வரலாறு - பாடச் சுருக்கம் - அரபியர், துருக்கியரின் வருகை | 11th History : Chapter 10 : Advent of Arabs and turks
பாடச் சுருக்கம்
•
பொ.ஆ. 712 இல் சிந்துப் பிரதேசத்தின் மீது முகமது-பின்-காஸிம் படையெடுப்பு
• 11ஆம் நூற்றாண்டின் முதல் முப்பது ஆண்டுகள், கொள்ளையடிப்பதை நோக்கமாகக் கொண்ட கஜினி மாமுதுவின் தாக்குதல்களைக் கண்டது.
• 12ஆம் நூற்றாண்டில் முடிவில் நிகழ்ந்த முகமது கோரியின் படையெடுப்பு, 1206இல் குத்புதீன் ஐபக்கின் கீழ் தில்லி சுல்தானிய ஆட்சி நிறுவப்படுவதற்கு இட்டுச்சென்றது.
• சுல்தான்களின் மேம்பட்ட இராணுவ உத்திகளால், 13ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ராஜபுத்திர அரசர்கள் தங்களின் மேலாதிக்கத்தை இழந்தனர்.
• தில்லி சுல்தானியம் ஐந்து வம்சாவளிகள் கொண்டது. இப்பாடத்தில் மூன்று முக்கிய சுல்தானிய வம்சங்களான அடிமை வம்சம், கில்ஜி வம்சம், துக்ளக் வம்சம் ஆகியனவற்றுக்கு கூடுதல் கவனம் அளிக்கப்பட்டுள்ளது.
• அலாவுதீன் கில்ஜியின் முற்போக்கான பல இராணுவ, சந்தைச் சீர்திருத்தங்கள்
• முகமது-பின்-துக்ளக்கின் புதுமையான நடவடிக்கைகள் அவரது காலத்திற்கு மிகவும் முக்கியமற்றவை என்பதோடு அவருடைய வீழ்ச்சிக்கு வழிவகுத்தன.
• ஃபெரோஸ் துக்ளக்கின் சீர்திருத்தங்களும் நடவடிக்கைகளும் அவருக்கு மக்களின் நல்லெண்ணத்தைப் பெற்றுத்தந்தன.
• ஒரு பண்பாட்டுக் கலப்பும் இலக்கியம், கலை, இசை கட்டடக் கலைத் துறைகளில் பரஸ்பரத் தாக்கமும் ஏற்பட்டன.