வரலாறு - சையது வம்சம் (1414-1451) | 11th History : Chapter 10 : Advent of Arabs and turks
சையது வம்சம் (1414-1451)
பஞ்சாப் போர் அணிவகுப்புகளில் தன் நலன்களை மேற்பார்வை பார்ப்பதற்கு கிசர் கானைத் தனது துணையாக நியமித்தார் தைமூர். கிசர் கான் (1414-1421) தானே சென்று தில்லியைக் கைப்பற்றி சையது வம்ச ஆட்சியை நிறுவினார். கிசர் கான் நிறுவிய சையது வம்சத்தில், 1451 வரையிலும் நான்கு சுல்தான்கள் ஆண்டனர். முற்பட்ட சையது சுல்தான்கள், தைமூரின் மகனுக்குத் திறை செலுத்தி ஆட்சி புரிந்தனர். அவர்களின் ஆட்சியை, யாஹியாபின்-அஹ்மத் சிரிந்தி இயற்றிய தாரிக்-இ-முபாரக்-சாஹி குறிப்பிடுகிறது. அவர்களது ஆட்சியின் இறுதியில், பேரரசு தில்லி நகரத்துக்குள் சுருங்கி விட்டது.
உங்களுக்குத் தெரியுமா?
தில்லி சுல்தானிய ஆட்சியின் ஒட்டுமொத்த வரலாற்றில் ஆட்சி உரிமையைத் தாமாகவே துறந்து, தில்லிக்கு வெளியே ஒரு சிறிய நகருக்குச் சென்று, முழுமையாக முப்பது ஆண்டுகள் மனநிறைவோடும் அமைதியாகவும் வாழ்ந்த ஒரே சுல்தான் சய்யித் வம்சத்தில் வந்த ஆலம் 6241 – Abraham Eraly, The Age of
Wrath.