Home | 11 ஆம் வகுப்பு | 11வது இயற்பியல் | தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள்: புவியீர்ப்பினால் இயங்கும் பொருளின் இயக்கச் சமன்பாடுகள்: நிகழ்வு
   Posted On :  12.11.2022 08:17 pm

11வது இயற்பியல் : அலகு 2 : இயக்கவியல்

தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள்: புவியீர்ப்பினால் இயங்கும் பொருளின் இயக்கச் சமன்பாடுகள்: நிகழ்வு

இயற்பியல் : இயக்கவியல் : புவியீர்ப்பினால் இயங்கும் பொருளின் இயக்கச் சமன்பாடுகள்: நிகழ்வு

தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள் புவியீர்ப்பினால் இயங்கும் பொருளின் இயக்கச் சமன்பாடுகள்: நிகழ்வு (1): h உயரத்திலிருந்து தானே விழும் பொருள்:

எடுத்துக்காட்டு 2.34 

10 m உயரத்திலிருந்து இரும்புப் பந்து மற்றும் இறகு இரண்டும் ஒரே நேரத்தில் விழுகின்றன. இரும்புப் பந்து மற்றும் இறகு இரண்டும் தரையை அடைய எடுத்துக்கொள்ளும் நேரம் எவ்வளவு? 

அ) இரும்புப் பந்து மற்றும் இறகு இரண்டும் தரையை அடையும் போது அவற்றின் திசை வேகங்கள் எவ்வளவு? 

(காற்றுத் தடையைப் புறக்கணிக்கவும் மேலும் g = 10 m s-2 என்க)

தீர்வு: 

இயக்கச் சமன்பாடுகள் நிறையைச் சார்ந்ததல்ல. சமன்பாடு (2.18) இலிருந்து, இரும்புப் பந்து மற்றும் இறகு இரண்டும் ஒரே நேரத்தில் தரையை அடையும். இதனைப் பின்வருமாறு அறியலாம்.


எனவே, இரும்புப் பந்து மற்றும் இறகு இரண்டும் ஒரே நேரத்தில் தரையை அடையும் சமன்பாடு (2.19) இலிருந்து இரும்புப் பந்து மற்றும் இறகு தரையை அடையும்போது அவற்றின் திசைவேகங்கள் சமம். இதனைப் பின்வருமாறு அறியலாம். 



எடுத்துக்காட்டு 2.35

இயக்கச் சமன்பாடுகளைப் பயன்படுத்தி கிணற்றின் ஆழத்தை அளக்கமுடியுமா?


தண்ணீர் இல்லாத கிணறு ஒன்றைக் கருதுக. அதன் ஆழம் d என்க. ஒரு சிறிய எலுமிச்சம்பழம் மற்றும் நிறுத்து கடிகாரத்தை எடுத்துக்கொள்க. எலுமிச்சம்பழத்தை கிணற்றின் விளிம்பிலிருந்து போடும் போது கடிகாரத்தை இயக்கவும். அது கிணற்றின் தரையை அடையும்போது கடிகாரத்தை நிறுத்தி தரையை அடைய எடுத்துக்கொண்ட நேரத்தைக் கண்டுபிடிக்கவும். அதனை ‘t’ என்க.

எலுமிச்சம்பழத்தின் ஆரம்ப திசைவேகம் u = 0 மேலும் கிணறு முழுவதும் புவியீர்ப்பு முடுக்கம் ‘g’ மாறிலி. எனவே சீரான முடுக்கம் பெற்ற பொருளின் இயக்கச் சமன்பாடுகளை இங்கு பயன்படுத்தலாம்.


u = 0, s = d, a = g (கீழ் நோக்கிய இடப்பெயர்ச்சியை நேர்க்குறி y அச்சு திசையில் கருதுக)


g = 9.8ms-2 எனப் பிரதியிட்டு கிணற்றின் ஆழத்தினைக் கணக்கிடலாம்.


கணக்கீட்டில் ஏற்பட்ட பிழையினைக் கண்டறிய நமக்குக் கிணற்றின் சரியான ஆழம் தெரிய வேண்டும். இதனை ஒரு கயிற்றினைப் பயன்படுத்தி அறியலாம். ஒரு கயிற்றினை எடுத்து அதைக் கிணற்றின் தரையைத் தொடும் அளவுக்கு தொங்கவிட வேண்டும். இப்போது கயிற்றின் நீளம் dcorrect குறிக்கப்படுகிறது.


பிழைக்கான காரணம் என்ன? 

சோதனையை வெவ்வேறு நிறைகளுக்கு மீண்டும் நிகழ்த்தி அதன் முடிவினை dcorrect உடன் ஒவ்வொரு முறையும் ஒப்பிடவும்.


தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள் புவியீர்ப்பினால் இயங்கும் பொருளின் இயக்கச் சமன்பாடுகள்: நேர்வு (ii): பொருளொன்றை செங்குத்தாக மேல்நோக்கி எறிதல்


எடுத்துக்காட்டு 2.36

இரயில் வண்டியொன்று 54 km h-1 என்ற சராசரி வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. தடையை செலுத்திய பின்பு அவ்வண்டி 225 m சென்று நிற்கிறது எனில் இரயில் வண்டியின் எதிர் முடுக்கத்தைக் காண்க.

தீர்வு: இரயில் வண்டியின் இறுதித் திசைவேகம் v = 0 இரயில் வண்டியின் ஆரம்பத்திசைவேகம்


எதிர் முடுக்கம் எப்போதும் திசைவேகத்திற்கு எதிராக இருக்கும் எனவே,

11th Physics : UNIT 2 : Kinematics : Solved Example Problem for Equations of motion under gravity in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது இயற்பியல் : அலகு 2 : இயக்கவியல் : தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள்: புவியீர்ப்பினால் இயங்கும் பொருளின் இயக்கச் சமன்பாடுகள்: நிகழ்வு - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது இயற்பியல் : அலகு 2 : இயக்கவியல்