Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | பாடச்சுருக்கம், கலைச்சொற்கள்

காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் - இந்தியா | வரலாறு | சமூக அறிவியல் - பாடச்சுருக்கம், கலைச்சொற்கள் | 10th Social Science : History : Chapter 7 : Anti-Colonial Movements and the Birth of Nationalism

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 7 : காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்

பாடச்சுருக்கம், கலைச்சொற்கள்

சமூக அறிவியல் : வரலாறு : காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் : பாடச்சுருக்கம், கலைச்சொற்கள்

பாடச்சுருக்கம்


 பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆங்கிலேய இந்தியாவில் காலனிய அரசியல் மற்றும் பொருளாதார ஆதிக்கத்துக்கு எதிராக விவசாயிகள் மற்றும் பழங்குடியினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது அதிகரித்தது.

 

 பல்வேறு ஆங்கிலேய எதிர்ப்புப் போக்குகளின் முடிவாக 1857இல் மிகப்பெரிய கிளர்ச்சி ஏற்பட்டது. ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆளத் துவங்கியதற்கு முன்பிருந்த பழைய முறைமையை மீண்டும் நிலைநிறுத்தும் நோக்கங்களைக் கொண்ட, நிலப்பிரபுத்துவத் தலைவர்கள் இந்தக் கிளர்ச்சிக்கு தலைமை ஏற்றிருந்தனர்.

 

 கிளர்ச்சியின் தலைவர்கள் தொலைநோக்குப் பார்வையின்றி உள்ளூர் நோக்கங்களுக்காக கிளர்ச்சியை வழிநடத்திய போதிலும் கொடுங்கோன்மையான அன்னிய அரசுக்கு சவால்விட்டு எதிர்க்கும் வகையில் ஒரு முற்போக்கான முயற்சியாக அது அமைந்தது.

 

 சுரண்டல் வாத, அடக்குமுறை சார்ந்த ஆங்கிலேய அரசுக்கு எதிரான பொதுக்கருத்துகளை உருவாக்கிய இந்திய தேசிய இயக்கம், காலனி ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டங்களில் தங்களையும் ஈடுபடுத்திக்கொள்ள இளைய தலைமுறையினரை ஊக்கப்படுத்தியது.

 

 தேசிய அரசியலில் பொதுமக்கள் பங்கேற்பதை அதிகரிக்க சுதேசி இயக்கம் உதவியது.

 

கலைச்சொற்கள்




நினைத்ததை நிறைவேற்ற போடப்பட்ட திட்டம் : orchestrated organized to achieve a desired effect

 

இரகசிய : clandestine secret

 

மீட்கின்ற : restorative re-establishing

 

கீழ்க்குத்தகைக்கு விடுதல், உள் குத்தகைக்கு விடுதல் : subletting property leased by one lessee to another

 

அனைத்து மக்களுக்கும் சமமான : egalitarian equal rights for all people

 

வலுக்கட்டாயமாக : coercive forcible

 

தாக்குதல் மூலம் பணம், பொருள் பறித்தல் : extortion the practice of taking something from an unwilling person by physical force

 

நிறைவில்லாத, திருப்தியற்ற : disgruntled dissatisfied, frustrated 

 

மிக மோசமான, படுபாதாளமான : abysmal extremely bad, deep and bottomless

 

Tags : Anti-Colonial Movements and the Birth of Nationalism | India | History | Social Science காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் - இந்தியா | வரலாறு | சமூக அறிவியல்.
10th Social Science : History : Chapter 7 : Anti-Colonial Movements and the Birth of Nationalism : Summary, Glossary Anti-Colonial Movements and the Birth of Nationalism | India | History | Social Science in Tamil : 10th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 7 : காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் : பாடச்சுருக்கம், கலைச்சொற்கள் - காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் - இந்தியா | வரலாறு | சமூக அறிவியல் : 10 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 7 : காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்