பருவம் 1 இயல் 2 | 6 ஆம் வகுப்பு தமிழ் - வாழ்வியல்: திருக்குறள்: கேள்விகள் மற்றும் பதில்கள் | 6th Tamil : Term 1 Chapter 2 : Iyarkai inbum
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. மக்களுக்கு மகிழ்ச்சி தருவது
அ) ஊக்கமின்மை
ஆ) அறிவுடைய மக்கள்
இ) வன்சொல்
ஈ) சிறிய செயல்
[விடை : ஆ) அறிவுடைய மக்கள்]
2. ஒருவர்க்குச் சிறந்த அணி
அ) மாலை
ஆ) காதணி
இ) இன்சொல்
ஈ) வன்சொல்
[விடை : இ) இன்சொல்]
பொருத்தமான சொற்களைக் கொண்டு நிரப்புக.
1. இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்க் கவர்ந் தற்று
2. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு
நயம் அறிக.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்
இந்தக் குறளில் உள்ள எதுகை, மோனைச் சொற்களை எடுத்து எழுதுக
விடை
மோனை சொற்கள் :
செயற்கரிய செய்வார்
செயற்கரிய செய்கலா
எதுகை சொற்கள் :
செயற்கரிய செய்வார்
செயற்கரிய செய்கலா
இந்தக் குறளில் அடி மோனை, அடி எதுகை சொற்கள் வந்துள்ளது.
பின்வரும் செய்திக்குப் பொருத்தமான திருக்குறன் எது எனக் கண்டறிந்து எழுதுக.
2016 ஆம் ஆண்டு ரியோ நகரில் மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் கலந்துகொண்டார். உயரம் தாண்டுதல் போட்டியில் அவர் தங்கப் பதக்கம் பெற்றார். செய்தியாளர்கள் அவருடைய தாயிடம் நேர்காணல் செய்தனர். "என் மகனின் வெற்றி எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவனைப் பெற்ற பொழுதைவிட இப்போது அதிகமாக மகிழ்கிறேன்" என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.
அ) செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்
ஆ) ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்
இ) இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று
விடை: ஆ) ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
குறுவினாக்கள்
1. உயிருள்ள உடல் எது?
விடை
அன்பு இருப்பது தான் உயிருள்ள உடல், அன்பு இல்லாதவர்களின் உடல் வெறும் எலும்பும் தோலும்தான் என வள்ளுவர் கூறுகிறார்.
2. எழுத்துகளுக்குத் தொடக்கமாக அமைவது எது?
விடை
அகரமே எழுத்துகளுக்குத் தொடக்கமாக அமையும் என வள்ளுவர் கூறுகிறார். அன்பிலார்,
3. அன்பிலார், அன்புடையார் செயல்கள் யாவை?
அன்பிலார் : அன்பு இல்லாதவர்கள் உலகில் உள்ள எல்லா பொருள்களும் தனக்கே சொந்தம் எனக் கூறுவார்கள்.
அன்புடையார் : அன்பு உடையவர்கள் தம் உடம்பும் பிறர்க்கே சொந்தமென கூறுவார்கள்.