வரலாறு - மராத்தியர் | 11th History : Chapter 15 : The Marathas
மராத்தியர்
கற்றல் நோக்கங்கள்
கீழ்கண்டவற்றை
பற்றி அறிதல்
• மராத்தியரின் எழுச்சிக்குக்
காரணமான சூழ்நிலைகள்
• மராத்திய அரசு நிறுவியதில்
சிவாஜியின் பங்கு
• சிவாஜியின் நிர்வாக முறை
• பேஷ்வா ஆட்சியும் நிர்வாகமும்
• தமிழ்நாட்டில் மராத்தியரின் குறிப்பாக
இரண்டாம் சரபோஜியின்
பங்கு
அறிமுகம்
முகலாயரின் வீழ்ச்சியில் மராத்தியர் முக்கியப் பங்கு வகித்தனர். 18ஆம் நூற்றாண்டின் மத்தியில் இந்தியாவின் மையப்பகுதியில் மராத்திய மாமன்னர் சிவாஜியின் தலைமையில் முகலாய ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதில் வெற்றி பெற்றனர். தஞ்சாவூரில் நாயக்க மன்னரின் ஆட்சி முடிவடைந்த உடன் மராத்தியத் தளபதி வெங்கோஜி (சிவாஜியின் ஒன்றுவிட்ட சகோதரர்) தமிழகத்தில் மராத்திய ஆட்சியை ஏற்படுத்துவதில் வெற்றி கண்டார். தஞ்சாவூரில் 1674ஆம் ஆண்டு தொடங்கிய மராத்தியரின் ஆட்சி 1832ஆம் ஆண்டு இரண்டாவது சரபோஜி மன்னர் மரணம் வரை நீடித்தது.