கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | எண்கள் | பருவம் 1 அலகு 1 | 6 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 1.5 | 6th Maths : Term 1 Unit 1 : Numbers

   Posted On :  21.11.2023 03:07 am

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : எண்கள்

பயிற்சி 1.5

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : எண்கள் : பயிற்சி 1.5 : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 1.5


1. கோடிட்ட இடங்களை நிரப்புக.

(i) மிகச் சிறிய இயல் எண்ணிற்கும் மிகச் சிறிய முழு எண்ணிற்கும் இடையே உள்ள வித்தியாசம்__________. [விடை : 1]

(ii) 17 ×_________= 34 × 17 [விடை : 34]

(iii) ஓர் எண்ணுடன் ___________ ஐக் கூட்டும்போது, அந்த எண் மாறாமல் இருக்கும். [விடை : 0] 

குறிப்பு : கூட்டல் சமனி பூச்சியம் ஆகும்.

(iv) ________ ஆல் வகுப்பது என்பது வரையறுக்கப்படவில்லை. [விடை : 0]

(v) ஓர் எண்ணை _______________ஆல் பெருக்கும்போது அந்த எண் மாறாமல் இருக்கும். [விடை : 1]

குறிப்பு : பெருக்கல் சமனி பூச்சியம் ஆகும்.


2. சரியா தவறா எனக் கூறுக.

(i) முழு எண்களின் பெருக்கல் சமனி பூச்சியம் ஆகும். [தவறு]

(ii) இரு முழு எண்களின் கூடுதல் அதன் பெருக்குத் தொகையை விடக் குறைவானதாக இருக்கும். [தவறு]

(iii) முழு எண்களில் கூட்டல் மற்றும் பெருக்கல் ஆகியவை சேர்ப்புப் பண்புடையவை. [சரி]

(iv) முழு எண்களில் கூட்டல் மற்றும் பெருக்கல் ஆகியவை பரிமாற்றுப் பண்புடையவை. [சரி]

(v) முழு எண்களில் கூட்டலின் மீதான பெருக்கல் பங்கீட்டுப் பண்புடையது. [சரி]


3. கீழ்க்காணும் வினாக்களில் பெறும் பண்பு யாது?

(i) 75 + 34 = 34 + 75 :: கூட்டலின் பரிமாற்றுப் பண்பு

(ii) (12 × 4) × 8 = 12 × (4 × 8) ::  பெருக்கலின் சேர்ப்புப் பண்பு

(iii) 50 + 0 = 50 ::  ‘0’ கூட்டல் சமனி

(iv) 50 × 1 = 50 ::  ‘1’ பெருக்கல் சமனி

(v) 50 × 42 = 50 × 40 + 50 × 2 ::  கூட்டல் மீதான பெருக்கலின் பங்கீடு


4. முழு எண்களின் பண்புகளைப் பயன்படுத்திச் சுருக்குக.

(i) 50 × 102

(ii) 500 × 689 – 500 × 89

(iii) 4 × 132 × 25

(iv) 196 + 34 + 104

தீர்வு :

(i) 50 × 102 

கூட்டல் மீதான பெருக்கலின் பங்கீட்டு விதிப்படி 

50 × 102 = 50 × (100 + 2) 

50 × 102 = 50 × 100 + 50 × 2

= 5000 + 100

= 5100 

50 × 102 = 5100 

(ii) 500 × 689 – 500 × 89

கழித்தல் மீதான பெருக்கலின் பங்கீட்டு விதிப்படி 

500 × 689 – 500 × 89 = 500 × (689–89)

= 500 × 600

= 300000 

500 × 689 – 500 × 89 = 3,00,000

(iii) 4 × 132 × 25 

பெருக்கலின் பரிமாற்றுப் பண்பை பயன்படுத்த

4 × 132 × 25 = 4 × 25 × 132

= 100 × 132

= 13200 

4 × 132 × 25 = 13200

(iv) 196 + 34 + 104 

196 + 34 + 104 =196 + 104 + 34 (கூட்டல் பரிமாற்று பண்பை பயன்படுத்த)

= 300 + 34 

= 334

196 + 34 + 104 = 334



புறவய வினாக்கள்


5. (53 + 49) × 0 என்பது

() 102

() 0

() 1

() 53 + 49 × 0

[விடை : () 0]

குறிப்பு : 53 × 0 +  49 × 0 = 0 + 0 = 0


6.  என்பது

() 1

() 0

()

() 59

[விடை : () 59]

குறிப்பு : 59/1 = 59



7. ஒரு பூச்சியமற்ற முழு எண் மற்றும் அதனுடைய தொடரியின் பெருக்குத் தொகை எப்போதும்

() ஓர் இரட்டை எண்

() ஓர் ஒற்றை எண்

() பூச்சியம்

() இவற்றுள் ஏதுமில்லை

[விடை : () ஓர் இரட்டை எண்]


8. முன்னி இல்லாத ஒரு முழு எண்

() 10

() 0

() 1

() இவற்றுள் ஏதுமில்லை

[விடை : () 0]


9. பின்வரும் கோவைகளில் எது பூச்சியமல்ல?

() 2 × 0

() 0 + 0

() 2 + 0

() 0 – 0

[விடை : () 2 + 0]


10. பின்வருவனவற்றுள் எது உண்மை அல்ல?

() (4237 + 5498) + 3439 = 4237 + (5498 + 3439) 

() (4237 × 5498) × 3439 = 4237 × (5498 × 3439)

() 4237 + 5498 × 3439 = (4237 + 5498) × 3439

() 4237 × (5498 + 3439) = (4237 × 5498) + (4237 × 3439)

[விடை : () 4237 + 5498 × 3439 = (4237 + 5498) × 3439]

Tags : Questions with Answers, Solution | Numbers | Term 1 Chapter 1 | 6th Maths கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | எண்கள் | பருவம் 1 அலகு 1 | 6 ஆம் வகுப்பு கணக்கு.
6th Maths : Term 1 Unit 1 : Numbers : Exercise 1.5 Questions with Answers, Solution | Numbers | Term 1 Chapter 1 | 6th Maths in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : எண்கள் : பயிற்சி 1.5 - கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | எண்கள் | பருவம் 1 அலகு 1 | 6 ஆம் வகுப்பு கணக்கு : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : எண்கள்