Home | 11 ஆம் வகுப்பு | 11வது இயற்பியல் | குறு வினாக்கள் மற்றும் விடைகள்

துகள்களாலான அமைப்பு மற்றும் திண்மப் பொருட்களின் இயக்கம் | இயற்பியல் - குறு வினாக்கள் மற்றும் விடைகள் | 11th Physics : UNIT 5 : Motion of System of Particles and Rigid Bodies

   Posted On :  06.11.2022 02:49 am

11வது இயற்பியல் : அலகு 5 : துகள்களாலான அமைப்பு மற்றும் திண்மப் பொருட்களின் இயக்கம்

குறு வினாக்கள் மற்றும் விடைகள்

இயற்பியல் : துகள்களாலான அமைப்பு மற்றும் திண்மப் பொருட்களின் இயக்கம் : முக்கியமான கேள்விகள், பதில்கள், தீர்வுகள்: குறுவினாக்கள் மற்றும் பதில்கள்

துகள்களாலான அமைப்பு மற்றும் திண்மப் பொருட்களின் இயக்கம்

குறு வினாக்கள்


1. நிறைமையம் வரையறு.

பொருளொன்றின் ஒட்டுமொத்த நிறையும் செறிந்திருப்பதாகத் தோன்றும் புள்ளியானது பொருளின் நிறைமையம் எனப்படும். 


2. கீழ்கண்ட வடிவியல் அமைப்புகளின் நிறைமையத்தை காண்க. 

அ) சமபக்க முக்கோணம் ஆ) உருளை இ) சதுரம் 



3. திருப்பு விசை வரையறு அதன் அலகு யாது?

ஒரு புள்ளி அல்லது அச்சைப் பொருத்து பொருளின் மீது செயல்படுத்தப்படும் புற விசையின் திருப்புத்திறன் திருப்பு விசை என வரையறுக்கப் படுகிறது.



4. திருப்பு விசையை உருவாக்காத விசைகளுக்கான நிபந்தனை யாது?

(i)   மற்றும்   ஒன்றுக்கொன்று இணையாக ஒரே திசையில் இருந்தால் திருப்பு விசை சுழி. 

(ii)   மற்றும்   ஒன்றுக் கொன்று இணையாக எதிரெதிர் திசையில் செயல்படும் போது திருப்பு விசை சுழி 

(iii) விசையானது ஆதாரப்புள்ளியில் செயல்படுகிறது எனில் திருப்பு விசை சுழி.


5. நடைமுறை வாழ்வில் திருப்பு விசை பயன்படுத்தப்படும் எடுத்துக்காட்டுகள் ஏதேனும் இரண்டு கூறு. 

(i) கீல்களை பொறுத்து கதவுகளை திறந்து மூடுதல். 

(ii) திருகு குறடு மூலம் திருகு மறையை சுழலச் செய்தல். 


6. திருப்பு விசைக்கும் கோண உந்தத்திற்கும் இடையேயான தொடர்பு யாது? 

τ = Iα

τ = I [dω / dt]

τ = Id(Iω) / dt

L = Iω

 τ = I [dL/dt]


7. சமநிலை என்றால் என்ன? 

திண்மப் பொருளின் நேர்க்கோட்டு உந்தம் மற்றும் கோண உந்தம் மாறிலியாக இருந்தால் அப்பொருள் எந்திரவியல் சமநிலையில் உள்ளது எனலாம்.


8. உறுதி மற்றும் உறுதியற்ற சமநிலையை எவ்வாறு வேறுபடுத்துவாய்?



9. இரட்டையின் திருப்புத்திறனை வரையறு.

ஒரே நேர்க்கோட்டில் அமையாத, செங்குத்துத் தொலைவில் பிரிக்கப்பட்டுள்ள இரு சமமான எதிரெதிர் விசைகள் ஏற்படுத்தும் திருப்பு விளைவு இரட்டையின் திருப்புத்திறன் எனப்படும்.


10. திருப்புத்திறனின் தத்துவத்தை கூறு.

சமநிலையில் வலஞ்சுழி திருப்புத்திறன்களின் மொத்த கூட்டுத்தொகை, இடஞ்சுழி திருப்புத் திறன்களின் மொத்த கூட்டுத்தொகைக்கு சமம். இதுவே திருப்புத்திறனின் தத்துவம் ஆகும்.


11. ஈர்ப்பு மையத்தை வரையறு.

ஒரு பொருளின் நிலை மற்றும் திசையைக் கருதாத போது, அப்பொருளின் மொத்த எடையும் செயல்படுவதாக தோன்றும் புள்ளி ஈர்ப்பு மையம் எனப்படும். 


12. நிலைமத் திருப்புத் திறனின் சிறப்பு அம்சங்கள் ஏதேனும் இரண்டைக் கூறு. 

(i) ஒரு குறிப்பிட்ட அச்சைப் பொருத்து பொருளொன்று எவ்வாறு சுழல்கிறது என்று கண்டறியப் பயன்படுகிறது. 

(ii) இது பொருளின் நிறையை மட்டுமல்லாது சுழலும் அச்சைப் பொருத்து நிறை பரவி இருக்கும் தன்மையையும் சார்ந்துள்ளது. 

iii) நிலைமத் திருப்புத்திறன் மதிப்பானது மாறக்கூடியதாகும். 


13. சுழற்சி ஆரம் என்றால் என்ன?

சுழற்சி ஆரம்

சுழற்சி ஆரம் என்பது சுழலும் அச்சைப் பொருத்து புள்ளி நிறைகளின் செங்குத்து தொலைவின் இருமடி மூலத்தின் சராசரியின் வர்க்கத்திற்கு சமமாகும்.


14. கோண உந்த மாறாவிதியைக் கூறு.

வெளிப்புற திருப்பு விசை செயல்படாதவரை சுழி திண்மப் பொருளின் மொத்த கோண உந்தம் மாறாது.


இவ்விதிப்படி, (L = Iω

தொடக்க கோண உந்தம் = இறுதி கோண உந்தம் Iiωi = Ifωf


15. அ) நிறை 

ஆ) விசை என்ற இயற்பியல் அளவுகளுக்கு சமமான சுழற்சி இயக்க அளவுகள் யாவை?



16. தூய உருளுதலுக்கான நிபந்தனை என்ன? 

i) உருள் இயக்கத்தில் போது கிடைப்பரப்பை தொடும் புள்ளியின் கணநேர சுழற்சி இயக்கம். 

ii) விளைவுத் திசைவேகம் V சுழியாகிறது. 

iii) vTRANS = VROT 

iv) vCm = Rω


17. சறுக்குதலுக்கும், நழுவுதலுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை? 



Tags : Motion of System of Particles and Rigid Bodies | Physics துகள்களாலான அமைப்பு மற்றும் திண்மப் பொருட்களின் இயக்கம் | இயற்பியல்.
11th Physics : UNIT 5 : Motion of System of Particles and Rigid Bodies : Short Questions and Answer Motion of System of Particles and Rigid Bodies | Physics in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது இயற்பியல் : அலகு 5 : துகள்களாலான அமைப்பு மற்றும் திண்மப் பொருட்களின் இயக்கம் : குறு வினாக்கள் மற்றும் விடைகள் - துகள்களாலான அமைப்பு மற்றும் திண்மப் பொருட்களின் இயக்கம் | இயற்பியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது இயற்பியல் : அலகு 5 : துகள்களாலான அமைப்பு மற்றும் திண்மப் பொருட்களின் இயக்கம்