Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | மரபுரிமத்தின் வகைகள்

கணினி அறிவியல் - மரபுரிமத்தின் வகைகள் | 11th Computer Science : Chapter 16 : Inheritance

11வது கணினி அறிவியல் : அலகு 16 : மரபுரிமம்

மரபுரிமத்தின் வகைகள்

மரபுரிமத்தில் பல வகைகள் உள்ளன. ஒரு வழி மரபுரிமம், பலவழி மரபுரிமம், பல நிலை மரபுரிமம், கலப்பு மரபுரிமம் மற்றும் படிமுறை மரபுரிமம்.

மரபுரிமத்தின் வகைகள் 


மரபுரிமத்தில் பல வகைகள் உள்ளன. ஒரு வழி மரபுரிமம், பலவழி மரபுரிமம், பல நிலை மரபுரிமம், கலப்பு மரபுரிமம் மற்றும் படிமுறை மரபுரிமம். 


1. ஒரு வழி மரபுரிமம் 

ஒரேயொரு இனக்குழுவை அடிப்படையாகக் கொண்டு தருவிக்கப்பட்ட இனக்குழுவை உருவாக்குவது ஒரு வழி மரபுரிமம் ஆகும்.


2. பலவழி மரபுரிமம்

பல அடிப்படை இனக்குழுக்களிலிருந்து தருவிக்கப்பட்ட இனக்குழுவை உருவாக்குவது பல வழி மரபுரிமம் ஆகும்.


3. படிமுறை மரபுரிமம்

ஒன்றுக்கு மேற்பட்ட தருவிக்கப்பட்ட இனக்குழுக்கள் ஒரு அடிப்படை இனக்குழுவிலிருந்து தருவிக்கப்படுமாயின் அது படிமுறை மரபுரிமம் எனப்படும்.


4. பலநிலை மரபுரிமம்

மரபுரிமத்தின் மாறும் இயல்புடைய பண்புகள் இந்த வகை மரபுரிமத்தில் பிரதிபலிக்கின்றன. ஓர் இனக்குழு தருவிக்கப்பட்ட இனக்குழுவைக்கொண்டு தருவிக்கப்பட்டால், அது பலநிலை மரபுரிமம் எனப்படும்.


5. கலப்பு மரபுரிமம்.

ஒன்றுக்கு மேற்பட்ட மரபுரிம வகைகளை இணைப்பதன் மூலம் கலப்பு மரபுரிம வகையை உருவாக்கலாம். இது, பலநிலை மற்றும் பலவழி மரபுரிமம், படிமுறை மற்றும் பலநிலை மரபுரிமம், அல்லது படிமுறை, பலநிலை மற்றும் பல வகை கலப்பினமாக இருக்கலாம்.

மரபுரிமத்தின் பல்வேறு வகைகளை விளக்கும் படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.




Tags : Computer Science கணினி அறிவியல்.
11th Computer Science : Chapter 16 : Inheritance : Types of Inheritance Computer Science in Tamil : 11th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 16 : மரபுரிமம் : மரபுரிமத்தின் வகைகள் - கணினி அறிவியல் : 11 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 16 : மரபுரிமம்