வரலாறு - பாடச் சுருக்கம் - பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும் | 11th History : Chapter 3 : Rise of Territorial Kingdoms and New Religious Sects
பாடச் சுருக்கம்
• பொ.ஆ.மு. 1000-700க்கும் இடைப்பட்ட
காலத்தில் வேளாண்நில விரிவாக்கத்தில் இரும்பு குறிப்பிடத்தக்க பங்கை வகித்தது.
•
வேளாண் உபரி, கைவினைத்தொழில்களின் வளர்ச்சி,
வணிக விரிவாக்கம், மக்கள் தொகைப் பெருக்கம் ஆகியவை கங்கைச் சமவெளியில் நகரங்களும் பரிமாற்ற
மையங்களும் தோன்றுவதற்கு வழிவகுத்தன.
•
மகாஜனபதங்கள், அவற்றின் அரசியல் இயல்புகளின்
அடிப்படையில் கண-சங்கங்கள் என்றும், குடித்தலைமை ஆட்சி என்றும் பிரிக்கப்பட்டன.
•
ஆசீவகர்களின் கருத்துப்படி, லாபமும்
நஷ்டமும், இன்பமும் துன்பமும், வாழ்வும் மரணமும் வாழ்வின் தவிர்க்க இயலாத கூறுகளாகும்.
•
மகாவீரரின் மும்மணிகளும், புத்தரின்
எண்வழிப்பாதையும் பொ.ஆ.மு. ஆறாம் நூற்றாண்டில் இந்தியாவில் புதிய அறிவு மலர்ச்சியை
ஏற்படுத்தியது.
•
பொ.ஆ.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து
சமண, பௌத்த மதங்களின் செல்வாக்கு தமிழ் நாட்டில் பரவியது.