இளங்கோவடிகள் | பருவம் 1 இயல் 2 | 6 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை : சிலப்பதிகாரம்: கேள்விகள் மற்றும் பதில்கள் | 6th Tamil : Term 1 Chapter 2 : Iyarkai inbum
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. கழுத்தில் சூடுவது
அ) தார்
ஆ) கணையாழி
இ) தண்டை
ஈ) மேகலை
[விடை : அ) தார்]
2. கதிரவனின் மற்றொரு பெயர்
அ) புதன்
ஆ) ஞாயிறு
இ) சந்திரன்
ஈ) செவ்வாய்
[விடை : ஆ) ஞாயிறு]
3. வெண்குடை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) வெண் +
குடை
ஆ) வெண்மை +
குடை
இ) வெம் +
குடை
ஈ) வெம்மை +
குடை
[விடை : ஆ) வெண்மை + குடை]
4.' பொற்கோட்டு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) பொன் +
கோட்டு
ஆ) பொற் +
கோட்டு
இ) பொண் +
கோட்டு
ஈ) பொற்கோ +
இட்டு
[விடை : அ) பொன் + கோட்டு]
5. கொங்கு + அலர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) கொங்குஅலர்
ஆ) கொங்அலர்
இ) கொங்கலர்
ஈ) கொங்குலர்
[விடை : இ) கொங்கலர்]
6. அவன் + அளிபோல் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) அவன்அளிபோல்
ஆ) அவனளிபோல்
இ) அவன்வளிபோல்
ஈ) அவனாளிபோல்
[விடை : ஆ) அவனளிபோல்]
நயம் அறிக.
1. பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக
விடை
மாமழை – மேரு – மேல்
கொங்கு – காவேரி
2. பாடலில் இடம்பெற்றுள்ள எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக
விடை
திங்கள் – கொங்கு
மாமழை – நாம
குறுவினா
1. சிலப்பதிகாரக் காப்பியம் எவ்வெவற்றை வாழ்த்தித் தொடங்குகிறது?
விடை
சிலப்பதிகாரக் காப்பியம் திங்கள், ஞாயிறு, மாமழை ஆகியவற்றை வாழ்த்தித் தொடங்குகிறது.
2. இயற்கை போற்றத்தக்கது ஏன்?
விடை
(i) நாம் இயற்கையோடு இயைந்து வாழ்கிறோம். இயற்கை என்று சொல்லக்கூடிய சூரியன், சந்திரன், மழை இவையெல்லாம் நாம் வாழ்வதற்கு அடிப்படைத் தேவைகளைக் கொடுத்து உதவுகிறது.
(ii) சூரியன் ஒளியைத் தருவதால்தான் மரங்கள் வளர்கின்றது. இதனால் நமக்கு மழை பொழிகிறது. மழை நமக்கு உணவைக் கொடுக்கும்.
(iii) உணவாகவும் அமையும். இவையெல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. எனவே இயற்கை போற்றத்தக்கதாகும்.
சிந்தனைவினா
இயற்கையைப் போற்றும் வழக்கம் ஏற்படக் காரணமாக எவற்றைக் கருதுகிறீர்கள்?
விடை
‘கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே,
முன்தோன்றிய மூத்தகுடி தமிழ்க்குடி’
என்பது தமிழர்களின் நம்பிக்கையாகும். உண்மையில் கல்லும் மண்ணும் தோன்றிய பிறகே உயிரினங்கள் தோன்றின. யாராலும் தோற்றுவிக்கப்படாத இயற்கையோடு இணைந்த சமயமாகத் தமிழர் சமயம் விளங்கியது.
மாந்தர் தோன்றிய காலந்தொட்டு தன்னை விஞ்சும் ஆற்றல் இயற்கைக்கு இருந்ததை அறிந்திருந்தனர். இந்த ஆற்றல் தன்னை மீறி செயல்பட்டதை உணர்ந்தனர். அப்பேராற்றலைத் தனக்குத் துணையாகக் கொள்ள முயன்றனர்.
அதற்கான வழிமுறைகளே வழிபாட்டு முறைகள் ஆகும். அவ்வாற்றலைக் கடவுள் என்றோ இறைவன் என்றோ அழைக்கவில்லை. ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளாக இப்பேராற்றலான இயற்கையை வழிபட்டனர். தான் விரும்பும் அனைத்தையும் அவ்வாற்றலுக்குப் படைத்து மகிழ்வுற்றனர். படைக்கும் போது, தனக்கு உள்ள இடையூறுகளைக் கூறி அவைகளைக் களைந்தெறியுமாறு கேட்டுக்கொண்டனர்.
நாடோடிகளாய் வாழ்ந்திருந்த மக்களுக்குக் காளை, பசு, ஆடு, கோழி, நாய், பூனை ஆகிய நட்பு விலங்குகளைக் கடவுளுக்கு உதவியாளர்களாக இருப்பதாக நம்பினார்கள். கடவுளே இவ்வுலகைப் படைத்தார் என்றும் மாந்தர், உயிரினங்கள், விலங்குகள், வானம், வானத்திலுள்ள விண்மீன்கள், அண்டவெளி அனைத்தும் கடவுளால் படைக்கப்பட்டவை என்றும் எண்ணி அவற்றை வழிபடலாயினர். இவ்வுலகமானது நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம் என்ற ஐந்தும் உள்ளடக்கியது என உறுதிகொண்டனர்.
இயற்கையாய்த் தோன்றிய கதிரவனை முழுமுதற்கடவுளாக எண்ணி வழிபட்டனர் பிற்காலத்தில் தோன்றிய சமயங்கள் பலவும் கதிரவனையோ அல்லது அதன் உருவத்தையோ மையமாகக் கொண்டே தங்களது கடவுளைக் கண்டனர்.
மக்கள் தோன்றிய இடங்களானவை மலையும் மலைசார்ந்த இடமான குறிஞ்சி, காடும் காடு சார்ந்த இடமான முல்லை , வயலும் வயல் சார்ந்த இடமான மருதம், கடலும் கடல் சார்ந்த இடமான நெய்தல். இந்த நானிலங்களில் இருந்த மக்கள் அங்கங்கிருந்த உயிரினங்களையும் இயற்கையையும் வணங்கினர்.
படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என ஐந்தொழிலுக்கு அரசனாக விளங்கும் இறைவன். தொழிலுக்கு ஒன்றாக இந்த ஐம்பூதங்களையே ஊர்தியாகக் கொண்டு உலவுகிறான் என்றும் நம்பினர். இவ்வாறு இயற்கையைப் போற்றும் வழக்கம் ஏற்பட்டுள்ளது.
இறைவனும் இயற்கையும் வேறுவேறு அல்ல. இரண்டுமே ஒன்றுதான். ஒன்றோடு ஒன்றாகவும் ஒன்றுக்குள் ஒன்றாகவும் இருப்பவைதான் அவை. இறைவன் என்பது இயற்கையின் தாய் இயற்கை என்பது இறைவனின் வடிவங்களுள் ஒன்று என்பதை மெய்ப்பிக்கும் விதமாகவே நாம் இன்றும் சூரியன், சந்திரன், மழை நீர், போன்ற இயற்கையை வழிபடுகின்றோம்.
கற்பவை கற்றபின்
1. "வளர்பிறையும் தேய்பிறையும்' என்னும் தலைப்பில் பேசுக.
விடை
மாணவர்கள் வளர்பிறையும், தேய்பிறையும் பற்றி அறிந்து கொள்ளச் செய்தல்.
அவையோர்க்கு வணக்கம்! நான் வளர்பிறை, தேய்பிறை பற்றிப் பேசப் போகிறேன். வானில் நட்சத்திரக் கூட்டங்கள், நிலா, சூரியன், வியாழன், புதன், செவ்வாய் போன்ற பல கோள்களும் உள்ளன. கோள்கள் அனைத்தும் சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. இவற்றைச் சூரியக் குடும்பம் என்பர்.
நிலவானது அமாவாசை தினத்தன்று வானில் தெரியாது. பௌர்ணமி தினத்தன்று முழுநிலவாகக் காட்சியளிக்கும். அமாவாசைக்குப் பிறகு நிலவானது கொஞ்சம்கொஞ்சமாக வளர்ந்து முழுநிலவாகும். இவ்வாறு வளர்வதை வளர்பிறை என்போம். பின்பு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து ஒருநாள் கண்ணுக்கே தெரியாது. இவ்வாறு குறைவதைத் தேய்பிறை என்போம்.
சுப நிகழ்ச்சிகள் செய்வதற்கு வளர்பிறை நாட்களே உகந்தது என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை. இதனையே நாமும் பின்பற்றுகிறோம். பழங்காலத்தில் மின்சார விளக்குகள் இல்லாததால் சந்திரனின் ஒளியையே முதன்மையாகக் கொண்டு வாழ்ந்தனர். வளர்பிறை நாட்களில் செய்யும் செயல்கள் நிலவு வளர்வதைப் போல் வளரும் என்று நம்பினர்.
நிலவானது எப்போதும் ஒரே மாதிரிதான் இருக்கும். அது தேய்வதும் இல்லை. வளர்வதும் இல்லை. இதுவே அறிவியல் உண்மை. பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டும் சூரியனைச் சுற்றுவதற்கும் 365 நாட்கள் சூரியன் ஆகின்றன. சந்திரன் பூமியைச் சுற்றி வருவதற்கு 29 நாட்கள் ஆகின்றன. இவ்வாறு சுற்றும்போது சந்திரன் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் ஒரே நேர்க்கோட்டில் உள்ளபோது பௌர்ணமி என்று குறிப்பிடும் முழுநிலவு தோன்றும். பின்பு இது நாளுக்கு நாள் நகர்ந்துகொண்டே செல்லும் போது சந்திரனின் உருவம் நமக்கு மறைந்து கொண்டே வரும். இதனைத் தேய்பிறை என்கிறோம்.
இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து செல்லும் போது ஒருநாள் சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் ஒரே நேர்க்கோட்டில் பூமி இருக்கும். சூரியனின் ஒளி பூமி இடையில் இருப்பதால், மறைக்கப்படுகிறது. அதனால் நிலவு தெரியாது. அந்நாளே அமாவாசை என்று குறிப்பிடுவோம்.
நிலவுக்கு இயல்பாக ஒளிவிடும் தன்மை இல்லை. ஒளியின் ஆதாரமே சூரியன்தான். சூரியனிடமிருந்து பெரும் ஒளியையே சந்திரன் பெற்று ஒளி வீசுகிறது. அதனால்தான் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் இருக்கும் போது முழு நிலவைக் காண முடிகிறது. அமாவாசை தினத்தன்று சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி இருப்பதால் சூரிய ஒளி முழுமையாக மறைக்கப்படுகிறது. இச்சுழற்சியினால்தான் வளர்பிறையும் தேய்பிறையும் உருவாகிறது. நிலவு தேய்வதும் இல்லை. வளர்வதும் இல்லை.
2. நீங்கள் விரும்பும் இயற்கைப் பொருள்களின் பெயர்களைப் பட்டியலிடுக.
விடை
3. "நிலா" என்னும் தலைப்பில் நான்கு அடிகளில் கவிதை படைத்திடுக.
விடை
நீ பகலெல்லாம்
எங்கு செல்கிறாயோ?
இருளில் மட்டும் ஒளி வீசுகிறாய்!
உன் பெயரை உச்சரித்தாலே
மனதில் இன்பம் தவழ்கிறது
உன்னைப் பார்த்து வளர்ந்தவன் – நான்
உன்னைப் பார்க்கவே வளர்ந்தவன்
வா நிலவே வா ! கொஞ்சி விளையாட.