Home | 6 ஆம் வகுப்பு | 6வது கணிதம் | எண்களை ஒப்பிடுதல்

எண்கள் | பருவம் 1 அலகு 1 | 6 ஆம் வகுப்பு கணக்கு - எண்களை ஒப்பிடுதல் | 6th Maths : Term 1 Unit 1 : Numbers

   Posted On :  20.11.2023 07:05 am

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : எண்கள்

எண்களை ஒப்பிடுதல்

எண்களை ஒப்பிட்டு, அவற்றுள் மிகப்பெரிய எண்ணைக் காணும் முறையை நாம் முன்பே அறிந்துள்ளோம். இரு எண்களை ஒப்பிட <, > மற்றும் = ஆகிய குறியீடுகளை நாம் பயன்படுத்துகிறோம்.

எண்களை ஒப்பிடுதல்

எண்களை ஒப்பிட்டு, அவற்றுள் மிகப்பெரிய எண்ணைக் காணும் முறையை நாம் முன்பே அறிந்துள்ளோம். இரு எண்களை ஒப்பிட <, > மற்றும் = ஆகிய குறியீடுகளை நாம் பயன்படுத்துகிறோம்.


1. சமமில்லாத இலக்கங்களுடைய எண்களை ஒப்பிடுதல்

1. 16090 மற்றும் 100616 என்ற இரண்டு எண்களை ஒப்பிடும்போது அதிக இலக்கங்களைக் கொண்ட எண்ணானது பெரிய எண் என்பதை முன்பே கற்றுள்ளோம்.

ஆகவே, 1,00,616 (6 இலக்க எண்) > 16,090 (5 இலக்க எண்) ஆகும்.

2. 1468, 5, 201, 69 மற்றும் 70000 என இரண்டு எண்களுக்கும் மேல் நமக்குக் கொடுக்கப்பட்டால் 70000 என்பது பெரிய எண் என்றும் 5 என்பது சிறிய எண் என்றும் அதன் இலக்கங்களை வைத்து உடனே கூறி விடலாம்.

இவற்றை முயல்க

1. பின்வரும் எண்களை ஏறுவரிசையில் எழுதுக. 688; 9; 23005; 50; 7500.

தீர்வு : இலக்கங்களின் எண்ணிக்கை அடிப்படையில் எண்களை ஒப்பிட

ஏறுவரிசை :  9, 50, 688, 7500, 23005

ஏறுவரிசை : 9 < 50 < 688 < 7500 < 23005

2. மிகப் பெரிய எண்ணையும், மிகச் சிறிய எண்ணையும் காண்க. 478; 98; 6348; 3; 6007; 50935.

தீர்வு : அதிக இலக்கங்களை உடைய எண் பெரிய எண் குறைவான இலக்கங்களை உடைய எண் சிறிய எண்

ஃமிகப்பெரிய எண்: 50,935 மிகச்சிறிய எண் : 3


2. சம இலக்கங்களுடைய எண்களை ஒப்பிடுதல்

இந்தச் சூழ்நிலையைப் பற்றிச் சிந்திக்க.

தொலைவு காட்டும் விளக்கப்படத்தில், சென்னைக்கும் புதுத் தில்லிக்கும் இடையே ஆன தொலைவு 2180 கி.மீ. எனவும் சென்னைக்கும் நொய்டாவுக்கும் இடையேயான தொலைவு 2158 கி.மீ. எனவும் உள்ளன. இவற்றில் எந்தத் தொலைவு அதிகம்?

 

2180 மற்றும் 2158 என்ற எண்களை மேலே குறிப்பிட்டபடி ஒப்பிடலாம்.


2 = 2

1 = 1

8 > 5

2180 > 2158. எனவே, புதுடெல்லி, சென்னையில் இருந்து அதிக தூரத்தில் உள்ளது.

எடுத்துக்காட்டு 1.5

59283746 மற்றும் 59283748 என்ற எண்களை இடமதிப்பு அட்டவணையைப் பயன்படுத்தி ஒப்பிடுக

தீர்வு

படி 1 : இரண்டு எண்களிலும் இலக்கங்களின் எண்ணிக்கைகள் சமமாக உள்ளன.

படி 2 : இட மதிப்பு அட்டவணையைப் பயன்படுத்தி இடமதிப்புகளை ஒப்பிடுதல்


கீழேயுள்ளவாறு இரு எண்களை உயர் இடமதிப்பிலிருந்து ஒவ்வொரு இலக்கமாக ஒப்பிடுக.


5 = 5

 9 = 9

2 = 2

8 = 8

3 = 3

7 = 7

4 = 4

6 < 8

இங்கு, ஒன்றுகள் இடத்தில் அமைந்த இலக்கங்கள் மட்டும் சமமாக இல்லை 6 < 8.

எனவே, 59283746 < 59283748.

இவற்றை முயல்க

இடமதிப்பு அட்டவணையைப் பயன்படுத்தி இரு எண்களை ஒப்பிட்டு <, > மற்றும் = என்ற குறியீடுகளை இடுக


தீர்வு : இடமதிப்பு அட்டவணையைப் பயன்படுத்த


Tags : Numbers | Term 1 Chapter 1 | 6th Maths எண்கள் | பருவம் 1 அலகு 1 | 6 ஆம் வகுப்பு கணக்கு.
6th Maths : Term 1 Unit 1 : Numbers : Comparison of Numbers Numbers | Term 1 Chapter 1 | 6th Maths in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : எண்கள் : எண்களை ஒப்பிடுதல் - எண்கள் | பருவம் 1 அலகு 1 | 6 ஆம் வகுப்பு கணக்கு : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : எண்கள்