பருவம் 1 இயல் 2 | 6 ஆம் வகுப்பு தமிழ் - துணைப்பாடம்: கிழவனும் கடலும்: கேள்விகள் மற்றும் பதில்கள் | 6th Tamil : Term 1 Chapter 2 : Iyarkai inbum
மதிப்பீடு
'கிழவனும் கடலும்' என்னும் படக்கதையை உங்கள் சொந்த நடையில் கதையாக எழுதுக.
விடை
(i) சாண்டிய கோவயதில் முதிர்ந்தவர். பல நாட்கள் மீன்பிடிக்கச்சென்று மீன் கிடைக்காமல் கரையை அடைந்தவர். ஆனால் எண்பத்தைந்தாவது நாளில் ஒரு பெரிய மீன் கிடைக்கிறது. பலமணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு அதனைப் பிடிக்கிறார். அதையும் சுறாமீன்களிடமிருந்து காப்பாற்ற முடியாமல் தலையும் எலும்பும் மட்டுமே எஞ்சியது.
(ii) இவ்வளவு இடையூறுகள் ஏற்பட்டும் தன்னை யாரும் பழித்துப் பேசக்கூடாது என்பதில் உறுதியுடன் இருந்தார். தன்மானம் மிக்கவராகத் திகழ்ந்தார்.
(iii) சாண்டியாகோ விடா முயற்சியும், ஊக்கமும் ஒருங்கே பெற்றவர். தன்மானம்மிக்கவர்.
ஒரு வழியாகக் கரை சேர்ந்தார். இன்று நடந்த எல்லாவற்றையும் மனோலினுக்குச் சொல்ல வேண்டும் என்று எண்ணியபடி படகை இழுத்துக் கட்டினார். பிறகு படகோடு கட்டிய மீனைப் பார்த்தார். அது சுறாமீன்களால் உண்ணப்பட்டு அதன் தலையும் எலும்பும் தாம் மிஞ்சியிருந்தன.
சாண்டியாகோவைப் பார்க்க மனோலின் வந்தார். “அடேயப்பா! எவ்வளவு பெரிய மீன் அது! மீன் பிடிப்பதில் பெரிய வீரன் தாத்தா நீ!” என்றான் மனோலின். கிழவர் “நான் பிடித்த மீனைப் பார்த்தாயா?” கடைசியில் எலும்பும் தலையும்தான் மிச்சம்!” என்றார்.
மனோலின் “அதனால் என்ன தாத்தா? உன் திறமையும் விடாமுயற்சியும் வென்றுவிட்டதே! இனி உன்னை யாரும் பழித்துப் பேச முடியாது தாத்தா! உன்னிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. இனி நான் உன்னோடுதான் மீன் பிடிக்க வருவேன்” 9 என்று கூறினான். இக்கதை மூலம் நாம் உணர்வது ‘விடாமுயற்சி வெற்றியைத் தரும்’ என்பதாகும்.
கற்பவை கற்றபின்
1. கடல் காட்சி ஒன்றைப் படம் வரைந்து வண்ணம் தீட்டுக. அப்படத்திற்குப் பொருத்தமாக நான்கு வரிகளுக்குள் குறிப்பு எழுதுக.
விடை
படத்திற்கு பொருத்தமான தலைப்பு : கடல் வாழ் உயிரினங்கள்.
குறிப்பு : கடல் அலை – நண்டுகள் – மணல்வீடு – கடற்கரை மணல் – சூரியன் மறைதல்.
2. இக்கதையின்வழியாக நீங்கள் உணர்ந்தவற்றை வகுப்பில் பகிர்க.
விடை
படத்திற்கு பொருத்தமான தலைப்பு : கடல் வாழ் உயிரினங்கள்.
குறிப்பு : கடல் அலை – நண்டுகள் – மணல்வீடு – கடற்கரை மணல் – சூரியன் மறைதல்.(i) முயற்சி செய்வதற்கு வயது வேறுபாடு இல்லை. எவ்வயதினராக இருந்தாலும் விடா முயற்சியுடன் செயல்பட்டால் வெற்றி பெறலாம் என்பதை இக்கதை மூலம் உணரலாம்.
ii) எண்பத்து நான்கு நாட்கள் கிழவர் தினமும் கடலுக்குச் சென்று மீன் பிடிக்காமல் வந்தார். எண்பத்தைந்தாவது நாள் ஒரு பெரிய மீன் கிடைத்தது. அதனையும் எளிதில் அவரால் பிடிக்க இயலவில்லை. பல மணி நேரப் போராட்டத்திற்குப் பின்புதான் அதனையும் பிடிக்க முடிந்தது.
(iii) அந்த மீனையும் அவரால் முழுமையாக காப்பாற்ற முடியவில்லை சுறாமீன்களுக்கு இரையாக்கிவிட்டு தலையும் எலும்பும்தான் மிஞ்சியது. இவ்வளவு இடையூறுகள் ஏற்பட்டாலும் மனம் தளராமல் இருந்தார்.
(iv) இனிமேல் தன்னைப் பழித்துப் பேசமுடியாது என்று கூறினார். முயற்சி செய்து பயன் கிடைக்கவில்லை என்றாலும் உலகம் குறை கூறாது. ஆனால் முயற்சியே செய்யாமல் இருந்தால் பழிச் சொற்களைக் கேட்கும்படியதான சூழல் உண்டாகும்.
3. சாண்டியாகோ குறித்து உங்கள் கருத்து யாது?