Home | 6 ஆம் வகுப்பு | 6வது தமிழ் | மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்

பருவம் 1 இயல் 2 | 6 ஆம் வகுப்பு தமிழ் - மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள் | 6th Tamil : Term 1 Chapter 2 : Iyarkai inbum

   Posted On :  23.06.2023 11:13 am

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 2 : இயற்கை இன்பம்

மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 2 : இயற்கை இன்பம் : மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மொழியை ஆள்வோம்


 

கேட்டும் கண்டும் அறிந்தும் மகிழ்க

1. இயற்கை சார்ந்த பாடல்கள்கதைகள்உரைகளைக் கேட்டு மகிழ்க.

விடை

இயற்கை சார்ந்த பாடல்கள்கதைகள்உரைகளை மாணவர்கள் தாங்களாகவே கேட்டு அறிந்துகொள்ளுதல் வேண்டும்.

2. பறவைகள்விலங்குகளின் வாழ்க்கை முறை பற்றிய காணொலிக் காட்சிகளைக் கண்டு மகிழ்க.

விடை

மாணவர்கள் பறவைகள்விலங்குகளின் வாழ்க்கை முறை பற்றி காணொலிக் காட்சிகளை தாங்களாகவே கண்டு அறிந்து கொள்ள வேண்டும்.

 

கீழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக

இயல்பாகவே தோன்றி மறையும் பொருள்கள்அவற்றின் இயக்கம்அவை இயங்கும் இடம்இயங்கும் காலம் அனைத்தும் ஒன்றிணைந்ததே இயற்கை என்கிறோம்பனிபடர்ந்த நீலமலைகள்பாடித்திரியும் பறவைகள்தன்னிச்சையாகச் சுற்றித்திரியும் விலங்குகள்சலசலக்கும் ஓடைகள்ஆர்ப்பரித்து வீழும் அருவிகள்நீந்தும் மீன்கன்அலைவீசும் அழகிய கடல்கண்சிமிட்டும் விண்மீன்கள்தங்க ஓடமாய்த் தவழ்ந்து வரும் வெண்ணிலா இவையெல்லாம் இயற்கை நமக்குத் தந்த கொடைகள்.

இயற்கையின் அழகைக் கண்டு இன்புற்றால் மட்டும் போதாதுஅந்த அழகை நாம் பாதுகாக்க வேண்டும்நாம் நமது தேவைக்காக மலைகள்காடுகள்விலங்குகள்பறவைகள் ஆகியவற்றை அழித்து வருகிறோம்மேலும் நிலம்நீர்காற்று ஆகியவற்றை மாசுபடுத்தி வருகிறோம்அதனால் இயற்கைச் சமநிலை மாறி புவி வெப்பமயமாகிறதுபுவி வெப்பமடையாமல் காப்பது நமது கடமைஇயற்கையைப் பாதுகாத்தால் மட்டுமே நாம் நம்மையும் பாதுகாத்துக்கொள்ள முடியும்.


1. எதனை இயற்கை என்கிறோம்?

விடை

இயல்பாகவே தோன்றி மறையும் பொருள்கள்அவற்றின் இயக்கம்அவை இயங்கும் இடம்இயங்கும் காலம் அனைத்தும் ஒன்றிணைந்ததே இயற்கை என்கிறோம்.

 

2. இப்பத்தியில் உன்ன இயற்கையை வருணிக்கும் சொற்கள் யாவை?

விடை

பனி படர்ந்த நீலமலைகள்பாடித்திரியும் பறவைகள்தன்னிச்சையாகச் சுற்றித்திரியும் விலங்குகள்சலசலக்கும் ஓடைகள்ஆர்ப்பரித்து வீழும் அருவிகள்நீந்தும் மீன்கள்அலைவீசும் அழகிய கடல்கண்சிமிட்டும் விண்மீன்கள்தங்க ஓடமாய்த் தவழ்ந்து வரும் வெண்ணிலா போன்றவை இயற்கையை வருணிக்கும் சொற்கள் ஆகும்.

 

3. இயற்கையை ஏன் பாதுகாக்க வேண்டும்?

விடை

நாம் தமது தேவைக்காக மலைகள்காடுகள் விலங்குகள்பறவைகள் ஆகியவற்றை அழித்து வருகிறோம்மேலும் நிலம்நீர்காற்று ஆகியவற்றை மாசுபடுத்தி வருகிறோம்அதனால் இயற்கைச் சமநிலை மாறி புவி வெப்பமயமாகிறதுபுவி வெப்பமடையாமல் காப்பது நமது கடமைஇயற்கையைப் பாதுகாத்தால் நாம் நம்மையும் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

 

4. பத்திக்குப் பொருத்தமான தலைப்புத் தருக.

விடை

இயற்கை வளம்.

 

ஆசிரியர் கூறக்கேட்டு எழுதுக.

மாமழை

வான் சிறப்பு

முரல் மீன்

வலசைபோதல்

பறவை இனங்கள்

சார்பு எழுத்துகள்

சாண்டியாகோ

தோற்கடிக்க முடியாது

காணிநிலம்

 

கீழ்க்காணும் தலைப்பில் கட்டுரை எழுதுக.

இயற்கையைக் காப்போம்

முன்னுரை:

இயற்கை என்பதே இயல்பாகவே உருவானவைஅவை இயல்பாகவே தோன்றி மறையும் பொருள்கள்அவற்றின் இயக்கம்அவை இயங்குகின்ற இடம்இயங்குகின்ற காலம் ஆகிய அனைத்தும் ஒன்றிணைந்து காட்சியளிப்பதே இயற்கையாகும்இயற்கையாய் உருவான நிலம்நீர்தீகாற்றுவானம் என ஐம்பூதங்களால் ஆனது இவ்வுலகம்.

இயற்கை இன்பம் :

இயற்கை அன்னையின் அழகைக் காணக் கண் கோடி வேண்டும்பனிபடர்ந்த மலைகள்பச்சைப் பட்டாடை போர்த்தியும் அதில் வெள்ளிச் சரிகையாய் அருவிகளும் காண்போரைக் கவரும்பல விலங்கினங்களின் உறைவிடமாகத் திகழும் காடுகள்நீர்வாழ் விலங்கினங்களை வளர்க்கும் கடல்பல கோடி விண்மீன்களையும் சூரிய சந்திரனையும் தன்னகத்தே வைத்துள்ள வானத்தின் அதிசயத்தையும் கூறவியலாது.

இயற்கை இன்பத்தை இழக்கிறோம் :

இன்றைய நவீன வாழ்க்கை முறைகளால் இயற்கை மாற்றமடைகின்றதுமலைகளின் சரிவுஇயற்கைச் சீற்றங்களால் ஏற்பட்ட மாற்றங்கள் ஒரு பக்கம்மக்கள் தொகைப் பெருக்கத்தால் காடுகளையும்விளைநிலங்களையும் அழித்து வீடுகளாக்கினோம்தொழிற்சாலைக் கழிவுகளினால் நீரை மாசுபடுத்தினோம்நெகிழிப் பொருட்களை அளவுக்கதிகமாகப் பயன்படுத்தி நிலத்தை மாசுபடுத்தினோம்போக்குவரத்துச் சாதனங்களால் காற்றும் மாசுபட்டதுஇவற்றால் புதிய நோய்கள் உருவாகிவிட்டனவளரும் பிள்ளைகள் நோய்களோடு வளர்வதற்கு நாமே காரணமாகின்றோம்.

இயற்கைச் சூழல் :

வாழ்வின் அனைத்து அம்சங்களுமே ஒன்றொடொன்று தொடர்புடையவை ஆகும்மனிதர் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் ஒருவரையொருவர் சார்ந்தும் அனைவரையும் காத்துக் கொண்டிருக்கும் உயிர்ச்சூழலைச் சார்ந்துமே வாழ்கிறோம்அனைத்து உயிர்களும் அவற்றைக் காக்கின்ற உயிர்ச் சூழலும் மதிப்புமிக்கவையாக கருதப்படுகிறதுஎனவே அவற்றை மதித்து அவற்றைக் காப்பது அவசியமாகும்வாழ்வின் அனைத்து நிலைகளிலும் இயற்கை வேண்டும்இயற்கை மருத்துவம்இயற்கை வேளாண்மைஇயற்கை உணவு என வாழ வேண்டும்இயற்கையான வழிகளில் நிலவளத்தைப் பெருக்கி வேளாண்மை செய்வதை அனைவரும் பின்பற்ற வேண்டும்பக்கவிளைவுகள்ஆபத்தான பின்விளைவுகள் உண்டாக்குகின்ற வேதிப்பொருட்களைத் தவிர்த்து விட வேண்டும்இயற்கையான மூலிகைகள்காய்கறிகள்பழங்களை விளைவிப்போம்.

முடிவுரை :

பொய்யாகவும் துன்பமாகவும் இருக்கும் செயற்கையைப் புறந்தள்ளிவிட்டுமெய்யாகவும் இன்பமாகவும் இருக்கும் இயற்கையை ஏற்று நடப்போம்அணுத்தீமைநீர்நிலை அழிப்புசுற்றுச்சூழல் கேடு எனப் பல்வேறு தீமைகளைத் தவிர்த்துவிட்டுபசுமையான மாற்றுகளைக் கண்டறிந்து எதிர்காலத்தைத் தக்க வழிகளில் மாற்றியமைப்போம்.


 

மொழியோடு விளையாடு



திரட்டுக.

கடல் என்னும் பொருள் தரும் வேறு சொற்களைத் திரட்டுக.

1. அரி

2. அலை

3. ஆர்கலி

4. ஆழி

5. திரை

6. விரிநீர்

7. முந்நீர்

8. பரவை

9. சமுத்திரம்

10. அழவம்

11. பெருநீர்

12. பௌவம்

 

தொடர்களைப் பிரித்து இரண்டு தொடர்களாக எழுதுக.

(.கா.) பல நாள்களாக மழை பெய்யாததால் பயிர்கள் வாடின.

விடை: பல நாள்களாக மழை பெய்யவில்லைபயிர்கள் வாடின.

1. கபிலன் வேலை செய்ததால் களைப்பாக இருக்கிறான்.

கபிலன் வேலை செய்தார்களைப்பாக இருக்கிறார்.

2. இலக்கியா இனிமையாகப் பாடியதால் பரிசு பெற்றாள்.

இலக்கியா இனிமையாகப் பாடினாள்பரிசு பெற்றாள்.

 

பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பரந்து விரிந்து இருப்பதால் கடலுக்குப் பரவை என்று பெயர். (பறவை / பரவை)

2. இலக்கிய மன்ற விழாவில் முகிலன் சிறப்பாக உரை ஆற்றினார். (உரை / உறை)

3. முத்து தம் பணி காரணமாக ஊருக்குச் சென்றார். (பனி / பணி)

4. கலைமகள் தன் வீட்டுத் தோட்டத்தைப் பார்க்க வருமாறு தோழியை அழைத்தாள்

(அலைத்தாள் / அழைத்தாள்),

 

பொருத்தமான சொற்களால் கட்டங்களை நிரப்புக.

1. 'புள்என்பதன் வேறு பெயர்

2. பறவைகள் இடம்பெயர்தல்

3. சரணாலயம் என்பதன் வேறு பெயர்


 

 வரிசை மாறியுள்ன சொற்களைச் சரியான வரிசையில் அமைத்து எழுதுக.

1. இளங்கோவடிகள் காப்பியத்தை என்னும் இயற்றியவர் சிலப்பதிகாரம்.

விடை

சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தை இயற்றியவர் இளங்கோவடிகள்.

2. மனிதன் உலகில் இல்லாத பறவை வாழ முடியாது.

விடை

பறவை இல்லாத உலகில் மனிதன் வாழ முடியாது.

3. மிகப்பெரிய சாண்டியாகோ மீளைப் பிடித்தார்

விடை

சாண்டியாகோ மிகப்பெரிய மீனைப் பிடித்தார்.

4. மனிதர் இந்தியாவின் டாக்டர் சலீம் அலி பறவை.

விடை

இந்தியாவின் பறவை மனிதர் டாக்டர் சலீம் அலி.

 

கட்டங்களில் சில சொற்கள் மறைந்துள்ளனகுறிப்புகளைக் கொண்டு அவற்றைக் கண்டுபிடித்து எழுதுக.


1. இரட்டைக் காப்பியங்களில் ஒன்று மணிமேகலை

2. முதலெழுத்துகளின் எண்ணிக்கை முப்பது

3. திங்கள் என்பதன் பொருள் நிலவு

4. சத்திமுத்தப் புலவரால் பாடப்பட்ட பறவை செங்கால் நாரை

5. பாரதியார் காணி நிலம் வேண்டும் என்று பாடுகிறார்.

6. ஆய்த எழுத்தின் வேறு பெயர்தனிநிலை

விடை

1. மணிமேகலை

2. முப்பது

3. நிலவு

4. செங்கால் நாரை

5. காணி நிலம்

6. தனிநிலை

 

ஆய்ந்தறிக.

பெருகிவரும் மக்களின் தேவைக்காக இயற்கையை அழிப்பது சரியாஇயற்கையைச் சுரண்டாமல்மக்களின் தேவைகளை நிறைவேற்ற மாற்று வழிகள் உண்டா?

விடை

பெருகிவரும் மக்கள் தொகையின் காரணத்தினால் நமது தேவைகளும் பெருகிக் கொண்டே இருக்கின்றனமனிதன் தோன்றியபோது அவன் கண்ட இயற்கைச் சூழலைக் கண்டு வியந்தான்அவற்றின் உதவியோடு வாழத் தொடங்கினான்காலப்போக்கில் நாகரிகம்பண்பாட்டு வளர்ச்சி எனப் பல படிநிலைகளில் மாற்றங்களைக் கண்டான்.

அறிவியல் வளர்ச்சி என்ற பெயரில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் மின்சாதனப் பொருட்கள்நெகிழிப் பொருட்கள் இவற்றால் நம் சுற்றுச்சூழலை மாசுபடுத்திவிட்டோம்இயற்கையாக அமைந்த நிலம்நீர்காடுகாற்று என எல்லாவற்றையும் மாசுபடுத்தி விட்டோம்.

காடுகளை அழித்து வீடுகள் கட்டினோம்தொழிற்சாலைகளை வளர்த்து நீர்காற்று ஆகியவற்றைச் சீர் கேடாக்கினோம்நிலத்தையும் விட்டுவைக்கவில்லைஇவையெல்லாம் சீர் அழிந்ததால் தேனீசிட்டுக்குருவி போன்ற பல உயிரினங்கள் அழிவதற்குக் காரணமாகி விட்டோம்தேனீக்கள் வளர்வதற்கான காட்டுப் பகுதிகள் அழிக்கப்பட்டனஆறுகளில் மணல் எடுக்கப்பட்டுவதால் நீரின் அளவும் சுவையும் நாளுக்கு நாள் மாறி வருகிறது.

நம் முன்னோர்கள் இயற்கையின் முக்கியத்துவம் உணர்ந்தனர்அதனால் அவற்றைத் தெய்வமாக எண்ணி வழிபட்டனர்இயற்கைக்கு மாறாக நாம் பல வழிகளில் இயற்கை வளங்களைக் குறைத்து விட்டோம்.

இயற்கை வளங்கள் என்பது ஒன்றோடொன்றுதொடர்புடைய சங்கிலித்தொடர் போன்றதுகாடுகள் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்தும்மண் அரிப்பைத் தடுத்து நிறுத்தும்தட்ப வெப்பநிலையைச் சமமாக வைத்துக் கொள்ளும்காடுகள் அழிக்கப்படுவதால் தட்ப வெப்பநிலை மாற்றம் அடைகிறதுபுவி வெப்பமயமாகிறதுபல்லுயிர்ப் பெருக்கம் அழிந்து வருகிறதுமழை வளம் குறைந்து விட்டது.

இவற்றை முற்றழிவிலிருந்து காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்நெகிழிப் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்நெகிழிப் பொருட்கள் உருவாக்குவதைத் தடுக்க வேண்டும்சுகாதாரத்திற்குக் கேடு விளைவிக்கும் மேம்பாடுகள்தொழிற்சாலைகள் போன்றவற்றுக்கு அரசு முடக்கம் தெரிவிக்க வேண்டும்.

ஒவ்வொருவரும் இயற்கையை நேசிக்க வேண்டும்இயற்கையைப் பாதுகாக்கபசுமை அமைப்பு தோற்றுவிக்கப்பட வேண்டும்இந்தப் பசுமை அமைப்பு செழுமைவளமைதூய்மை என்ற அடிப்படையில் தனது திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.

அவ்வப்போது இயற்கை பற்றிய விழிப்புணர்வைத் தூண்டுமாறு பிரச்சாரங்கள்கருத்தரங்குகள் நிகழ்த்த வேண்டும்காடுகளை அழிக்காமல்மலைகளைத் தகர்க்காமல்மண் வளத்தைச் சுரண்டாமல் செயற்கைக் கருவிகளால் கரியமிலவாயுவைப் பெருக்காமல் புவி வெப்பமயமாதலைத் தடுக்கும் வழிமுறைகளைக் கடைபிடித்து நீர்நிலைகளைப் பாதுகாத்து நிலங்களை வளப்படுத்துவோம்குறைந்து வரும் வேளாண் தொழிலை புதுமுறைக் கல்வித் துறைகளால் மேம்படுத்தி பூமியைக் காப்போம் என்று ஒவ்வொருவரும் உறுதியேற்க வேண்டும்.

நாம் இல்லங்களில் பயன்படுத்திக் கொண்டிருக்கும் மின் விளக்குகள்மின்விசிறிகள் போன்றவற்றைத் தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.

 

கவிதை படைக்க.

கீழே காணப்படும் மழைபற்றிய கவிதையைச் சொந்தத் தொடர்களால் நிரப்புகவானில் இருந்து வந்திடும்

மனதில் மகிழ்ச்சி தந்திடும்

…………………………………
………………………………..
………………………………..

விடை :

வானில் இருந்து வந்திடும்

மனதில் மகிழ்ச்சி தந்திடும்

ஆற்றில் வெள்ளம் பெருகிடும்

அணைகள் நிரம்பி வழிந்திடும்

நிலத்தடி நீரும் ஊறிடும்

பயிர்கள் செழிக்க உதவிடும்

இயற்கை எல்லாம் சிரித்திடும்

இன்பக் கடலில் ஆழ்த்திடும்

பட்ட மரங்கள் துளிர்த்திடும்

பாரே உன்னைப் போற்றிடும்.


நிற்க அதற்குத் தக


என் பொறுப்புகள்...

சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்வேன்

இயற்கையைப் பாதுகாப்பேன்

 

கலைச் சொல் அறிவோம்

கண்டம் - Continent

தட்பவெப்பநிலை - Clinate

வானிலை – Weather

வலசை - Migration

புகலிடம் - Sanctuary

புவிஈர்ப்புப்புலம் - GravitationalField

 


 இணையத்தில் காண்க


அழித்து வரும் உயிரினங்கள்பற்றி இணையத்தில் தேடி அறிந்து பட்டியவிடுக.

 

இணையச் செயல்பாடுகள்

பறவைகள் வலசைபோதல்

செயல்பாட்டில் கிடைக்கப்பெறும் படம்


படிகள்:

● கொடுக்கப்பட்டிருக்கும் உரலி / விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி 'globcofoird migration' என்னும் இணையச் செயலியின் பக்கத்திற்குச் செல்லவும்.

● இணையச் செயலி இயங்கு நிலைக்கு வரசற்று நேரம் ஆகும்அதுவரை காத்திருக்கவும்இணையச்செயலி தயார் நிலைக்கு வந்தவுடன் ஓர் உலக உருண்டையைக் காணலாம்அதன் மையத்தில் இருக்கும் 'Cliek to St.an ' என்பதைச் சொடுக்கவும்இப்போது திரையின் இடப் பக்கத்தில் பறவைகளின் பெயர்ப் பட்டியல் தெரியும்அதில் ஏதேனும் ஒரு பறவையைத் தெரிவு செய்து அதன் வலசை போகும் பாதையைத் தெரிந்து கொள்ளலாம்.

●  பூமி உருண்டையைச் சுழற்றுவதன் மூலம் வெவ்வேறு பறவைகளின் வலசை போதலை அறியலாம்.

செயல்பாட்டிற்கான உரலிIntp://globeofhirimigration.com/

 

Tags : Term 1 Chapter 2 | 6th Tamil பருவம் 1 இயல் 2 | 6 ஆம் வகுப்பு தமிழ்.
6th Tamil : Term 1 Chapter 2 : Iyarkai inbum : Tamil Language Exercise - Questions and Answers Term 1 Chapter 2 | 6th Tamil in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 2 : இயற்கை இன்பம் : மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள் - பருவம் 1 இயல் 2 | 6 ஆம் வகுப்பு தமிழ் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 2 : இயற்கை இன்பம்