆகாது என்று கூறுவார்கள். ஆனால் எங்கள் வீட்டில் இவையிரண்டும் சேர்ந்தே விளையாடும்.
(iii) அதேபோல் ஆடு, மாடுகளையும் எங்கள் வீட்டில் ஒருவராகத்தான் பார்த்துக் கொள்வோம். நேரத்திற்கு உணவளித்தல், தண்ணீர் கொடுத்தல், போன்றவற்றை மனமுவந்து அன்போடு செய்வோம்.
2.
நீங்கள் பிறர் மகிழும்படி செய்த நிகழ்வுகளைக் கூறுக.
விடை
(i) என் வீட்டிற்கருகில் ஐந்தாறு நாய்க்குட்டிகள் கேட்பாரற்று இருந்தன. அவற்றின் தாய் எங்கு சென்றதென தெரியவில்லை. அதனால் அவற்றிற்குக் கொஞ்சம் பாலை ஊற்றி பத்திரமாகப் பார்த்துக் கொண்டேன். பிறகு Blue Cross அமைப்பிற்குத் தொடர்பு கொண்டு அவற்றை அவர்களிடம் ஒப்படைத்து விட்டேன்.
(ii) ஒருநாள் பள்ளியில் இருந்து வந்தபோது என் அம்மா உடல்நிலை சரியில்லாமல் படுத்துக் கொண்டிருந்தார். அவருக்குத் தேநீர் வைத்துக் கொடுத்தேன். பிறகு மருத்துவரிடம் அழைத்துச் சென்றேன்.
(iii) மழைக்காலத்தில் ஒருநாள் சாலையில் கழிவுநீர் கால்வாய் திறந்திருப்பதைப் – பார்த்தேன். உடனே, மாநகராட்சி அலுவலகத்திற்குத் தெரியப்படுத்தி அதனைச் சரி செய்ய ஏற்பாடு செய்தேன். இவையெல்லாம் என்னைப் பலர் போற்றும்படி நான். செய்த செயல்கள் ஆகும்.