SQL மூலம் தரவுகளைக் கையாளுதல் - நினைவில் கொள்க | 12th Computer Science : Chapter 15 : Integrating Python with MySql and C++ : Data Manipulation Through SQL

   Posted On :  18.08.2022 10:59 pm

12 வது கணினி அறிவியல் : அலகு 15 : MySql மற்றும் C++ உடன் பைத்தானை ஒருங்கிணைத்தல் : SQL மூலம் தரவுகளைக் கையாளுதல்

நினைவில் கொள்க

ஒரு தரவுத்தளம் என்பது ஒருங்கிணைக்கப்பட்ட தரவுகளின் தொகுப்பாகும்.

நினைவில் கொள்க

• ஒரு தரவுத்தளம் என்பது ஒருங்கிணைக்கப்பட்ட தரவுகளின் தொகுப்பாகும்.

• தரவுத்தளத்தின் பயனர்களாக மனிதர்கள், பிற நிரல்கள் அல்லது பயன்பாடுகள் இருக்கலாம்.

• எளிய உறவுநிலை தரவுத்தள அமைப்பான இது தரவுகளை முறையான தரவுக் கோப்புகளாக சேமித்து வைக்கும்.

• தரவுத்தளத்திலுள்ள cursor என்பது தரவுத்தள பதிவுகளின் மீது செயல்படும் ஒரு கட்டுப்பாட்டு அமைப்பாகும். SQL -ன் அனைத்து கட்டளைகளையும் செயல்படுத்த இது பயன்படுகிறது.

• அட்டவணையிலுள்ள தரவு ஒற்றை அல்லது இரட்டை மேற்கோள்குறியுடன் உள்ளதால், பைத்தானிலுள்ள SQL கட்டளைகள் மூன்று மேற்கோள் குறியினால் குறிக்கப்படும்.

• SQL-ல் மிகவும் பொதுவாக பயன்படுத்தக்கூடிய கூற்று Select ஆகும்.

• தரவுத்தளத்திலுள்ள அட்டவணையிலிருந்து தரவுகளைப் பெற SQL கூற்றான Select பயன்படுகிறது.

• GROUP BY துணைநிலை கூற்று குறிப்பிட்ட பதிவுகளைச் சுருக்கமான வரிசைகளைக் கொண்ட குழுவாக சேர்க்கிறது.

• ORDER BY துணை நிலைக்கூற்று SELECT கூற்றுடன் சேர்ந்து குறிப்பிட்ட புலங்களில் உள்ள தரவுகளை முறையாக வரிசையாக்கம் செய்ய பயன்படுகிறது.

• Having துணைநிலைக்கூற்று GROUP செயற்கூறின் அடிப்படையில் தரவுகளை வடிகட்ட பயன்படுகிறது.

• Where துணை நிலைக்கூற்று Group by' துணை நிலைக்கூற்றுடன் பயன்படுத்த முடியாது.

• WHERE துணைநிலைக்கூற்று AND, OR, மற்றும் NOT செயற்குறிகளுடன் இணைத்துப் பயன்படுத்தலாம்.

• ஒன்றிற்கு மேற்பட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் பதிவுகளை வடிகட்ட ‘AND' மற்றும் 'OR' செயற்குறிகள் பயன்படுகின்றன.

• மதிப்பீட்டுச் சார்புகள் நெடுவரிசையில் உள்ள மதிப்புகளைக் கொண்டு செயல்பாடுகளைச் செய்து ஒரே ஒரு மதிப்பை விடையாகக் கொடுக்கும்.

• COUNT() சார்பு அட்டவணையிலுள்ள வரிசைகளின் எண்ணிக்கையை திருப்பி அனுப்பும்.

• AVG() சார்பு அட்டவணையிலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட புலத்தின் பதிவுகளின் சராசரியை / கணக்கிடப்பயன்படுகிறது.

• SUM() சார்பு அட்டவணையிலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட புலத்தின் பதிவுகளின் கூட்டுத் தொகையைக் கணக்கிடுகிறது.

• MAX() சார்பு தேர்ந்தெடுக்கப்பட்ட புலத்தின் பெரிய மதிப்பை திருப்பி அனுப்பும்.

• MIN() சார்பு தேர்ந்தெடுக்கப்பட்ட புலத்தின் சிறிய மதிப்பை திருப்பி அனுப்பும்

• sqlite_master என்பது முதன்மை அட்டவணையாகும். இது நமது தரவுத்தள அட்டவணைகளின் முக்கிய தகவல்களை கொண்டிருக்கும்.

• பைத்தானில், கோப்பின் பாதையை /' அல்லது \\' குறியீடு குறிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, பாதையை 'c:/pyprg/sql.csv', அல்லது c:\\pyprg\\sql.csv' எனக் குறிப்பிடலாம்.

Tags : Data Manipulation Through SQL SQL மூலம் தரவுகளைக் கையாளுதல்.
12th Computer Science : Chapter 15 : Integrating Python with MySql and C++ : Data Manipulation Through SQL : Points to remember Data Manipulation Through SQL in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது கணினி அறிவியல் : அலகு 15 : MySql மற்றும் C++ உடன் பைத்தானை ஒருங்கிணைத்தல் : SQL மூலம் தரவுகளைக் கையாளுதல் : நினைவில் கொள்க - SQL மூலம் தரவுகளைக் கையாளுதல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது கணினி அறிவியல் : அலகு 15 : MySql மற்றும் C++ உடன் பைத்தானை ஒருங்கிணைத்தல் : SQL மூலம் தரவுகளைக் கையாளுதல்