Home | 6 ஆம் வகுப்பு | 6வது கணிதம் | இடமதிப்பு விளக்கம்

எண்கள் | பருவம் 1 அலகு 1 | 6 ஆம் வகுப்பு கணக்கு - இடமதிப்பு விளக்கம் | 6th Maths : Term 1 Unit 1 : Numbers

   Posted On :  20.11.2023 06:47 am

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : எண்கள்

இடமதிப்பு விளக்கம்

359468421 என்ற எண்ணினைப் படிக்க முயல்க. கடினமாக உள்ளதா? ஆம். இது எளிதானது அல்ல. ஆனால் பிரிவுகளைக் கொண்டு 359468421 ஐ பின்வருமாறு எளிதில் படிக்கவும், எழுதவும் செய்யலாம்.

இடமதிப்பு விளக்கம்


1. இந்திய எண் முறை 


பெரிய எண்களை எழுதும்போது நாம் இடமதிப்பு அட்டவணையைப் பயன்படுத்தினால், இடையில் எந்த ஓர் இலக்கமும் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய முடியும். இம்முறையில் கொடுக்கப்பட்ட எண்ணினை வலப்புறத்திலிருந்து பிரிக்கையில் முதல் மூன்று இடங்கள் ஒன்றுகள் பிரிவையும், அடுத்த இரண்டு இடங்கள் ஆயிரங்கள் பிரிவையும், அடுத்த இரண்டு இடங்கள் இலட்சங்கள் பிரிவையும், அடுத்த இரண்டு இடங்கள் கோடிகள் பிரிவையும் குறிக்கின்றோம்.

359468421 என்ற எண்ணினைப் படிக்க முயல்க. கடினமாக உள்ளதா? ஆம். இது எளிதானது அல்ல. ஆனால் பிரிவுகளைக் கொண்டு 359468421 பின்வருமாறு எளிதில் படிக்கவும், எழுதவும் செய்யலாம்.


எண்ணின் பெயர்: முப்பத்து ஐந்து கோடியே தொண்ணூற்று நான்கு இலட்சத்து அறுபத்து எட்டாயிரத்து நானூற்று இருபத்து ஒன்று


காற்புள்ளியைப் பயன்படுத்துதல்

ஒரு எண்ணின் பிரிவுகளை காற்புள்ளிப் பயன்படுத்தி பிரிக்கிறோம். இந்திய எண்முறையில் நாம் காற்புள்ளியை வலப்புறத்திலிருந்து பயன்படுத்துகிறோம். முதற்காற்புள்ளி நூறுகள் இடத்திற்கு முன்பாகவும் (வலப்புறத்திலிருந்து மூன்று இலக்கங்கள்), இரண்டாவது காற்புள்ளி பத்தாயிரமாவது இடத்திற்கு முன்பாகவும் (வலப்புறத்திலிருந்து 5 இலக்கங்கள்), மூன்றாவது காற்புள்ளி பத்து இலட்சங்கள் இடத்திற்கு முன்பாகவும் (வலப்புறத்திலிருந்து 7 இலக்கங்கள்), நான்காவது காற்புள்ளி கோடிகள் இடத்திற்கு முன்பாகவும் (வலப்புறத்திலிருந்து 9 இலக்கங்கள்) .... அமையும்

எடுத்துக்காட்டு 1.1

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் ஏறக்குறைய 92900000 மைல்கள். இதனை இந்திய எண் முறையில் காற்புள்ளியைப் பயன்படுத்திப் படிக்க மற்றும் எழுதுக.

தீர்வு


காற்புள்ளியைப் பயன்படுத்துதல்: 9,29,00,000

எண்ணின் பெயர்: ஒன்பது கோடியே இருபத்து ஒன்பது இலட்சம்

இவற்றை முயல்க

அட்டவணையை நிரப்புக.


குறிப்பு : ஓர் எண்ணின் இலக்கங்களின் இடமதிப்பு வலதுப்புறத்திலிருந்து இடதுப்புறமாகச் செல்ல செல்ல அதிகரிக்கும்.


2. பன்னாட்டு எண்முறை

இந்த எண்முறை உலகத்திலுள்ள பல்வேறு நாடுகளால் பின்பற்றப்படுகின்றன.


இம்முறையில் கொடுக்கப்பட்ட எண்ணினை வலப்புறத்திலிருந்து பிரிக்கும்போது, முதல் மூன்று இடங்கள் ஒன்றுகள் பிரிவையும், அடுத்த மூன்று இடங்கள் ஆயிரங்கள் பிரிவையும், அடுத்த மூன்று இடங்கள் மில்லியன்கள் பிரிவையும், அடுத்த மூன்று இடங்கள் பில்லியன்கள் பிரிவையும் குறிக்கின்றோம்

குறியீடு அல்லது பிரிவுகள் இடைவெளிகளைக் கொண்டு 35694568421 ஐப் பின்வருமாறு படிக்கவும், எழுதவும் செய்யலாம்.

 


காற்புள்ளியைப் பயன்படுத்துதல்

பன்னாட்டு எண் முறையில், நாம் ஒன்றுகள், பத்துகள், நூறுகள், ஆயிரங்கள், பத்தாயிரங்கள், நூறாயிரங்கள், மில்லியன்கள் மற்றும் பில்லியன்கள், எனப் பயன்படுத்துகிறோம். ஆயிரங்கள், மில்லியன்கள் மற்றும் பில்லியன்களுக்கு நாம் காற்புள்ளியைப் பயன்படுத்துகிறோம்.

எடுத்துக்காட்டு 1.2

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் ஏறக்குறைய 92900000 மைல்கள். இதனை பன்னாட்டு எண்முறையில் காற்புள்ளியைப் பயன்படுத்திப் படிக்க மற்றும் எழுதுக.

தீர்வு



3. எண்முறைகளை ஒப்பிடுதல்

பின்வரும் அட்டவணையின் மூலம் நாம் இந்திய மற்றும் பன்னாட்டு எண் முறைகளை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.


அட்டவணையின் உதவியால் நாம் 57340000 , 5,73,40,000 (ஐந்து கோடியே எழுபத்தி மூன்று இலட்சத்து நாற்பதாயிரம்) என்று இந்திய முறையிலும், 57,340,000 (ஐம்பத்து ஏழு மில்லியன் முன்னூற்று நாற்பதாயிரம்) என்று பன்னாட்டு முறையிலும் படிக்கலாம்..

இவற்றை முயல்க

தவறாக இடம்பெற்றுள்ள காற்புள்ளியைக் கண்டுபிடித்துச் சரியான முறையில் எழுதுக.

இந்திய முறை :

(i) 56,12,34,0,1,5

விடை : காற்புள்ளி சரியான முறையில்: 56,12,34,015 

(ii) 9,90,03,2245

விடை : காற்புள்ளி சரியான முறையில் : 99,00,32,245 

பன்னாட்டு முறை :

(iii) 7,5613,4534

விடை: காற்புள்ளி சரியான முறையில் : 756,134,534 

(iv) 30,30,304,040

விடை: காற்புள்ளி சரியான முறையில் : 3,030,304,040


செயல்பாடு

ஒரு வெள்ளை அட்டையை எடுத்து அதை ஒன்பது சம பாகங்களாக வெட்டி எடுக்கவும். ஒவ்வோர் அட்டையிலும் வெவ்வேறு எண்களை எழுதவும். பலமுறை அட்டைகளை மாற்றி மாற்றி கிடைமட்டமாக வைத்துப் பல எண்கள் அமையுமாறு வரிசைப்படுத்தவும். அதில் எவையேனும் 5 எண்களை இந்திய முறையிலும் பன்னாட்டு முறையிலும் எழுதவும்.

Tags : Numbers | Term 1 Chapter 1 | 6th Maths எண்கள் | பருவம் 1 அலகு 1 | 6 ஆம் வகுப்பு கணக்கு.
6th Maths : Term 1 Unit 1 : Numbers : Place Value Chart Numbers | Term 1 Chapter 1 | 6th Maths in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : எண்கள் : இடமதிப்பு விளக்கம் - எண்கள் | பருவம் 1 அலகு 1 | 6 ஆம் வகுப்பு கணக்கு : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : எண்கள்