Home | 11 ஆம் வகுப்பு | 11வது இயற்பியல் | தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள்: சீராகப் பரவியுள்ள நிறையின் நிறை மையம்
   Posted On :  12.11.2022 08:25 pm

11வது இயற்பியல் : அலகு 5 : துகள்களாலான அமைப்பு மற்றும் திண்மப்பொருட்களின் இயக்கம்

தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள்: சீராகப் பரவியுள்ள நிறையின் நிறை மையம்

இயற்பியல் : துகள்களாலான அமைப்பு மற்றும் திண்மப்பொருட்களின் இயக்கம் : சீராகப் பரவியுள்ள நிறையின் நிறை மையம்

தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள் சீராகப் பரவியுள்ள நிறையின் நிறை மையம்

எடுத்துக்காட்டு 5.4 

M நிறையும் l நீளமும் கொண்ட சீரான நீள் அடர்த்தி கொண்ட (uniform rod) தண்டின் நிறை மையத்தைக் கண்க.

தீர்வு 

M நிறையும் l நீளமும் உடைய ஒரு சீரான நீள் அடர்த்தி கொண்ட தண்டினைக் (uniform rod) கருதுக. அதன் ஒரு முனை படத்தில் காட்டியுள்ள படி ஆதிப்புள்ளியுடன் ஒன்றியிருப்பதாக எடுத்துக்கொள்வோம். தண்டானது X அச்சில் வைக்கப்பட்டுள்ளது. தண்டினுடைய நிறை மையத்தைக் கண்டறிய, ஆதிப்புள்ளியிலிருந்து x தொலைவில் dx நீளமும் dm என்ற மீநுண் நிறையும் கொண்ட சிறுபகுதியை எடுத்துக் கொள்வோம். 


தண்டின் நீள் அடர்த்தி (ஓரலகு நீளத்திற்கான நிறை)

சிறிய பகுதியின் நிறை தண்டின் நிறை மையத்திற்கான சமன்பாட்டை கீழ்க்கண்டவாறு எழுதலாம்.


நிலை l/2 என்பது தண்டின் வடிவியல் மையமாகும். இதிலிருந்து சீரான தண்டினைப் பொறுத்தவரை அதன் வடிவியல் மையத்திலேயே (Geometric centre) நிறை மையம் அமையும் என்ற முடிவிற்கு வரலாம்.


11th Physics : UNIT 5 : Motion of System of Particles and Rigid Bodies : Solved Example Problems for Center of mass for uniform distribution of mass in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது இயற்பியல் : அலகு 5 : துகள்களாலான அமைப்பு மற்றும் திண்மப்பொருட்களின் இயக்கம் : தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள்: சீராகப் பரவியுள்ள நிறையின் நிறை மையம் - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது இயற்பியல் : அலகு 5 : துகள்களாலான அமைப்பு மற்றும் திண்மப்பொருட்களின் இயக்கம்