முகலாயப் பேரரசு - பாடச் சுருக்கம் - முகலாயப் பேரரசு | 11th History : Chapter 14 : The Mughal Empire
பாடச் சுருக்கம்
• முகலாய வம்சத்தின் ஆட்சியை நிறுவ பாபர் செய்த நான்கு போர்கள் விளக்கப்பட்டுள்ளன.
• ஹுமாயூனுக்குச் சகோதரர்களால் ஏற்பட்ட இடையூறுகள், ஆப்கானியர், குஜராத்தின் பகதூர்ஷா ஆகியோரின் பகைமை சூர் அரச வம்சத்தின் எழுச்சிக்கு இட்டுச் சென்றது விளக்கப்பட்டுள்ளது.
• ஷெர்ஷாவின் எழுச்சியும் அவருடைய வருவாய், நிதி சீர்திருத்தங்களும் கோடிட்டுக் காண்பிக்கப்பட்டுள்ளன.
• அக்பரின் மன்சப்தாரிமுறை, அனைவரையும் அரவணைக்கும் மதக் கொள்கை, படையெடுப்புகளின் மூலம் முகலாய ஆட்சியை ஒருங்கிணைத்தது, முக்கியமாக இரண்டாவது பானிப்பட் போர் ஆகியவை விவரிக்கப்பட்டுள்ளன.
• அரசு நிர்வாகத்தில் ஜஹாங்கீரின் நாட்டமின்மையால் நூர்ஜகான் உண்மையான ஆட்சியாளராகச் செயல்பட்டமை விவாதிக்கப்பட்டுள்ளது.
• முகலாயக் கட்டடக் கலையின் அடையாளமான ஷாஜகானின் தாஜ்மஹால், அவரின் மூன்று மகன்களிடையே நடைபெற்ற வாரிசு உரிமைப் போரும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
• ஒளரங்கசீப்பின் தலைமையிலான முகலாயருக்கும் சிவாஜியின் தலைமையிலான மராத்தியருக்கும் நடைபெற்ற இடைவிடாத போர்களும், ஒளரங்கசீப்பின் ரஜபுத்திர, தக்காணக் கொள்கைகளும் விவாதிக்கப்பட்டுள்ளன
• முகலாயச் சமூகத்தின் சிறப்பியல்புகள் விளக்கப்பட்டுள்ளன.