Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணினி அறிவியல் | மதிப்பீட்டுச் சார்புகள்

SQL மூலம் தரவுகளைக் கையாளுதல் - மதிப்பீட்டுச் சார்புகள் | 12th Computer Science : Chapter 15 : Integrating Python with MySql and C++ : Data Manipulation Through SQL

   Posted On :  18.08.2022 10:00 pm

12 வது கணினி அறிவியல் : அலகு 15 : MySql மற்றும் C++ உடன் பைத்தானை ஒருங்கிணைத்தல் : SQL மூலம் தரவுகளைக் கையாளுதல்

மதிப்பீட்டுச் சார்புகள்

இந்த சார்புகள் நெடுவரிசையில் உள்ள மதிப்புகளைக் கொண்டு செயல்பாடுகளைச் செய்து ஒரே ஒரு மதிப்பை விடையாகக் கொடுக்கும்.

மதிப்பீட்டுச் சார்புகள் (Aggregate Functions)

இந்த சார்புகள் நெடுவரிசையில் உள்ள மதிப்புகளைக் கொண்டு செயல்பாடுகளைச் செய்து ஒரே ஒரு மதிப்பை விடையாகக் கொடுக்கும்.

• COUNT()

• SUM()

• MIN()

• AVG()

• MAX()


1. COUNT() சார்பு

WHERE துணை நிலை கூற்றில் குறிப்பிட்டுள்ள நிபந்தனையை நிறைவேற்றும், அட்டவணையில் உள்ள வரிசைகளின் எண்ணிக்கையை SQL COUNT() சார்பு விடையாகக் கொடுக்கும்.

எடுத்தக்காட்டு 15.7.1-1

எடுத்தக்காட்டு 1: இந்த எடுத்துக்காட்டில் வரிசைகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது.

import sqlite3

connection = sqlite3.connect("Academy.db")

cursor = connection.cursor()

cursor.execute("SELECT COUNT(*) FROM student")

result = cursor.fetchall()

print(result)

வெளியீடு

[(7)]

எடுத்தக்காட்டு 15.7.1-2 

எடுத்துக்காட்டு 2: இந்த எடுத்துக்காட்டில் குறிப்பிட்ட நெடுவரிசையைக் கொண்ட பதிவுகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது.

import sqlite3

connection = sqlite3.connect("Academy.db")

cursor = connection.cursor()

cursor.execute("SELECT COUNT(AVERAGE) FROM student")

result = cursor.fetchall()

print(result

வெளியீடு

[(7)]

 குறிப்பு

NULL மதிப்புகள் கணக்கிடப்படமாட்டாது. மேலே உள்ள எடுத்துக்காட்டில் ஒரு வேளை பதிவில் NULL மதிப்பு இருந்தால் வெளியீடு 6 என இருக்கும்.


2. AVG():

பின்வரும் பைதான் நிரலில் உள்ள கூற்று அனைத்து மாணவர்களின் சராசரி மதிப்பெண்ணைக் கண்டு பிடிக்கிறது.

எடுத்தக்காட்டு 15.7.2-1

import sqlite3

connection = sqlite3.connect("Academy.db")

cursor = connection.cursor()

cursor.execute("SELECT AVG(AVERAGE) FROM student ")

result = cursor.fetchall().

print(result)

வெளியீடு

[(84.65714285714286,)]

குறிப்பு

NULL மதிப்புகள் கணக்கிடப்படமாட்டாது.


3. SUM():

பின்வரும் பைதான் நிரலில் உள்ள SQL கூற்று சராசரி புலத்தில் உள்ள சராசரிகளின் கூட்டுத் தொகையைக் கணக்கிடுகிறது.

எடுத்தக்காட்டு 15.7.1-3

import sqlite3

connection = sqlite3.connect("Academy.db")

cursor = connection.cursor()

cursor.execute("SELECT SUM(AVERAGE) FROM student")

result = cursor.fetchall()

print(result)

வெளியீடு

[(592.6,)]

குறிப்பு

NULL மதிப்புக்கள் கணக்கிடப்படமாட்டாது.


4. MAX() மற்றும் MIN() செயற்கூறுகள்

The MAX() சார்பு தேர்ந்தெடுக்கப்பட்ட நெடுவரிசையில் உள்ள மிகப்பெரிய மதிப்பை விடையாகக் கொடுக்கும்.

The MIN() சார்பு தேர்ந்தெடுக்கப்பட்ட நெடுவரிசையில் உள்ள மிகச்சிறிய மதிப்பை விடையாகக் கொடுக்கும்.

சராசரி மதிப்பைக் கொண்ட மாணவரின் பெயர்களைக் காண்பிக்கிறது.

எடுத்தக்காட்டு 15.7.4-1

import sqlite3

connection = sqlite3.connect("Organization.db")

cursor = connection.cursor()

print("Displaying the name of the Highest Average")

cursor.execute("SELECT sname,max(AVERAGE) FROM student ")

result = cursor, fetchall()

print(result)

print("Displaying the name of the Least Average")

cursor.execute("SELECT sname,min(AVERAGE) FROM student ")

result = cursor.fetchall()

print(result)

வெளியீடு

Displaying the name of the Highest Average

[('PRIYA', 98.6)]

Displaying the name of the Least Average

[('TARUN', 62.3)]

Tags : Data Manipulation Through SQL SQL மூலம் தரவுகளைக் கையாளுதல்.
12th Computer Science : Chapter 15 : Integrating Python with MySql and C++ : Data Manipulation Through SQL : SQL Aggregate Functions Data Manipulation Through SQL in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது கணினி அறிவியல் : அலகு 15 : MySql மற்றும் C++ உடன் பைத்தானை ஒருங்கிணைத்தல் : SQL மூலம் தரவுகளைக் கையாளுதல் : மதிப்பீட்டுச் சார்புகள் - SQL மூலம் தரவுகளைக் கையாளுதல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது கணினி அறிவியல் : அலகு 15 : MySql மற்றும் C++ உடன் பைத்தானை ஒருங்கிணைத்தல் : SQL மூலம் தரவுகளைக் கையாளுதல்