12 வது கணினி அறிவியல் : அலகு 15 : MySql மற்றும் C++ உடன் பைத்தானை ஒருங்கிணைத்தல் : SQL மூலம் தரவுகளைக் கையாளுதல்

SQLite

SQLite என்பது எளிய உறவுநிலை தரவுத்தள அமைப்பாகும். இது தரவுகளை முறையான தரவுக்கோப்புகளாகவும் கணினியின் உட்புற நினைவகத்தில் கூட சேமித்து வைக்கும்.

SQLite

SQLite என்பது எளிய உறவுநிலை தரவுத்தள அமைப்பாகும். இது தரவுகளை முறையான தரவுக்கோப்புகளாகவும் கணினியின் உட்புற நினைவகத்தில் கூட சேமித்து வைக்கும். இது MySQL அல்லது Oracle போன்று தனித்த தரவுத்தள சேவையக நிரலாக இல்லாமல் உள்ளிணைந்த பயன்பாடாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வேகமாகவும், மிகுந்த சோதிக்கப்பட்டதாகவும் மற்றும் நெகிழ்வானதாகவும் உள்ளதால் SQLite-ல் வேலை செய்வது எளிதாகும். SQLite ற்காக பைத்தான் சிறப்பான நூலகத்தைக் கொண்டுள்ளது.

SQLite யைப் பயன்படுத்த,

.

• படிநிலை 2 ல் தரவுத்தளத்தை இணைத்தல் என்பது, அணுக வேண்டிய தரவுத்தளத்தின் பெயரை அனுப்புதல் என்பதாகும். அவ்வாறு அனுப்பும்போது, அத்தரவுத்தளம் ஏற்கனவே இருக்குமாயின் அது இணைக்கப்படும். இல்லாவிடில், பைத்தான், கொடுக்கப்பட்ட பெயரில் ஒரு புதிய தரவுத்தளத்தை உருவாக்கும்.

• படிநிலை3ல் cursor என்பது ஒரு கட்டுப்பாட்டு அமைப்பாகும், இது தரவுத்தளப் பதிவுகளை இணைக்கப் பயன்படுகிறது.

• பைத்தானில், cursor மிக முக்கிய பங்குவகின்றது. அனைத்து கட்டளைகளும் cursor பொருள் மூலமே மட்டுமே இயக்கப்படும்.

ஒரு அட்டவணையை உருவாக்க, தரவுத்தளத்தில் ஒரு பொருளை உருவாக்கி அதற்கான SQL கட்டளைகளை எழுத வேண்டும்.

எடுத்துக்காட்டு:- sql_comm = "SQL statement"

கட்டளைகளை நிறைவேற்ற cursor வழிமுறையைப் பயன்படுத்தி sql கட்டளையின் பெயரை அளபுருக்களாக அனுப்ப வேண்டும். sql_commல் நிறைய கட்டளைகள் சேமிக்கப்பட்டு அவை நிறைவேற்றப்படும். அனைத்து செயல்களையும் முடித்த பின்னர் மாற்றங்களைக் கோப்பில் சேமித்து பின்னர் இணைப்பை மூட வேண்டும்.

12th Computer Science : Chapter 15 : Integrating Python with MySql and C++ : Data Manipulation Through SQL : SQLite in Tamil : 12th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது கணினி அறிவியல் : அலகு 15 : MySql மற்றும் C++ உடன் பைத்தானை ஒருங்கிணைத்தல் : SQL மூலம் தரவுகளைக் கையாளுதல் : SQLite - : 12 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது கணினி அறிவியல் : அலகு 15 : MySql மற்றும் C++ உடன் பைத்தானை ஒருங்கிணைத்தல் : SQL மூலம் தரவுகளைக் கையாளுதல்