இயற்கணிதம் | மூன்றாம் பருவம் அலகு 3 | 7ஆம் வகுப்பு கணக்கு - பாடச்சுருக்கம் | 7th Maths : Term 3 Unit 3 : Algebra
பாடச்சுருக்கம்
• பின்வரும் முற்றொருமைகள் வடிவக்கணித முறையில் நிறுவப்பட்டது:
• (x + a)(x + b) = x2 + x(a+b)+ab
• (a+b)2 = a2 + 2ab + b2
• (a-b)2 = a2 - 2ab + b2 மற்றும்
• (a + b)(a - b)=a2 – b2.
• இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட கோவைகளின் பெருக்கற்பலனாக ஒரு கோவையை எழுதினால், அவற்றை அந்தக் கோவையின் காரணிகள் எனப்படும்.
• ஓர் இயற்கணிதக் கோவையை அதன் காரணிகளின் பெருக்கற்பலனாக எழுதும் முறையைக் காரணிப்படுத்துதல் எனப்படும்.
• இரு இயற்கணிதக் கோவைகள் சமமற்றவை எனக் கூறிடும் ஓர் இயற்கணிதக் கூற்று இயற்கணித அசமன்பாடு எனப்படும்.
• அசமன்பாடுகளில் >,≥,< மற்றும் ≤ ஆகிய நான்கு அசமக் குறியீடுகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் இரு இயற்கணிதக் கோவைகள் இணைக்கப்படுகிறது.
• ஓர் அசமன்பாட்டின் இருபுறமும், ஒரு பூச்சியமற்ற மிகை எண்ணால் கூட்டவோ, கழிக்கவோ, பெருக்கவோ அல்லது வகுக்கவோ செய்தால் அதன் அசமத்தன்மை (inequlity) மாறாது.
• ஓர் அசமன்பாட்டின் இருபுறமும் ஒரு பூச்சியமற்ற குறை எண்ணால் பெருக்கினாலோ, அல்லது வகுத்தாலோ அதன் அசமக்குறி மாறும். உதாரணமாக, x<y ⇒ -x>-y.
• ஓர் அசமன்பாட்டின் தீர்வுகளை அவற்றின் மெய் மடிப்புகளை பல்வேறு வண்ணங்களில் எண் கோட்டில் குறித்து குறிப்பிடலாம்.
இணையச் செயல்பாடு
இயற்கணிதம்
செயல்பாட்டின் இறுதியில் கிடைக்கப் பெறுவது
படி 1
இணையத்துள் உரலியை திறந்து கீழே கொடுக்கப்பட்டுள்ள உரலியை தட்டச்சு செய்யவும் அல்லது விரைவுக் குறியீட்டினை ஸ்கேன் செய்யவும். “(x + a)(x + b)” எனப் பெயரிடப்பட்டுள்ள ஜீயோ ஜீப்ரா பணித்தாள் திறக்கும். x, a, மற்றும் b இன் மதிப்புகளை மாற்ற நழுவியை நகர்த்தவும். பின் வலதுபுறத்தில் உள்ள படிகளை சரிபார்க்கவும்.
படி 2
முதல் படியை நிறைவு செய்தவுடன் இடதுபுறத்தில் உள்ள "அசமன்பாடு"யை சொடுக்கவும். “a” இன் மதிப்பை மாற்ற கீழே உள்ள நழுவியை நகர்த்தவும். எண்கோட்டில் தகுந்த சமமின்மைகளை காண குறியீட்டுப் பெட்டிகளை சொடுக்கவும்.
செயல்பாட்டின் உரலி
(x+a)(x+b): https://www.geogebra.org/m/f4w7csup#material/nguv3yey
அல்லது விரைவுக் குறியீட்டை ஸ்கேன் செய்க.