Home | 6 ஆம் வகுப்பு | 6வது தமிழ் | மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்

பருவம் 3 இயல் 2 | 6 ஆம் வகுப்பு தமிழ் - மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள் | 6th Tamil : Term 3 Chapter 2 : Ellarum enbura

   Posted On :  03.07.2023 08:08 am

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 2 : எல்லாரும் இன்புற

மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 2 : எல்லாரும் இன்புற : மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மொழியை ஆள்வோம்

 

 

கேட்க

தத்துவப் பாடல் ஒன்றைக் கேட்டு மகிழ்க.

 

பேசுக

விடை

உங்கள் பகுதிகளில் செயல்படும் தொண்டு நிறுவனங்கள் குறித்துப் பேசுக.

அவையோர்க்கு வணக்கம்நான் தொண்டு நிறுவனங்கள் பற்றிப் பேசவிருக்கிறேன்… இந்நிறுவனங்கள் சமூகத்தில் நிலவும் இன்னல்களைத் தீர்ப்பதற்கு ஏற்படுத்தப்பட்டவை ஆகும்மக்களுக்குப் பல வகைகளில் இவை உதவி புரிகின்றன.

முதலில் ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் பற்றிக் கூறுகிறேன்இது இந்திய அரசினால் நிறுவப்பட்ட சேவையாகும்இச்சேவை பாலர் கல்வி மற்றும் முதன்மையான சுகாதார பராமரிப்பு போன்றவற்றை ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களின் தாய்மார்களுக்கு வழங்குகிறதுஇச்சேவை அங்கன்வாடி மையங்கள் மூலம் மிகச் சிறப்பாக நடைபெற்றுவருகிறதுஇச்சேவை 1975 அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டதுநோய்த்தடுப்புகூடுதல் ஊட்டச்சத்துசுகாதார சோதனைபரிந்துரை சேவைகள்முன்பள்ளி அல்லாத முறையான கல்விஊட்டச்சத்து மற்றும் சுகாதார தகவல் ஆகிய சேவைகள் வழங்கப்படுகின்றன.

இதுபோன்று தனியார் சேவை நிறுவனங்களும் உள்ளனமாற்றுத்திறனாளிகளுக்கான சுயதொழில் தொடங்குவதற்கு உதவி செய்கின்றனமூக்குக் கண்ணாடி வழங்குதல்பெண்களுக்கான சுயதொழில் உதவிகல்விக்கான உதவிநலிவுற்றோருக்கான தற்செயல் நிவாரணம் அளித்தல் போன்ற சேவைகளை வழங்குகின்றனஒரு சில தொண்டு நிறுவனங்கள் இலவச மருத்துவ முகாம்இலவச கண் பரிசோதனை இரத்ததான முகாம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி ஏழை எளியோருக்கு உதவுகின்றன.

எங்கள் பகுதியில் உள்ள சமூக நிறுவனம் மரம் நடுவிழாநிழற்குடை அமைப்புபோன்றவற்றைச் செவ்வனே செய்து வருகின்றனஉடல் உறுப்பு தானம் செய்வது பற்றி விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்துகின்றனசுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற பல நன்மை தரும் அறச்செயல்களைச் செய்து இந்நிறுவனங்கள் மக்களுக்கு உதவிகள் புரிகின்றன.

 

படித்து மகிழ்க

அன்பினில் இன்பம் காண்போம்;

அறத்தினில் நேர்மை காண்போம்;

துன்புறும் உயிர்கள் கண்டால்;

துரிசறு கனிவு காண்போம்;

வன்புகழ் கொடையிற் காண்போம்;

வலிமையைப் போரில் காண்போம்;

தன்பிறப் புரிமை யாகத்

தமிழ்மொழி போற்றக் காண்போம்.

முத்தரையனார்மலேசியக் கவிஞர்,

 

குறிப்புகளைக் கொண்டு கதை எழுதுக.

நாய்க்குட்டி – குழிக்குள் - கத்தும் சத்தம் - முகிலன் - முதலுதவி - பால் - தூங்கியது - வாலாட்டியது,

விடை

குறிப்புகளைக் கொண்டு கதை எழுதுதல் :

முகிலன் ஒருமுறை வீட்டிலிருந்து வெளியே செல்லும்போது நாய்க்குட்டி ஒன்று கத்தும் சத்தம் கேட்டதுஎங்கிருந்து சத்தம் வருகிறது என்று சுற்றிச் சுற்றிப் பார்த்தான்சாலையோரத்தில் இருந்த குழிக்குள் நாய்க்குட்டி ஒன்று விழுந்து கிடந்ததுமேலே ஏறுவதற்கு இயலாததால் கத்திக் கொண்டிருந்ததுமுகிலன் அப்பள்ளத்தில் இறங்கி அந்நாய்க்குட்டியைத் தூக்கினான்.

அதற்கு முதலுதவி செய்தான்அதற்குக் கொஞ்சம் பால் ஊற்றினான்அந்நாய்க்குட்டி பாலைக் குடித்துவிட்டு சோர்வில் தூங்கியதுகொஞ்ச நேரத்தில் கண் விழித்துப் பார்த்ததுமுகிலனைப் பார்த்து வாலாட்டியதுஇக்கதையின் மூலம் உயிர்களிடத்தும் இரக்கம் காட்ட வேண்டும் என்பதை உணரலாம்.

 

அகராதியைப் பயன்படுத்தி பொருள் எழுதுக.

1. கருணை

2. அச்சம்

3. ஆசை

விடை

அகராதி :

1. கருணை – இரக்கம்

2. அச்சம் – பயம்

3. ஆசை – விருப்பம்

 

கீழ்க்காணும் பெயர்ச் சொற்களை அகரவரிசையில் எழுதுக.

பூனைதையல்தேனீஓணான்மான்வௌவால்கிளிமாணவன்மனிதன்ஆசிரியர்பழம்

விடை

அகரவரிசை :

1. ஆசிரியர்

2. ஓணான்

3. கிளி

4. தேனி

5. தையல்

6. பழம்

7. பூனை

8. மனிதன்

9. மாணவன்

10. மான்

11. வௌவால்.

 

பின்வரும் தொடர்களில் அடிக்கோடிட்ட சொற்கள் எவ்வகைப் பெயர்கள் என எழுதுக.

1. கைகள் இரண்டும் பிறர்க்கு உதவவே எனச் சான்றோர் கருதினர்.

விடை : கைகள் – சினைப்பெயர்

2. அறம்,பொருள்இன்பம்வீடு அடைதல் நூலின் பயனாகும்.

விடை  : அடைதல் – தொழிற்பெயர்.

3. குழந்தை தெருவில் விளையாடியது.

விடை : இடப்பெயர்

4. நீதிநூல் பயில் என்கிறார் பாரதியார்.

விடை : பொருட்பெயர்

5மாலை முழுதும் விளையாட்டு.

விடை : காலப்பெயர்

6. அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்,

விடை  : பண்புப்பெயர்

 

பின்வரும் தொடர்களில் உள்ள பெயர்ச்சொற்கள் எவ்வகைப் பெயர்கள் என எழுதுக.

1. விடியலில் துயில் எழுந்தேன்– விடியல் – காலப்பெயர்

2. இறைவனைக் கை தொழுதேன்– கை – சினைப்பெயர்

3. புகழ்பூத்த மதுரைக்குச் சென்றேன் –  மதுரை – இடப்பெயர்

4. புத்தகம் வாங்கி வந்தேன்– புத்தகம் – பொருட்பெயர்

5. கற்றலைத் தொடர்வோம் இனி– கற்றல் – தொழிற்பெயர்

6. நன்மைகள் பெருகும் நனி.  – நன்மைகள் – பண்புப்பெயர்

 

கீழ்க்காணும் தலைப்பில் கட்டுரை எழுதுக.

அறம் செய விரும்பு

 

 

மொழியோடு விளையாடு

 

 

கட்டங்களில் உள்ள வார்த்தைகளைக் கொண்டு தொடர்களை அமைக்க.


விடை

1. தீதும் நன்றும் பிறர்தர வாரா.

2. யாதும் ஊரே யாவரும் கேளிர்.

3. வாய்மையே வெல்லும்.

 

சொற்றொடரை முறையாக வரிசைப்படுத்துங்கள்

1. சிறைக் கோட்டத்தை அறக்கோட்டமாக மாற்றுமாறு மன்னனிடம் வேண்டினாள்.

2. மணிமேகலை மணிபல்லவத் தீவிற்குச் சென்றாள்.

3. சிறைச் சாலைக்குச் சென்று உணவிட்டான்.

4. அமுதசுரபியைப் பெற்றாள்.

5. அதிரையிடம் சென்று முதல் உணவைப் பெற்றாள்.

விடை

1. மணிமேகலை மணிபல்லவத் தீவிற்குச் சென்றாள்

2. அமுதசுரபியைப் பெற்றாள்.

3. ஆதிரையிடம் சென்று முதல் உணவைப் பெற்றாள்.

4. சிறைச்சாலைக்குச் சென்று உணவிட்டாள்.

5. சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக மாற்றுமாறு மன்னனிடம் வேண்டினாள்.

 

ஒலி வேறுபாடறிந்து வாக்கியத்தில் அமைத்து எழுதுக.

1. அரம் - அறம்

அரம்  கூர்மையான கருவி – இரும்பைத் தேய்த்துக் கூர்மையாக்குவதற்கு அரம் பயன்படும்.

அறம் – தர்மம் – பழந்தமிழர்கள் அறச்செயல்களில் சிறந்து விளங்கினர்.

 

2. மனம் – மணம்

விடை

மனம்  உள்ளம் – பிறருக்கு உதவி செய்வதற்கு மனம் வேண்டும்.

மணம்  வாசனை – மல்லிகை மணம் மிக்க மலர்.

 

இருபொருள் தருக.

(.கா.)

ஆறு – நதி

ஆறு – எண்

1. திங்கள்

திங்கள் – கிழமைமாதம்நிலவு

2. ஓடு 

ஓடு – ஓடுதல்வீட்டின் கூரையாகப் பயன்படுவது

3. நகை

நகை – அணிகலன்புன்னகை

 

புதிர்ச் சொல் கண்டுபிடி

1. இச்சொல் மூன்றெழுத்துச் சொல்உயிர் எழுத்துகள் வரிசையில் முதல் எழுத்து இச்சொல்லின் முதல் எழுத்துவல்லின மெய் எழுத்துகளின் வரிசையில் கடைசி எழுத்து இச்சொல்லின் இரண்டாம் எழுத்துவாசனை என்னும் பொருள்தரும் வேறு சொல்லின் கடைசி எழுத்து இச்சொல்லின் மூன்றாம் எழுத்துஅஃது என்ன?

விடை  : அறம்

 

கட்டத்தில் உள்ள சொற்களைக் கொண்டு தொடர்கள் உருவாக்குக.


விடை

1. மாலையில் விளையாடுவோம்.

2. பிறருக்கு உதவி புரிவோம்.

3. பெரியோரை வணங்குவோம்.

4. நூல்பல கற்போம்.

5. உடற்பயிற்சி செய்வோம்.

6. அதிகாலையில் எழுவோம்.

 

செயல்திட்டம்

1. நீங்கள் சேவை செய்ய விரும்பும் பணிகளைப் பட்டியலிடுக.

விடை

நாங்கள் சேவை செய்ய விரும்பும் பணிகள் :

(i) இலவசமாகக் கல்வி கற்பித்தல்.

(ii) ஊனமுற்றோர்க்கு உதவுதல்.

(iii) விடுமுறை நாட்களில் வரும் திருவிழா மற்றும் பண்டிகைக் காலங்களில் போக்குவரத்துக் காவலர்களுக்கு உதவுதல்.

(iv) வாரத்திற்கு ஒருமுறை நான் வசிக்கும் தெரு மற்றும் நகரை நண்பர்களுடன் சேர்ந்து சுத்தப்படுத்துதல்.

(v) சுற்றுச்சூழல் பாதுகாக்கும் வகையில் நெகிழிப் பயன்பாடுகளின் மூலம் வரும் தீமைகள் பற்றியும் மரங்களினால் வரும் நன்மைகள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்.

(vi) மக்களின் நலன்கள் மேம்படுவதற்கான செயல்களைச் செய்வேன்.

 

2. உயர்ந்த குறிக்கோனை அடைந்து வெற்றி பெற்ற சாதனையாளர்கள் தொகுப்பு ஒன்றைத் தயாரிக்க.

 

 

நிற்க அதற்குத் தக

 

என் பொறுப்புகள்

1. உணவை வீணாக்க மாட்டேன்.

2. நீரைச் சிக்களமாகப் பயன்படுத்துவேன்.

3. பயணம் செய்யும் போது தேவைப்படுவோருக்கு எழுந்து இடம் தருவேன்.

4. எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துவேன்.

 

கலைச்சொல் அறிவோம்

1. அறக்கட்டளை - Trust

2. தன்னார்வலர் - Volunteer

3. இளம் செஞ்சிலுவைச் சங்கம் Junior Red Cross

4. சாரண சாரணியர் - Scouts & Guides

5. சமூகப் பணியாளர் - Social Worker

 

இணையத்தில் காண்க

 

பொதுத்தொண்டு செய்யும் நிறுவனங்களின் பெயர்களை இணையத்தில் கண்டு திரட்டுக.

 


கற்பவை கற்றபின்  


கீழ்க்காணும் பத்தியைப் படித்து அதில் இடம் பெற்றுள்ள இடுகுறிகாரணப் பெயர்களை அறிந்து எழுதுக.

நீர் வற்றிப்போன குளத்தில் செந்தாமரைஆம்பல்கொட்டிநெய்தல் முதலான கொடிகளும் வாடியிருந்தனநீர் நிரம்பி இருந்தவரை ஊர் மக்களும்விலங்குகளும் மரங்கொத்திபோன்ற பறவைகளும் பயன்படுத்தி மகிழ்ந்த குணம் அதுகாலை நேரம் சூரியன் காய்ந்து கொண்டிருந்ததுஇப்போது அக்குளத்தைக் கண்டுகொள்வார் யாருமில்லை.

இடுகுறிப் பெயர் :

(i) குளம்

(ii) ஆம்ப ல்

(iii) கொட்டி

(iv) நெய்தல்

(v) சூரியன்

காரணப் பெயர் :

(i) மரங்கொத்தி

(ii) செந்தாமரை

Tags : Term 3 Chapter 2 | 6th Tamil பருவம் 3 இயல் 2 | 6 ஆம் வகுப்பு தமிழ்.
6th Tamil : Term 3 Chapter 2 : Ellarum enbura : Tamil Language Exercise - Questions and Answers Term 3 Chapter 2 | 6th Tamil in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 2 : எல்லாரும் இன்புற : மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள் - பருவம் 3 இயல் 2 | 6 ஆம் வகுப்பு தமிழ் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 2 : எல்லாரும் இன்புற