Home | 6 ஆம் வகுப்பு | 6வது கணிதம் | ஏறு வரிசை மற்றும் இறங்கு வரிசையில் எண்களை வரிசைப்படுத்துதல்

எண்கள் | பருவம் 1 அலகு 1 | 6 ஆம் வகுப்பு கணக்கு - ஏறு வரிசை மற்றும் இறங்கு வரிசையில் எண்களை வரிசைப்படுத்துதல் | 6th Maths : Term 1 Unit 1 : Numbers

   Posted On :  20.11.2023 07:06 am

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : எண்கள்

ஏறு வரிசை மற்றும் இறங்கு வரிசையில் எண்களை வரிசைப்படுத்துதல்

A, B, C, D மற்றும் E எனப் பெயரிடப்பட்ட 5 அடுக்கு மாடிக் கட்டடங்களின் வெவ்வேறு உயரங்கள் முறையே 985 அடி, 1245 அடி, 1865 அடி, 355 அடி மற்றும் 585 அடி. இக்கட்டடங்களின் உயரங்கள் படத்தில் காட்டப்பட்டுள்ளன.

3. ஏறு வரிசை மற்றும் இறங்கு வரிசையில் எண்களை வரிசைப்படுத்துதல்

A, B, C, D மற்றும் E எனப் பெயரிடப்பட்ட 5 அடுக்கு மாடிக் கட்டடங்களின் வெவ்வேறு உயரங்கள் முறையே 985 அடி, 1245 அடி, 1865 அடி, 355 அடி மற்றும் 585 அடி. இக்கட்டடங்களின் உயரங்கள் படத்தில் காட்டப்பட்டுள்ளன.


அவற்றின் உயரங்களின் அடிப்படையில் அவற்றை ஏறு வரிசையில் உன்னால் வரிசைப்படுத்த முடியுமா? ஆம், இட மதிப்பைப் பொறுத்து எண்களை ஒப்பிட்டு வரிசைப்படுத்தலாம்.


படி 1

முதலில், 1245 மற்றும் 1865 என்ற 4 இலக்க எண்களை ஒப்பிடுக. ஒரே எண்ணிக்கையிலான இலக்கங்களைக் கொண்ட எண்களை, மேலே ஏற்கனவே தெரிந்த படிகளின்படி ஒப்பிட நமக்குக் கிடைப்பது 1865 > 1245

ஆகவே, மிக உயரமான கட்டடம் 'C' (1865 அடி)

அடுத்த உயரமான கட்டடம் `B' (1245 அடி)

படி 2

985, 585 மற்றும் 355 என்ற மூன்றிலக்க எண்களை ஒப்பிட வேண்டும். மேலேயுள்ள அட்டவணையின்படி, 985 > 585 > 355 எனப் பெறலாம். இங்கு அவற்றுள் மிகச் சிறியது 355. 

எனவே, கட்டடங்களின் உயரங்களைப் பின்வருமாறு ஏறு வரிசையில் எழுதலாம்.



இவற்றை முயல்க

நான்கு இந்திய மாநிலங்களின் பரப்பளவுகள் சதுர கிலோ மீட்டரில் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.


மாநிலம் : பரப்பளவு (சதுர கிமீ)

தமிழ்நாடு : 1,30,058

கேரளா : 38,863

கர்நாடகா : 1,91,791

ஆந்திரப் பிரதேசம் : 1,62,968

மேற்காணும் நான்கு இந்திய மாநிலங்களின் பரப்பளவை ஏறுவரிசை மற்றும் இறங்கு வரிசையில் எழுதுக.

தீர்வு :

படி 1: குறைவான இலக்கங்களை உடைய எண் சிறிய எண் ஆகும். எனவே சிறிய எண் 38,863

படி 2: ஒரே எண்ணிக்கையில் இலக்கங்களை உடைய 1,30,058; 1,91,791; 1,62,968 ஆகிய எண்களை இடமதிப்பு அட்டவணைப்படி ஒப்பிடும் போது


இலட்சம் இடமதிப்பில் 1 = 1 = 1 பத்தாயிரம் இடமதிப்பில் 3 < 6 < 9

  1,30,058 < 1,62,968 < 1,91,791 

ஏறுவரிசை 38,863< 1,30,058< 1,62,968 < 1,91,791 

இறங்குவரிசை 1,91,791 > 1,62,968 > 1,30,058 > 38,863


உங்களுக்குத் தெரியுமா?


தாமஸ் ஹாரியாட்  (1560 – 1621)

இந்தப்புகழ்பெற்ற கணித மேதையே "<" மற்றும் ">" குறியீடுகளை முதலில் பயன்படுத்தியவர்.

Tags : Numbers | Term 1 Chapter 1 | 6th Maths எண்கள் | பருவம் 1 அலகு 1 | 6 ஆம் வகுப்பு கணக்கு.
6th Maths : Term 1 Unit 1 : Numbers : Arranging the numbers in ascending and descending order Numbers | Term 1 Chapter 1 | 6th Maths in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : எண்கள் : ஏறு வரிசை மற்றும் இறங்கு வரிசையில் எண்களை வரிசைப்படுத்துதல் - எண்கள் | பருவம் 1 அலகு 1 | 6 ஆம் வகுப்பு கணக்கு : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : எண்கள்