கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | எண்கள் | பருவம் 1 அலகு 1 | 6 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 1.1 | 6th Maths : Term 1 Unit 1 : Numbers

   Posted On :  21.11.2023 03:05 am

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : எண்கள்

பயிற்சி 1.1

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : எண்கள் : பயிற்சி 1.1 : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 1.1


1. கோடிட்ட இடங்களை நிரப்புக.

(i) மிகச் சிறிய ஏழிலக்க எண்____________.

விடை : 10,00,000

(ii) மிகப் பெரிய எட்டு இலக்க எண்_____________.

விடை :  9,99,99,999

(iii) 7005380 என்ற எண்ணில் 5 இன் இடமதிப்பு____________.

விடை : 5,000 (ஐந்தாயிரம்)

(iv) 76,70,905 என்ற எண்ணின் விரிவாக்கம்_______________.

விடை : 70,00,000 + 6,00,000 + 70,000 + 900 + 5


2. சரியா, தவறா எனக் கூறுக.

(i) ஓரிலக்க எண்ணின் தொடரி எப்போதும் ஓரிலக்க எண்ணாகும். (தவறு

(ii) மூவிலக்க எண்ணின் முன்னி எப்போதும் மூன்று அல்லது நான்கு இலக்க எண்ணாகும். (தவறு)

(iii) இந்திய முறையில் 67999037 என்ற எண்ணை 6,79,99,037 என எழுதுகிறோம். (சரி)

(iv) 88,888 = 8 × 10000 + 8 × 100 + 8 × 10 + 8 × 1 (தவறு)


3. மிகச் சிறிய ஆறிலக்க எண்களில் எத்தனை பத்தாயிரங்கள் உள்ளன?

தீர்வு : மிகச் சிறிய ஆறிலக்க எண் 1,00,000.


மிகச்சிறிய ஆறிலக்க எண்ணான 1 இலட்சத்தில் 10 பத்தாயிரங்கள் உள்ளன.


4. காற்புள்ளியை உற்றுநோக்கி பின்வரும் எண்களில் 7 இன் இடமதிப்பை எழுதுக.

(i) 56,74,56,345 

தீர்வு

7 இன் இடமதிப்பு 7 × 10,00,000 = 70,00,000 (எழுபது இலட்சம்)

 (ii) 567,456,345

தீர்வு

7 இன் இடமதிப்பு 7 × 1,000,000 = 7,000,000 ஏழு மில்லியன்)


5. காற்புள்ளியைப் பயன்படுத்திப் பின்வரும் எண்களைப் பன்னாட்டு முறையில் எழுதுக.

(i) 347056


347,056 முந்நூற்று நாற்பத்து ஏழாயிரத்து ஐம்பத்து ஆறு

(ii) 7345671


7,345,671 ஏழு மில்லியன் முந்நூற்று நாற்பத்து ஐந்தாயிரத்து அறுநூற்று எழுபத்து ஒன்று.

(iii) 634567105


634,567,105 அறுநூற்று முப்பத்து நான்கு மில்லியன் ஐநூற்று அறுபத்து ஏழாயிரத்து நூற்று ஐந்து.

(iv) 1234567890


1,234,567,890 ஒரு பில்லியன் இருநூற்றி முப்பத்து நான்கு மில்லியன் ஐநூற்று அறுபத்து ஏழாயிரத்து எண்ணூற்று தொண்ணூறு.


6. மிகப்பெரிய ஆறிலக்க எண்ணை எழுதி, அதை இந்திய மற்றும் பன்னாட்டு முறைகளில் காற்புள்ளி இடுக.

தீர்வு : மிகப்பெரிய ஆறிலக்க எண் 999999

இந்திய முறை


9,99,999 – ஒன்பது இலட்சத்து தொண்ணூற்று ஒன்பது ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது.

பன்னாட்டு முறை


999,999 – தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது.


7. பின்வரும் எண்ணுருக்களின் எண் பெயர்களை இந்திய முறையில் எழுதுக.

(i) 75,32,105

(ii) 9,75,63,453

தீர்வு : 

(i) 75,32,105 – எழுபத்து ஐந்து இலட்சத்து முப்பத்து இரண்டாயிரத்து நூற்று ஐந்து 

(ii) 9,75,63,453 – ஒன்பது கோடியே எழுபத்து ஐந்து இலட்சத்து அறுபத்து மூன்றாயிரத்து நானூற்று ஐம்பத்து மூன்று.


8. பின்வரும் எண்ணுருக்களின் எண் பெயர்களை பன்னாட்டு முறையில் எழுதுக.

(i) 345,678

(ii) 8,343,710

(iii) 103,456,789

தீர்வு

(i) 345,678 – முந்நூற்று நாற்பத்து ஐந்தாயிரத்து அறுநூற்று எழுபத்து எட்டு

(ii) 8,343,710 – எட்டு மில்லியன் முந்நூற்று நாற்பத்து மூன்றாயிரத்து எழுநூற்று பத்து

(iii) 103,456,789 – நூற்று மூன்று மில்லியன் நானூற்று ஐம்பத்து ஆறாயிரத்து எழுநூற்று எண்பத்து ஒன்பது.


9. எண் பெயர்களை எண்ணுருக்களால் எழுதுக.

(i) இரண்டு கோடியே முப்பது இலட்சத்து ஐம்பத்து ஓராயிரத்து தொள்ளாயிரத்து எண்பது 

(ii) அறுபத்து ஆறு மில்லியன் முன்னூற்று நாற்பத்தைந்து ஆயிரத்து இருபத்து ஏழு.

(iii) எழுநூற்று எண்பத்து ஒன்பது மில்லியன் இருநூற்று பதிமூன்றாயிரத்து நானூற்று ஐம்பத்து ஆறு.

தீர்வு

(i) இரண்டு கோடியே முப்பது இலட்சத்து ஐம்பத்து ஓராயிரத்து தொள்ளாயிரத்து எண்பது

எண்ணுரு: 2,30,51,980 

(ii) அறுபத்து ஆறு மில்லியன் முன்னூற்று நாற்பத்தைந்து ஆயிரத்து இருபத்து ஏழு.

எண்ணுரு : 66,345,027 

(iii) எழுநூற்று எண்பத்து ஒன்பது மில்லியன் இருநூற்று பதிமூன்றாயிரத்து நானூற்று ஐம்பத்து ஆறு.

எண்ணுரு : 789,213,456


10. தமிழ்நாட்டில், இருபத்து ஆறாயிரத்து முந்நூற்று நாற்பத்து ஐந்து சதுர கிலோமீட்டர் பரப்பளவு காடுகள் உள்ளன என்பதை இந்திய எண் முறையில் எழுதுக.

தீர்வு : தமிழ்நாட்டில் 26,345 சதுரகிலோமீட்டர் பரப்பளவு காடுகள் உள்ளன.


11. இந்தியத் தொடர்வண்டிப் போக்குவரத்தில் ஏறத்தாழப் பத்து இலட்சம் ஊழியர்கள் உள்ளனர். இதைப் பன்னாட்டு எண் முறையில் எழுதுக.

தீர்வு : இந்திய தொடர்வண்டி போக்குவரத்தில் ஏறத்தாழ 1,000,000 (ஒரு மில்லியன்) ஊழியர்கள் உள்ளனர்.


புறவய வினாக்கள்


12. 10 மில்லியனின் தொடரி

() 1000001      

() 10000001

() 9999999

() 100001

விடை : () 10000001



13. 99999 இன் தொடரி மற்றும் முன்னியின் வேறுபாடு

() 90000

() 1

() 2

() 99001

விடை : () 2

குறிப்பு : 99999 இன் தொடரி 100000; முன்னி 999998. 100000−999998=2.


14. 1 பில்லியனுக்குச் சமமானது

() 100 கோடி

() 100 மில்லியன்

() 100 இலட்சம்

()  10,000 இலட்சம்

விடை : () 100 கோடி


15. 6,70,905 என்ற எண்ணின் விரிவான வடிவம்

() 6 × 10000 + 7 × 1000 + 9 × 100 + 5 × 1

() 6 × 10000 + 7 × 1000 + 0 × 100 + 9 × 100 + 0 × 10 + 5 × 1

) 6 × 1000000 + 7 × 10000 + 0 × 1000 + 9 × 100 + 0 × 10 + 5 × 1 

() 6 × 100000 + 7 × 10000 + 0 × 1000 + 9 × 100 + 0 × 10 + 5 × 1

விடை : () 6 × 100000 + 7 × 10000 + 0 × 1000 + 9 × 100 + 0 × 10 + 5 × 1

Tags : Questions with Answers, Solution | Numbers | Term 1 Chapter 1 | 6th Maths கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | எண்கள் | பருவம் 1 அலகு 1 | 6 ஆம் வகுப்பு கணக்கு.
6th Maths : Term 1 Unit 1 : Numbers : Exercise 1.1 Questions with Answers, Solution | Numbers | Term 1 Chapter 1 | 6th Maths in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : எண்கள் : பயிற்சி 1.1 - கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | எண்கள் | பருவம் 1 அலகு 1 | 6 ஆம் வகுப்பு கணக்கு : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : எண்கள்