இயல் 7 : 11 ஆம் வகுப்பு தமிழ் - கேள்விகள் மற்றும் பதில்கள் | 11th Tamil : Chapter 7 : Vaiya thalamai kol
இயல் 7
வையத் தலைமை கொள்
நம்மை அளப்போம்
பலவுள் தெரிக
1. ‘ஜனப்பிரளயம்’ என்னும் வடமொழிச் சொல்லுக்குரிய தமிழ்ச்சொல் எது?
அ) மக்கள் அலை
ஆ) உயிர் அலை
இ) மக்கள் வெள்ளம்
ஈ) மக்கள் அவை
[விடை: இ) மக்கள் வெள்ளம்]
2. கூற்று : எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான பதிற்றுப்பத்து, புறம் சார்ந்த நூல்,
காரணம் :
சேரமன்னர் பதின்மரின் சிறப்புகளைக் கூறுகிறது இந்நூல்.
அ) கூற்று சரி; காரணம் தவறு
ஆ) இரண்டும் சரி
இ) இரண்டிற்கும் தொடர்பில்லை
ஈ) கூற்று தவறு; காரணம் சரி
[விடை: ஆ) இரண்டும் சரி]
3. 'அழகும் அறிவும் இளமையும் வாய்த்தவன்' - யார் யாரிடம் கூறியது?
அ) அமைச்சர் கவிஞரிடம்
ஆ) மன்னர் அமைச்சரிடம்
இ) அமைச்சர் மன்னரிடம்
ஈ) மன்னர் அமுதவல்லியிடம்
[விடை: இ) அமைச்சர் மன்னரிடம்]
4. அடையாறுப் பாலத்தின் சுவற்றில் எழுதாதீர்கள் - இவ்வரியில் உள்ள சொற்பிழைகளின் திருத்தம்
அ) அடையாற்றுப் பாலத்தின் சுவற்றில்
ஆ) அடையாறுப் பாலத்தின் சுவரில்
இ) அடையாறுப் பாலத்தின் சுவற்றில்
ஈ) அடையாற்றுப் பாலத்தின் சுவரில்
[விடை: ஈ) அடையாற்றுப் பாலத்தின் சுவரில்)
5. ஆக்கப்பெயர் விகுதி பெறாத சொல்லைத் தேர்க,
அ) காவலாளி
ஆ) மேலாளர்
இ) உதவியாள்
ஈ) ஆசிரியர்
[விடை: ஈ) ஆசிரியர்]
குறுவினா
1. 'நாழிக்குள் திணிக்கும் மருந்துபோல்' என்னும் உவமையை ஜீவானந்தம் பேச்சுடன் ஒப்பிடுக.
விடை
உவமை:
வாண வேடிக்கைக்காரன் நாழிக்குள் திணிக்கும் மருந்துபோல
உவமேயம்:
ஜீவானந்தம் இரண்டு கைப்பிடி விசயம்தான் எடுத்துக் கொள்வார்.
பொருள்:
ஜீவா மேடை மீது ஏறியதும் இரண்டு கைப்பிடி விஷயங்களுக்கு நெருப்பு வைத்து விடுவார். அதிலிருந்து வர்ணஜாலங்கள் தோன்றும். பச்சையும் சிவப்பும் மஞ்சளும் உதிரும். குடைகுடையாய் மாலை மாலையாய் இறங்கி வரும்.
2. உழைப்பாளர்களின் தோள் வலிமையால் விளைந்தன யாவை?
விடை
❖ ஓடி வருகின்ற ஆற்று நீரைத் தேக்கினர்.
❖ நீரைக்கொண்டு வாய்க்கால் அமைத்தனர்.
❖ பயன்படாத நிலத்தைப் பண்படுத்தினர்.
❖ உழுது வேளாண் தொழில் செய்தனர்.
❖ வேளார் தொழில் செய்தவர் கூடி வாழ சிற்றூர் அமைத்தனர்.
❖ கல்லையும் மலையையும் பிளந்து கனிம வளங்களைக் கண்டறிந்தனர்.
❖ கடலில் மூழ்கி முத்தும், மண்ணைத் தோண்டி தங்கமும் எடுத்தனர்..
இவை யாவும் உழைப்பாளர்களின் தோள் வலிமையால் விளைந்தனவாகும்.
3. அலைகடல், புதுக்கியவர் - இலக்கணக்குறிப்புத் தருக.
விடை
அலைகடல் - வினைத்தொகை
புதுக்கியவர் - வினையாலணையும் பெயர்
4. செந்துறைப் பாடாண்பாட்டு - துறை விளக்கம் எழுதுக.
விடை
துறை விளக்கம்:
செந்துறையாவது உலகினுள் இயற்கை வகையான் இயன்ற மக்களைப் பாடுதல் ஆகும். இதுவே செந்துறைப் பாடாண்பாட்டு எனப்படும்.
எ.கா: "உறுபசி ஓவாப்பிணி செறுபகை இன்மையால்' - பதிற்றுப்பத்து,
சிறுவினா
1. ஜீவாவின் பேச்சுநடை குறித்துச் சுந்தரராமசாமி கூறுவன யாவை?
விடை
❖ பேச்சுக்கலை என்பது ஜீவா பெற்ற வரம்.
❖ ஜீவா பேச்சில் வெளிப்படும் உத்திகளும், பேச்சு அமைப்பு நூதனமாகவும் நளினமாகவும் இருக்கும்.
❖ பேச்சுக்கலையை விளக்கும் பாடப்புத்தகங்களைக் காலடியில் போட்டு மிதித்தவர் ஜீவா.
❖ அவருடைய பேச்சுப்பாணி இரவல்பாணி அல்ல; கற்று அறிந்துதும் அல்ல.
❖ நாட்டு மக்களின் தரம் அனுபவம், பழக்கவழக்கம் மற்றும் நம்பிக்கையினைத் தெரிந்த மனிதனாக, விஷயத்தை கலைநோக்கோடு அணுகியும்.
❖ கற்பனையும் கலந்து நாளடைவில் வெற்றிகரமாகவும் அமைத்துக் கொண்ட பேச்சுப் பாணியாகும்,
2. 'உயர்தமிழை உயிரென்று போற்றுமின்கள்' - இடம் சுட்டிப் பொருள்விளக்கம் தருக.
விடை
இடம்:
பாரதிதாசன் எழுதிய புரட்சிக்கவி எனும் நூலில் இப்பாடல் வரி இடம்பெற்றுள்ளது.
பொருள்:
மன்னனால் மரணத் தண்டனைப் பெற்ற உதாரன் நாட்டு மக்களைப் பார்த்துக் கூறுதல்.
விளக்கம்:
தமிழில் திறமை இருந்ததால், மன்னன் தன் மகளுக்குக் கவிதை கற்பிக்க என்னை அழைத்தான். தமிழ்க்கவிஞன் என்பதால் அமுதவல்லி என்னைக் காதலித்தாள். அமுதம் போன்ற தமிழ்தான் என் இறப்பிற்குக் காரணம் என்று மக்கள் சமுதாயம் தவறாக எண்ணக்கூடாது. தாய்மொழிக்கு பழி வந்தால் தாங்கும் மனமில்லை. அதனால் உயர்வான தாய்தமிழை உயிராகப் போற்றுங்கள் என்று உதாரன் கூறுகிறான்.
3. பெருங்காடு, உழுதுழுது - பிரித்துப் புணர்ச்சி விதி எழுதுக.
விடை
பெருங்காடு = பெருமை + காடு
விதி :‘ஈறுபோதல்' எனும் விதிப்படி, மை கெட்டு பெரு + காடு என்றானது.
விதி : 'இளமிகல்' எனும் விதிப்படிங் தோன்றி பெருங்காடு எனப் புணார்ந்தது.
உழுதுழுது = உழுது + உழுது
விதி : 'உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்' எனும் விதிப்படி, உழுத் + உழுது என்றானது.
விதி : 'உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே' (த் + உ = து) உழுதுழுது எனப் புணர்ந்தது.
4. 'சேரநாடு செல்வ வளம் மிக்கது' என்ற கூற்றிற்குரிய காரணங்களைக் குறிப்பிடுக.
விடை
❖ சேரநாடு எல்லா வளங்களும் பெற்றதால் மக்கள் பசி, பிணி அறியாது புலம்பெயராமல் சுற்றத்தாரோடு இந்நாட்டிலேயே வாழ விரும்பினர்.
❖ சேரன் தன் நாட்டில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் இடையறாது கொடுக்கும் பண்புடையவன்.
❖ சான்றோர்க்கு வாரி வழங்கும் வள்ளன்மைக் கொண்டவன்.
❖ எப்பொழுதும் விழாக்கள் நிகழ்வறும் நாட்டிற்கு உரிமை உடையவன்.
❖ நீண்ட புகழை உடைய மன்னன் தன் நாட்டையும், மக்களையும் கண்னெனக் காப்பவன்.
❖ புதுவருவாய் பெருக்கமும், ஈத்துவக்கும் இன்பமும் உடையவன் சேரலாதன்.
5. ஆக்கப்பெயர் விகுதிகள் தற்கால வாழ்வியலில் மிகுந்துள்ளன – ஏன்?
விடை
ஆக்கப்பெயர்களால் புதிய சொற்கள் உருவாகின்றன.
மொழி காலந்தோறும் வளர்வதற்கு ஆக்கப்பெயர்கள் துணைநிற்கின்றன.
❖ சொற்களோடு ஆக்கப்பெயர் விகுதிகள் சேரும்போது எண்ணற்ற புதியச்சொற்கள் உருவாகிச் சொற்களஞ்சியம் விரிவடைகிறது.
❖ அதனால் தற்காலத்தில் ஆக்கப்பெயர் சொற்கள் பேச்சுவழக்கில் மிகுதியாக உள்ளன.
எ.கா:
காரன் – காரி – காரர், ஆள் - ஆளர் - ஆளி, தாரர், மானம் என்பன ஆக்கப்பெயர் விகுதிகள்.
நெடுவினா
1. சுந்தர ராமசாமியின் “காற்றில் கலந்த பேரோசை" என்னும் தலைப்பு ஜீவாவின் வாழ்க்கைக்கு எங்ஙனம் பொருந்தும் என்பதை விளக்குக.
விடை
ஜீவா பற்றி:
அரசியல் மற்றும் பொதுவுடமைச் சிந்தனையிலும் தன்னைக் கூர்வாளாய் மெருகேற்றிக் கொண்டவர் ஜீவா. மேடையில் பேசும்போது பரவும் பேரோசையில் ஜீவா கலந்து விடுவதே அவர் விரும்பிய மரணம்.
ஜீவா மீது நண்பர்கள் நம்பிக்கை:
ஜனப் பிரளயத்தின் முன்னால் ஜீவா, சங்கநாதம் எழுப்பிக் கொண்டிருக்கும் போதே, அண்டம் முட்ட எழுந்து நாற்றிசையிலும் அலை அலையாய்ப் பரவும் பேரோசையில் ஜீவா கலந்து விடுவார். ஜீவாவின் முத்திரை கொண்ட மரணமாக இருக்கும் என்பது நண்பர்களின் நம்பிக்கை. ஜீவா இறுதி மூச்சு வரையிலும் கர்ஜித்துக் கொண்டுதான் இருப்பான் என்பதும் நண்பர்களின் நம்பிக்கை.
நெஞ்சோடு வளர்ந்த கனவு:
ஜீவா தனக்கென ஒரு தத்துவத்தைச் சிருஷ்டித்தவர் அல்லர். ஜீவா தான் விரும்பிய தத்துவத்தை, சித்தாந்த கருத்துகளை, தனது திறமையால், கலைநோக்கால் உயிர் பெறச்செய்து மனிதன் முன் படைத்தவர். சிறுபிராயத்திலிருந்தே அவர் நெஞ்சோடு இருந்த கனவு மனித வெள்ளத்தை தான் முன்னின்று, தலைமை தாங்கி, உன்னத எதிர்காலத்துக்கு அழைத்துச் செல்லவேண்டும் என்பதேயாகும்.
கொள்கையும் - நம்பிக்கையும்:
மனிதச் சிந்தனையிடம் நீ (அது) சிந்தித்தவற்றில் தன்னிடம் கூறு என்கிறார் ஜீவா. அதனை எட்டுத் திசையிலும் பரப்பி மனிதச்சாதியை மனிதச்சிந்தனை சொன்ன இடத்திற்கு அழைத்து வருவேன் என்கிறார்.
ஜீவாவின் வேண்டுகோள்:
மனிதச் சிந்தனையின் பேராற்றலிடம் தன்னைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும், அதுவே தனது பிரார்த்தனையும் என்கிறார். இதுவே, ஜீவாவின் மனோபாவம், நம்பிக்கையும் ஆகும்.
பேச்சுநடை:
ஜீவா பெற்ற வரம் பேச்சுக்கலையே! ஜீவா பேச்சில் உத்திகளும், பேச்சழகும் நூதனமாக இருக்கும். நம் நாட்டு மக்களின் தரம், அனுபவம், பழக்கவழக்கம், நம்பிக்கையை நன்கு அறிந்தவர். அவைகளை கலைநோக்கோடு அணுகிக் கற்பனை கலந்து வெற்றிகரமாக அமைத்த பாணி இரவல்பாணி அல்ல.
இரண்டு கைப்பிடி விஷயம்:
ஒரு சில கருத்துகளை விரிவாகச் சொல்லி மக்களுக்குப் புரிய வைத்துவிட்டால் போதும் என்பதே ஜீவாவின் எண்ணம்.
பசுமையான எண்ணங்கள்:
தான் படிக்கிறேன், படித்துக்கொண்டே இருப்பேன் என்ற எண்ணம் அவரிடம் பசுமையாக இருந்தது. தான் கரைத்துக் குடித்த ஒரு விஷயத்தை ஒரு கற்றுக்குட்டி அவரிடம் பேசினாலும் காது கொடுப்பார்.
ஆற்றில் விழுந்த கிளை:
சாதாரணக் குடும்பத்தில் பிறந்த ஜீவா என்கிற சொரிமுத்து ஆற்றில் போட்ட கிளையைப்போல் வாழ்ந்திருக்கவேண்டும். ஆனால் இயற்கையின் விதிகளை மறுத்து எதிர் நீச்சல் போட்டார்.
முடிவுரை:
என் வாழ்வு என் கைகளில் என்று நம்பியவர். அவர் வாழ்க்கையை ஆராய்கின்றபோது அவர் நம்பிக்கையேப் பலித்தது. நீரில் விழுந்த கிளை மலைக்குச் சென்றதுபோல் ஜீவா என்னும் பேரோசை காற்றில் கலந்துவிட்டது. ஜீவாவின் உயிர்காற்றும் கடந்துவிட்டது.
2. பாரதிதாசன் ஒரு ‘புரட்சிக்கவி' என்பதை உதாரன் பாத்திரம் வாயிலாக மெய்ப்பிக்க.
விடை
❖ வடமொழயில் எழுதப்பட்ட ‘பில்கணீயம்' காவியத்தை தழுவி பாரதிதாசன் புரட்சிக்கவியைப் படைத்துள்ளார். அதில் புரட்சிக்கவியாக இடம்பெற்றவன் உதாரன்.
❖ தனிமனித ஆட்சியை, ஆதிக்கத்தை அழித்து மக்களாட்சியை நிறுவுகிறான் உதாரன். அதற்கு அவன் ஆற்றிய வீரஉரைகளே காரணம்.
❖ அவ்வுரைகள் அனைத்தும் பாரதிதாசனின் சிந்தையில் உருவானவை.
உதாரனுக்கு வாய்ப்பு:
❖ தொழுநோயாளி என அறிமுகப்படுத்தப்பட்ட இளவரசிக்குப் பார்வையற்றவனாகக் கூறப்பட்டவன் தான் உதாரன். அழகும் அறிவும் வாய்ந்த தமிழ்க்கவிஞன்.
❖இளவரசிக்கு கவிதை எழுதும் கலையைக் கற்பிக்கத் தொடங்கினான்.
❖ இறுதியில் காதலர்களாய் களம் புகுந்தனர்.
❖ மரண தண்டனைக்கு ஆளாகி கொலைக்களம் சென்றனர்.
❖ உதாரன் தனக்கு கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி புரட்சி செய்கிறான்.
முழக்கம்:
இம்முழக்கம் எல்லாம் பாரதிதாசனதே!
❖ உழைப்பாளர்களின் உழைப்பால் விளைந்த நலன்களை பட்டியல் இடுகிறான்.
❖ "பாழ்நிலத்தை அந்நாளில் பதுக்கியவர் யார்?”
❖ “பயன் விளைக்கும் நிறை உழைப்புத் தோள்கள் எவரின் தோள்கள்?”
❖ "கருவியெலாம் செய்த கை யார் கை?”
❖ "கடல் முத்தை எடுக்க அடக்கிய மூச்சு எவரின் மூச்சு?"
இவையெல்லாம் பாரதிதாசன் உணர்ச்சியின் வெளிப்பாடு.
புரட்சியைத் தூண்டுதல்:
❖ மக்கள் உள்ளத்தில் புரட்சியைத் தூண்ட விரும்புகிறான் உதாரன்.
❖ தனக்கும் அரசனுக்கும் உண்டான வழக்கை எடுத்துரைக்கிறான்.
❖ “மக்களுக்காக ஆட்சியா?” “ஆட்சிக்காக மக்களா?” என்னும் கேள்வியை மக்கள் முன்னே வைக்கிறான்.
❖ மக்களுக்காக மட்டுமே ஆட்சி அமைய வேண்டும் என்கிறான்.
❖ "ஒரு மனிதன் தேவைக்கு இந்த தேசம் உண்டென்றால், இந்த தேசம் ஒழிதல் நன்றாம்” என்கிறான்.
தமிழ்ப்பற்று:
❖ தமிழ்மேல் உள்ள பற்றை உதாரன் மூலம் வெளிப்படுத்துகிறார் பாரதிதாசன்.
❖ "அமுது சொல்லும் இந்தத் தமிழ், என் ஆவி, அழிவதற்கு காரணமானது” என்று சமுதாயம் நினைக்குமோ?
❖ “என் தாய்மொழிக்குப் பழிவந்தால் சகிப்பதுண்டோ?” என வேதனைப்படுகிறான்.
மக்களை வேண்டுதல்:
“யான் அறிந்த தமிழே என் உயிர் போவதற்குக் காரணம் என மக்கள் என்னை இகழக் கூடாது.” மக்களே!
"உமை ஒன்று வேண்டுகிறேன்; குற்றமில்லா உயர்தமிழை உயிர் எனப் போற்றுங்கள்" என வேண்டுகிறான்.
3. சிந்தனைப்பட்டிமன்றத்தின் நிகழ்வுகளைச் சுவை குன்றாமல் தொகுத்து எழுதுக.
விடை
சிந்தனைப்பட்டிமன்றத்தின் தலைப்பு:
இளைஞர்களின் முன்னேற்றத்திற்குப் பெரிதும் உதவுவது வீடா? நாடா?
அரசுப்பள்ளியில் நடைபெற்ற இளைஞர்களின் முன்னேற்றத்திற்குப் பெரிதும் உதவுவது வீடா? நாடா? எனும் தலைப்பில் பட்டிமன்ற நிகழ்வுகள்..
வீடே என்ற தலைப்பில் தன் தரப்பு வாதங்களை எழிலன் என்பவர் அழகாக எடுத்துரைத்தார். அன்பையும், அறிவையும் புகட்டி அடித்தளமிட்டு, வெற்றிகளைக் கட்டி முத்தமிட உதவுவது வீடு. உலகை அறிமுகப்படுத்துவது விடே. வீடே ஒருவனுக்கு அடித்தளம். அதன் மீதுதான் நம் வெற்றி கட்டப்படுகிறது. ஆகவே இளையோர் முன்னேற்றத்திற்கு வீடே என தீர்ப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று எழிலன் உரையை முடித்தார்.
வீடு சிறிய கூடு. சிறுவட்டத்தைத் தாண்டி நாட்டில் கால் வைக்கும்போதுதான் நலம் பல விழையும் என்ற தலைப்பில் அப்துல்லா தன் வாதத்தை ஆரம்பித்தார். புத்தகங்கள் வழியாகக் கல்விச்சாலைகள் உலகத்தைத் திறந்து காட்டுகின்றன. அறிவியல் தொழில்நுட்பத்தை நாடுதான் நமக்குக் காட்டுகிறது. விஞ்ஞானிகளாக, கல்வியாளர்களாக, கவிஞர்களாகப் பெண்கள் கம்பீரமாக நடைபோட நாடே காரணம் என அப்துல்லா பேசினார்.
நடுவர் அவர்கள் இருபக்க வாதங்களையும் ஆராய்ந்து அலசி ஆண் பெர் சமத்துவச் சிந்தளை, பேதங்களைக் கடந்த தோழமை, கல்வி சார்ந்த உயர் கருத்துகள் என எல்லாவற்றையும் முறையாக முழுமையாக வழங்குவதும் வழிகாட்டுவதும் நாடே என்று தீர்ப்பு வழங்கினார்.
மொழியை ஆள்வோம்
சான்றோர் சித்திரம்
தமிழ் மொழியில் மறந்ததும் மறைந்ததுமான சிறந்த செய்திகள், அளவுகடந்து உள்ளன. அவற்றை வெளிக்கொணர்ந்து, வீரிய உணர்வுடன் வெளியிட்டவர் அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி ஆவார். அவர் எழுதிய கட்டுரைகள் அனைத்தும் புதிய புதிய செய்திகளைப் புலப்படுத்திய விந்தைப் படைப்புகள். இராமேசுவரத் தீவு, உறையூர் அழிந்த வரலாறு, மறைந்துபோன மருங்காப்பட்டினம் போன்ற தனித்தன்மைகொண்ட அவர்தம் கட்டுரைகள் மயிலை சீனி. வேங்கடசாமி வரலாற்றில் பதிய வெளிச்சம் பாய்ச்சின. கொங்கு நாட்டு வரலாறு, துளுவ நாட்டு வரலாறு, சேரன் செங்குட்டுவன், மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன், மூன்றாம் நந்திவர்மன் முதலிய நூல்கள் அவர் நமக்கு வழங்கியுள்ள வரலாற்றுச் செல்வங்கள். அவருடைய ‘களப்பிரர் காலத் தமிழகம்” என்னும் ஆய்வுநூல், இருண்ட காலம் என்று ஆய்வாளர்களால் வருணிக்கப்பட்ட களப்பிரர் காலத்திற்கு ஒளியூட்டி, வரலாற்றுத் தடத்தைச் செப்பனிட்டது.
நகராட்சிப் பள்ளி ஆசிரியராக நெடுங்காலம் பணியாற்றிய அவர் தன்னுணர்வால், உறுதியான உழைப்பால், தமிழ்ப்பற்றால் பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் மதித்துப் போற்றும் பணிகளைச் செய்தார். ஆங்கிலம், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவர். சிறந்த வரலாற்றாசிரியர், நடுநிலை பிறழாத ஆய்வாளர், மொழியியல் அறிஞர், இலக்கியத் திறனாய்வாளர் என்றெல்லாம் போற்றப்பட்ட பன்முகச் சிறப்புக் கொண்டவர். அவருக்கு மதுரைப் பல்கலைக் கழகம் 1980 ஆம் ஆண்டு 'தமிழ்ப் பேரவைச் செம்மல்' என்னும் பட்டமளித்து பாராட்டியது. கிறித்துவமும் தமிழும், சமணமும் தமிழும் பௌத்தமும் தமிழும், மறைந்து போன தமிழ்நூல்கள் போன்ற பலநூல்களால் தமிழ் ஆய்வு வரலாற்றில் மயிலை சீனி. வேங்கடசாமி அழியாச் சிறப்பிடம் பெற்றுள்ளார்.
வினாக்கள்:
1. மறந்ததும் மறைந்ததும் இதுபோன்ற இரண்டு தொடர்களை உருவாக்குக.
எ.கா: படித்ததும் படைத்ததும்
2. அழிந்த வரலாறு, புதிய வெளிச்சம் - அடிக்கோடிட்ட சொற்களின் எச்ச வகைகளை எழுதுக.
3. அழியாச் சிறப்பிடம் இலக்கணக்குறிப்புத் தருக.
4. முதலிய, முதலான - பொருளறிந்து சொற்றொடர் அமைக்க.
5. பத்தியில் உள்ள உயர்வு சிறப்பு உம்மையைக் கண்டு எழுதுக.
விடைகள்:
1. கரந்ததும் கரைந்ததும்; கலந்ததும் - கலைந்ததும்
2. அழிந்த வரலாறு - பெயரெச்சம்; புதிய வெளிச்சம் - குறிப்புப் பெயரெச்சம்
3. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
4. முதலிய : மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன், மூன்றாம் நந்திவர்மன் முதலிய நூல்கள் மயிலை சீனி. வேங்கடசாமி நமக்கு வழங்கியுள்ள வரலாற்றுச் செல்வங்கள்.
முதலான : அறிவியல், திறமைசாலி, கோழைத்தனம், சமத்துவம், பெண்ணியம், பேச்சாளன், ஏற்றுமதி முதலான சொற்கள் ஆக்கப் பெயர்ச் சொற்களே.
5. போற்றும் - உயர்வு சிறப்பும்மை.
தமிழாக்கம் தருக.
Balu : Hi, Good evening.
Velu : Hi Balu, Good evening.
Balu : Yesterday you were watching
the Republic day function the whole day.
Velu : Yes, I was touched by one
award ceremony.
Balu : Which award?
Velu : Param Vir Chakra award, highest
award for army personnel.
Balu : Why were you touched?
Velu : Most of the awards were
received by the wives of soldiers
posthumously.
Balu : Why? What do you mean by posthumous?
Velu : it means ' after death' Many
soldiers had laid down their lives protecting the border of our Motherland. They have
sacrificed their lives to save our Country So that we can be free and safe.
விடை
நன்மாலை வணக்கம்.
பாலு, நன்மாலை வணக்கம்.
நேற்று நாள் முழுவதும் குடியரசு நாள் விழா நிகழ்வுகளைப் பார்த்துக் கொண்டிருந்தாயா?
ஆம். அதில் ஒரு விருது வழங்கும் நிகழ்வு என் மனதை நெகிழ வைத்துவிட்டது.
எந்த விருது?
பரம்வீர் சக்ரா விருது. இராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் தனித்துவ விருது.
ஏன் நீ மனம் நெகிழ்ந்தாய்?
அந்த விருதுகள் பெரும்பாலும் வீரமரணமுற்ற வீரர்களின் மனைவிகளே பெற்றுக்கொள்கிறார்கள்.
ஏன் வீரர்களின் மனைவிகள் பெற்றுக் கொள்கிறார்கள்? போஸ்துமஸ் என்பதன் பொருள் என்ன?
போஸ்துமஸ் என்றால் மரணத்திற்குப்பின் என்று பொருள். பெரும்பான்மையான வீரர்கள் நமது தாய்நாட்டின் எல்லை காக்க தமது வாழ்க்கையை இழந்தனர். அவ்வீரர்கள் நமது தாய்நாட்டைக் காக்கவே தமது இன்னுயிரைத் தியாகம் செய்தனர். அதனால்தான் நாம் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழ்கிறோம்.
மரபுச்சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.
சான்று: எதிர்நீச்சல்
வாழ்க்கையில் எத்தனை தோல்விகள் வந்தாலும் அவற்றைக் கடந்து எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற வேண்டும்.
1. சொந்தக்காலில் நிற்றல்: (தன் கையே தனக்கு உதவும்)
படித்துப் பதவி பெற்று, பெற்றோர் போற்றுமாறு சொந்தக் காலில் நிற்றல் பாராட்டுக்குரியது,
2. தாளம் போடுதல்: (எதைச் சொன்னாலும் அப்படியே ஏற்றுக்கொள்ளுதல்)
எக்கருத்தாயினும் எவர் கூறினாலும் பொதுநலத்திற்கு உகந்ததாக இல்லாவிடில், ஆமாம் என்றுதாளம் போடுதல் அறிவுடையார் செயல் ஆகாது.
3. மதில்மேல் பூனை:
நல்லவர் பக்கம் செல்வதா தீயவர் பக்கம் சாய்வதா என்று மதில்மேல் பூனை போல் நிற்காமல் நல்லவர் பக்கமே செல்.
4. நிறைகுடம்;
சுற்றறிந்த சான்றோர் அவையில் நிறைகுடம் போல அமைதியாக இருக்க வேண்டும்.
5. கைதூக்கிவிடுதல்:
வாழ்க்கைப் பாதையில் இன்னல்களையே அனுபவிப்போர்க்கு நம்மாலான உதவிகளைச் செய்து கைதூக்கி விடுதல் பேருதவியாகும்.
6. கண்ணாயிருத்தல்:
தான் மேற்கொண்ட பணிகளில் இடையே இடர்வந்துற்றபோதும் காரியத்தில் கண்ணாயிருத்தல் வேண்டுவதே நலம் தரும்.
7. அவசரக்குடுக்கை: (எண்ணித் துணியார்)
சான்றோர் நிறைந்துள்ள அவையில் பதற்றப்பட்டு அவசரக் குடுக்கையாய் சொற்களைக் கொட்டிவிடக் கூடாது.
8. முதலைக் கண்ணீர்: (பொய் அழுகை)
தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு முதலைக்கண்ணீர் வடிக்க வேண்டாம்.
9. கானல்நீர்: (இருப்பது போல தோன்றும் ஆனால் இராது)
போதைப் பொருள் இன்பம் தரும் ஆனால் அது இன்பம் அல்ல கானல்நீர் போல ஆகிவிடும்.
வரைபடம் கொண்டு விவரிக்க.
நீங்கள் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருக்கிறீர்கள். வழி தெரியாத ஒருவர், உங்களிடம் வந்து நூகலகத்திற்கு வழி கேட்கிறார். கீழ்க்காணும் வரைபடத்தைக் கொண்டு, அப்புதியவருக்கு வழிகாட்டுங்கள்.
விடை
❖ பவணந்தி தெரு வழியாக கிழக்கே நேராகச் செல்லுங்கள்.
❖ மேலைத்தேர்த் தெரு வரும். மேலைத்தேர்த் தெருவின் வலப்பறமாகச் செல்லுங்கள். அறம் வளர்த்த மாடத்தெரு குறுக்கிடும். அறம் வளர்த்த மாடத்தெரு குறுக்கிடும் இடத்தில் காந்திச் சதுக்கம் இருக்கும்.
❖ அறம் வளர்த்த மாடத்தெருவில் நேராகச் சென்றால் கீழைத்தேர்த்தெரு குறுக்கிடும். எதிர்வரிசையில் நூலகம் இருக்கும்.
இலக்கியநயம் பாரட்டுக.
சுதந்திரம் தருகின்ற மகிழ்ச்சியைக் காட்டிலும்
சுகம்தரும் உணர்ச்சியும் வேறுண்டோ?
பதம்தரும் பெருமையும் பணம்தரும் போகமும்
பார்த்தால் அதைவிடக் கீழன்றோ?
இதம்தரும் அறங்களும் இசையுடன் வாழ்தலும்
எல்லாம் சுதந்திரம் இருந்தால்தான்
நிதம்தரும் துயர்களை நிமர்ந்துநின் றெதிர்த்திட
நிச்சயம் சுதந்திரம் அது வேண்டும்.
- நாமக்கல் கவிஞர்.
பெட்டிக்கு வந்த பின்
எல்லாக் காய்களும் சமம்தான்
சதுரங்கக் காய்கள்
- இஸ்ஸா
சதுரங்க விளையாட்டின்போது வெவ்வேறு அதிகாரங்களைப் பெறும் காய்கள் பெட்டிக்குள் வந்தபின் சமமாகின்றன. மனிதர் நிலையும் அத்தன்மையதே.
விடை
தலைப்பு: வேண்டும் சுதந்திரம்.
திரண்ட கருத்து:
சுதத்திரம் தருகின்ற மகிழ்ச்சியைக் காட்டிலும் இன்பம் கிடைக்கின்ற நல்லுணர்வு, வேறில்லை. பதவியால் கிடைக்கும் பெருமையும், பணத்தால் வரும் இன்பமும் இவற்றை எண்ணிப் பார்த்தால் சுதந்திரத்தினால் கிடைக்கும் மகிழ்வைக் காட்டிலும் தாழ்ந்ததே. அறத்தாய் வரும் இன்பமும், புகழோடு வாழ்வதும் இவை எல்லாமே சுதந்திரம் இருந்தால் மட்டுமே நிகழ்வன. நாள்தோறும் நம்மை எதிர்கொள்ளும் துயரங்களை துடைத்திட வேண்டுமென்றால், நிச்சயம் வேண்டும் சுதந்திரம்,
மோனை நயம்:
நாட்டுக்கு அழகு சேனை
பாட்டுக்கு அழகு மோனை
பாடல் அடிகளின் சீர்களில் முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை.
சான்று: சுதந்திரம் – சுகம்; பதம் - பார்த்தால்; நிதம் - நிச்சயம்
எதுகை நயம்:
பெண்ணுக்கு அழகு நகை
பாடலுக்கு அழகு எதுகை
பாடல் அடிகளின் சீர்களில் முதல் எழுத்து அளவொத்திருக்க இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது.
சான்று: சுதந்திரம் பதந்தரும்; இதம் - நிதம்
அணி நயம்:
“கோயிலுக்கு அழகு மணி
பாடலுக்கு அழகு அணி’
'சுகம்தரும் உணர்ச்சியுயும் வேறுண்டோ?" இவ்வடியில் சுதந்திரம் தரும் மகிழ்ச்சியைக்காட்டிலும் வேறு எதுவும் இல்லை என்று கதந்திரத்தை உயர்வாக அமைத்து பாடியிருப்பதால் உயர்வு நவிற்சி அணி இடம்பெற்றுள்ளது.
கற்பனை நயம்:
"கற்பனை விற்பனை அல்ல" என்பதற்கேற்ப கவிஞர் இப்பாடலில் மிகுந்த சுற்பனைத் திறனைக் கையாண்டுள்ளார்.
மொழியோடு விளையாடு
சொல்லெடுத்துத் தொடர் அமைக்க.
கீழுள்ள கட்டத்தினுள் நுழைந்து சொற்களை எடுத்தும் தேவையான சொற்களைச் சேர்த்தும் தொடர்கள் அமைக்க (அடைபட்ட பகுதியில் உள்ள சொற்களைத் தவிர்க்கவும்)
எ.கா: மாணவர்கள் வகுப்பறையினுள் நுண்கலைகளையும் கற்க வேண்டும்.
விடை
❖ மாணவர்கள் பட்டினியாக இருக்கக்கூடாது என்பதற்காக மதிய உணவுத் திட்டத்தை காமராசர் ஏற்படுத்தினார்.
❖ ஆசிரியர், மாணவர் உறவு, மேன்மையுடையது.
❖ விளையாட்டு உடலுக்கு உறுதி தரும்.
❖ கூடுதல் வகுப்பு நேரங்களைப் புறக்கணிக்கக்கூடாது.
❖ நாள்தோறும் பள்ளியில் வழிபாட்டுக் கூட்டம் நடைபெறும்.
❖ வகுப்பறையிலிருந்து ஆசிரியர் அனுமதியுடன் வெளியேற வேண்டும்.
❖ மாணவர் திறமையை வளர்க்கும் ஒரே இடம் பள்ளி.
❖ கரும்பலகையில் எழுதிப் பாடம் நடத்துவது மாணவர்களை விழிப்படையச் செய்யும்.
❖ மாணவர்கள் பள்ளிக்குத் தாமதமாக வருவதைத் தவிர்த்தல் வேண்டும்.
❖ வேலையின்மையைப் போக்க நல்ல வாசிப்பு வேண்டும்.
❖ நுண்கலைகள் சிந்தனையைத் தூண்டும்.
செய்து கற்போம்
நல்ல சிந்தனைகளை விதைத்த தலைவர்கள் பற்றிய செய்திகளைத் திரட்டி ஒப்படைவு உருவாக்குக.
படித்துப் பார்த்துப் படைக்க.
- ஹைக்கூ என்பதற்குத் தமிழில் "துளிப்பா" என்று பொருளுண்டு தெரியுமா?
- கவிதைகளுக்குப் பொருத்தமாகத் தலைப்பிடுக.
விடை : தலைப்பு: முயற்சி
பத்தாவது தடவையாக
விழுந்தவனுக்கு
முத்தமிட்டுச் சொன்னது பூமி
'ஒன்பது முறை எழுந்தவனல்லவா நீ'
- ஈரோடு தமிழன்பன்
தலைப்பு: அருவியின் அழகு
எப்போதும் மத்தாப்பு
கொளுத்தி விளையாடுகிறது
மலையருவி
- கழனியூரன்
விடை : தலைப்பு: பொருளாதாரத் தட்டுப்பாடு
காக்கும் கரங்கள்
அடகுக் கடையில்
பொன் வளையல்
நிற்க அதற்குத் தக
உம்முடைய பொறுப்பை உணர்ந்து கட்டங்களை நிறைவு செய்க.
அடையாளம் - பெருமிதம்
இந்தியன் -
ஒருமைப்பாட்டுணர்வுடன் சமூகக் கூட்டமைப்பில் இணைந்து வாழ்கிறேன்.
தமிழன் -
விருந்தோம்பலின் உறைவிடம்.
மாணவன் -
அறிவியல் உலகின் ஆளுமைச் சக்தி.
மகன்/மகள் -
உறவின் விழுதுகள்,
சகோதரன்/சகோதரி :
சந்தர்ப்பங்களில் தந்தையும் தாயமாக அவதரிப்பவர்கள்.
தோழன்/தோழி :
வாழ்க்கைப் படகின் துடுப்புகள்.
கலைச்சொல் அறிவோம்
உத்திகள் – Strategies,
சமத்துவம் -
Equality,
தொழிற்சங்கம் -
Trade Union
பட்டிமன்றம் -
Debate,
பன்முக ஆளுமை -
Multiple Personality,
புனைபெயர் – Pseudonym
அறிவை விரிவு செய்
ஜீவா -
வாழ்க்கை வரலாறு -
கே. பால தண்டாயுதம்.
சொல்லாக்கம் –
இ. மறைமலை
இணையத்தில் காண்க
http://www.bdu.ac.in/bharathidasan/ - பாரதிதாசன் படைப்புகள் முழுமையும்.
சுந்தர ராமசாமியின் சிறுகதைகள்.