கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | எண்கள் | பருவம் 1 அலகு 1 | 6 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 1.2 | 6th Maths : Term 1 Unit 1 : Numbers

   Posted On :  21.11.2023 03:06 am

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : எண்கள்

பயிற்சி 1.2

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : எண்கள் : பயிற்சி 1.2 : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 1.2


1. கோடிட்ட இடங்களில் >அல்லது < அல்லது = குறியீடுகளைக் கொண்டு நிரப்புக.

(i) 48792_________48972

விடை : 48792 < 48972

குறிப்பு:

(ii) 1248654_________1246854

விடை : 1248654 > 1246854

குறிப்பு:


 (iii) 658794_________658794

விடை : 658794 = 658794


2. சரியா, தவறா எனக் கூறுக.

(i) மிகச் சிறிய ஏழு இலக்க எண்ணிற்கும் மிகப் பெரிய ஆறு இலக்க எண்ணிற்கும் இடையே உள்ள வேறுபாடு 10 ஆகும். [தவறு]

(ii) 8, 6, 0, 9 என்ற எண்களை ஒரே ஒரு முறை மட்டும் பயன்படுத்திக் கிடைக்கப்பெறும் மிகப் பெரிய 4 இலக்க எண் 9086 ஆகும். [தவறு]

(iii) நான்கு இலக்க எண்களின் மொத்த எண்ணிக்கை 9000 [சரி]


3. 1386787215, 137698890, 86720560 என்ற எண்களில் எந்த எண் மிகப் பெரியது? எந்த எண் மிகச் சிறியது?

தீர்வு : அதிக இலக்கங்களை உடைய எண் பெரிய எண், ஆகவே இலக்கங்களின் எண்ணிக்கை அடிப்படையில் வரிசைப்படுத்த  1386787215 > 137698890 > 86720560 

மிகப்பெரிய எண் : 1386787215

மிகச்சிறிய எண்: 86720560


4. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை இறங்கு வரிசையில் எழுதுக.

128435, 10835, 21354, 6348, 25840

தீர்வு

படி1 : அதிக இலக்கங்களை உடைய எண் பெரிய எண் இலக்கங்களின் எண்ணிக்கை அடிப்படையில்

மிகப்பெரிய எண்: 128435, மிகச்சிறிய எண்: 6348

படி 2: 10835, 21354, 25840 ஆகிய எண்கள் சம எண்ணிக்கையில் இலக்கங்களைப் பெற்றுள்ளன. ஆகவே அவற்றின் இடப்பக்க இடமதிப்புகளை ஒப்பு நோக்க.


இவற்றுள் சிறிய எண் 10835 

படி 3: 21354 மற்றும் 25840 ஆகியவற்றின் பத்தாயிரம் மற்றும் ஆயிரம் இட மதிப்புகளை ஒப்பு நோக்க 2 = 2; 1 < 5 

21354 < 25840

இறங்குவரிசை 128435 > 25840 > 21354 > 10835 > 6348


5. பத்து லட்சம் இடத்தில் 6 என்ற எண்ணும் பத்தாயிரம் இடத்தில் 9 என்ற எண்ணும் உள்ளவாறு ஏதேனும் ஓர் எட்டு இலக்க எண்ணை எழுதுக.

தீர்வு : இடமதிப்பு அட்டவணை படி


காலியிடங்களை வெவ்வேறு எண்களைக் கொண்டு நிரப்ப நமக்குக் கிடைக்கும் தேவையான எட்டு இலக்க எண் 76095321, 86593214 (இதே போன்று நாம் பல எண்களை எழுதலாம்)


6. இராஜன் 4, 7 மற்றும் 9 என்ற இலக்கங்களைப் பயன்படுத்தி 3 இலக்க எண்களை எழுதுகிறான். எத்தனை எண்களை அவனால் எழுத முடியும்?

தீர்வு : கொடுக்கப்பட்ட இலக்கங்கள் 4, 7 மற்றும் 9

(a) நூறாவது இடத்தில் 4 என்ற எண்ணை பயன்படுத்த


(b) நூறாவது இடத்தில் 7 என்ற எண்ணை பயன்படுத்த


(c) நூறாவது இடத்தில் 9 என்ற எண்ணை பயன்படுத்த


எனவே இராஜன் 479, 497, 794, 749, 974 மற்றும் 947 என்ற 6 எண்களை எழுதலாம்


7. என்னுடைய பணம் பெறும் அட்டையின் (ATM அட்டை) கடவுச் சொல் 9, 4, 6 மற்றும் 8 ஆகிய இலக்கங்களைக் கொண்டது. இது மிகச் சிறிய 4 இலக்க இரட்டை எண் ஆகும். எனது பணம் பெறும் அட்டையின் (ATM அட்டை) கடவுச் சொல் காண்க.

தீர்வு : 9,4,6 மற்றும் 8 ஆகிய இலக்கங்களைக் கொண்ட மிகச்சிறிய நான்கு இலக்க எண் 4689

பணம் பெறும் அட்டையின் கடவுச்சொல் இரட்டை எண் என கொடுக்கப்பட்டுள்ளது.

வலது பக்க இரு இலக்கங்களை இடமாற்றம் செய்ய கிடைப்பது 4698

கடவுச்சொல் 4698 


8. அஞ்சலகக் குறியீட்டு எண் 6 இலக்கங்களைக் கொண்டது. இதன் முதல் 3 இலக்க எண்கள் 6, 3 மற்றும் 1 ஆகும். மேலும் 0, 3 மற்றும் 6 என்ற மூன்று இலக்கங்களை ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி மிகப் பெரிய மற்றும் மிகச் சிறிய அஞ்சலகக் குறியீட்டு எண்களை அமைக்க

தீர்வு : அஞ்சலக குறியீட்டு எண் 6 இலக்கங்களைக் கொண்ட இதன் முதல் மூன்று எண்கள் 6, 3 மற்றும் 1

இடமதிப்பு அட்டவணையை பயன்படுத்த


கடைசி மூன்று எண்கள் 0, 3 மற்றும் 6. 

இதனை பயன்படுத்தி கிடைக்கும் மிகப்பெரிய எண் 630 மற்றும் மிகச்சிறிய எண் 036

  மிகப்பெரிய அஞ்சலக குறியீட்டு எண் 631630

மிகச்சிறிய அஞ்சலக குறியீட்டு எண் 631036 


9. தமிழ்நாட்டிலுள்ள மலைகளின் உயரங்கள் (மீட்டரில்) கீழேக் கொடுக்கப்பட்டுள்ளன.


(i) மேற்கண்ட மலைகளில் உயரமான மலை எது?

(ii) உயரத்தைக் கொண்டு மலைகளின் பெயர்களை மிகப் பெரியதிலிருந்து சிறியது வரை வரிசைப்படுத்தி எழுதவும்.

(iii) ஆனைமுடி மற்றும் மகேந்திரகிரி ஆகிய மலைகளின் உயரங்களின் வேறுபாடு என்ன?

தீர்வு : 

இடது பக்க இலக்கங்களின் மதிப்பு அதிகமுடைய எண் பெரிய எண்.

2637 மற்றும் 2695 ஆனது இடமதிப்பு அட்டவணைப்படி


இங்கு 2 = 2 ; 6 = 6; 3 < 9 2637 < 2695 

1647 மற்றும் 1778 ஆனது இடமதிப்பு அட்டவணைப்படி


இங்கு 1 = 1 ; 6 < 7 1647 < 1778 

கொடுக்கப்பட்ட மலைகளின் உயரங்கள் ஏறுவரிசையில் 1667 < 1778< 2637 < 2695

மகேந்திகிரி < வெள்ளியங்கிரி < தொட்டபெட்டா < ஆனைமுடி 

(i) உயரமான மலை ஆனைமுடி 

(ii) ஆனைமுடி > தொட்டபெட்டா > வெள்ளியங்கிரி > மகேந்திரகிரி


இரு மலையின் உயரங்களின் வேறுபாடு 1048 மீ.




புறவய வினாக்கள்


10. பட்டியலில் எந்த எண் வரிசை சிறியதிலிருந்து பெரியதாக வரிசைப்படுத்தப்பட்டு உள்ளது?

() 1468, 1486, 1484

() 2345, 2435, 2235

() 134205, 134208, 154203

() 383553, 383548, 383642

[விடை : () 134205, 134208, 154203]

குறிப்பு :



11. அரபிக் கடலின் பரப்பளவு 1491000 சதுர மைல்கள். இது எந்த இரு எண்களுக்கு இடையில் அமைந்துள்ளது?

() 1489000 மற்றும் 1492540

() 1489000 மற்றும் 1490540

() 1490000 மற்றும் 1490100

() 1480000 மற்றும் 1490000

[விடை : () 1489000 மற்றும் 1492540]

குறிப்பு :



12. இந்திய நாளிதழ் படிப்பவர்கள் கணக்கீட்டின்படி, 2018இல் விற்ற நாளிதழ்களின் எண்ணிக்கையைக் காட்டும் அட்டவணை கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது. அட்டவணையில் விடுபட்ட எண் என்னவாக இருக்கும்?


() 8   

() 52    

() 72  

() 26

[விடை : () 26]

குறிப்பு : 70 > 50 > 26 > 10

Tags : Questions with Answers, Solution | Numbers | Term 1 Chapter 1 | 6th Maths கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | எண்கள் | பருவம் 1 அலகு 1 | 6 ஆம் வகுப்பு கணக்கு.
6th Maths : Term 1 Unit 1 : Numbers : Exercise 1.2 Questions with Answers, Solution | Numbers | Term 1 Chapter 1 | 6th Maths in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : எண்கள் : பயிற்சி 1.2 - கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | எண்கள் | பருவம் 1 அலகு 1 | 6 ஆம் வகுப்பு கணக்கு : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : எண்கள்