கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | எண்கள் | பருவம் 1 அலகு 1 | 6 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 1.3 | 6th Maths : Term 1 Unit 1 : Numbers

   Posted On :  21.11.2023 03:06 am

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : எண்கள்

பயிற்சி 1.3

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : எண்கள் : பயிற்சி 1.3 : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 1.3 


1. கோடிட்ட இடங்களை நிரப்புக.

(i) அருள்மொழி ஒரு நாளில் ₹12 சேமித்தால் 30 நாட்களில் ₹ _______சேமிப்பாள்.

 விடை : ₹360

குறிப்பு : 12 × 30 = 360

(ii) A என்பவர் 12 நாட்களில் ₹1800 வருமானம் பெறுகிறார், எனில் ஒரு நாளில் ₹ _______ ஐப் பெறுவார்.

விடை : ₹150

குறிப்பு :


(iii) 45  ÷ (7 + 8) − 2 =________.

விடை : 1

குறிப்பு : 45 ÷ 15 – 2 = 3– 2 = 1 


2. சரியா தவறா எனக் கூறுக.

(i) 3 + 9 × 8 = 96  [தவறு]

(ii) 7 × 20 – 4 = 136 [சரி]

(iii) 40 + (56 – 6) ÷ 2 = 45  [தவறு]


3. கடந்த ஐந்து மாதங்களில் ஒரு குறிப்பிட்ட பொது நூலகத்திற்கு வருகை புரிந்தவர்களின் எண்ணிக்கை முறையே 1200, 2000, 2450, 3060 மற்றும் 3200. ஐந்து மாதங்களில் அந்த நூலகத்திற்கு வருகை புரிந்தவர்கள் மொத்தம் எத்தனை பேர்?

தீர்வு

முதல் மாதத்தில் வருகை புரிந்தவர்கள் = 1200 பேர் 

இரண்டாம் மாதம் வருகை புரிந்தவர்கள் = 2000 பேர் 

மூன்றாம் மாதம் வருகை புரிந்தவர்கள் = 2450 பேர் 

நான்காம் மாதம் வருகை புரிந்தவர்கள் = 3060 பேர் 

ஐந்தாம் மாதம் வருகை புரிந்தவர்கள் = 3200 பேர் 

ஐந்து மாதங்களில் நூலகத்திற்கு வருகை புரிந்த மொத்த நபர்களின் எண்ணிக்கை = 11910 பேர்


4. சேரன் வங்கியில் சேமிப்பாக ₹7,50,250 வைத்திருந்தார். கல்விச் செலவிற்காக ₹5,34,500 ஐத் திரும்ப எடுத்தார். அவரின் கணக்கிலுள்ள மீதித் தொகையைக் காண்க?

தீர்வு



5. ஒரு மிதிவண்டித் தொழிற்சாலையில், ஒரு நாளைக்கு 1560 மிதிவண்டிகள் உற்பத்தி செய்யப்பட்டன எனில், 25 நாள்களில் எத்தனை மிதி வண்டிகள் உற்பத்தி செய்யப்பட்டன.

தீர்வு

ஒரு நாளில் உற்பத்தி செய்யப்படும் மிதிவண்டிகள் = 1560

25 நாட்களில் உற்பத்தி செய்யப்படும் மிதிவண்டிகள் = 1560 × 25 = 39000

25 நாட்களில் உற்பத்தி செய்யப்படும் மிதிவண்டிகள் = 39000


6. ஒரு நிறுவனம் புது ஆண்டிற்கான வெகுமதித் தொகையாக (போனஸ்) ₹62,500 25 ஊழியர்களுக்குச் சமமாகப் பங்கிட்டு வழங்கியது. ஒவ்வொருவரும் பெற்றத் தொகை எவ்வளவு

தீர்வு

25 ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட வெகுமதித் தொகை = ₹62,500

ஒரு ஊழியருக்கு வழங்கப்பட்ட வெகுமதித் தொகை = ₹62,500 ÷ 25

ஒவ்வொருவரும் பெற்ற வெகுமதித் தொகை = ₹2,500 


7. சுருக்குக:

(i) (10 + 17) ÷ 3

(ii) 12 – [3 – {6 − (5 − 1)}]

(iii) 100 + 8 ÷ 2 + {(3 × 2) – 6 ÷ 2}

தீர்வு : 

(i) (10 + 17) ÷ 3 (கொடுக்கப்பட்டது

= 27 ÷ 3 (முதலில் ( ) செய்யப்பட்டது

= 9  (இரண்டாவதாக ÷ செயல் செய்யப்பட்டது

(10 + 17) ÷ 3 = 9

(ii) 12 – [3 – {6 – (5 – 1)}]   (கொடுக்கப்பட்டது

= 12 – [3 – {6 – 4}]   (முதலில் உள்பக்க ( ) செய்யப்பட்டது

= 12 – [3 – 2]   (இரண்டாவது { } செய்யப்பட்டது)

 = 12 – 1  (மூன்றாவது [ ] செய்யப்பட்டது)

 = 11  (இறுதியாகசெயல் செய்யப்பட்டது

12 – [3 – {6 – (5 – 1)}] = 11 

(iii) 100 + 8 ÷ 2 + {(3 × 2 ) – 6 ÷ 2} (கொடுக்கப்பட்டது

= 100 + 8 ÷ 2 + {6 – 6 ÷ 2}   (முதலில் உள்பக்கம் ( ) செய்யப்பட்டது

= 100 + 8 ÷ 2+{6 – 3} (இரண்டாவது { }–க்கு உள்ளிருக்கும் ÷ செயல் செய்யப்பட்டது)

= 100 + 8 ÷ 2+ 3 (மூன்றாவது {} செய்யப்பட்டது)

= 100 + 4 + 3 (நான்காவது ÷ செய்யப்பட்டது)

= 107 (இறுதியாக + செயல் செய்யப்பட்டது)

100 + 8 ÷ 2 + {(3 × 2 ) – 6 ÷ 2}= 107



புறவய வினாக்கள்


8. 3 + 5 – 7 × 1 இன் மதிப்பு

() 5

() 7

() 8

()  1

[விடை : ()  1]

குறிப்பு : 3 + 5 – 7 = 8 – 7 = 1


9. 24  ÷ {8 – (3 ×  2)} இன் மதிப்பு

() 0

() 12

() 3

()  4

[விடை : () 12]

குறிப்பு : 24  ÷ {8 – 6} = 24  ÷ 2 = 12 


10. BIDMAS ஐப் பயன்படுத்திச், சரியான குறியீட்டைக் கட்டத்தில் நிரப்புக..

2 6 –12 ÷ (4 + 2) = 10

() +

() _

() ×

() ÷

[விடை : () × ]

குறிப்பு :

Tags : Questions with Answers, Solution | Numbers | Term 1 Chapter 1 | 6th Maths கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | எண்கள் | பருவம் 1 அலகு 1 | 6 ஆம் வகுப்பு கணக்கு.
6th Maths : Term 1 Unit 1 : Numbers : Exercise 1.3 Questions with Answers, Solution | Numbers | Term 1 Chapter 1 | 6th Maths in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : எண்கள் : பயிற்சி 1.3 - கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | எண்கள் | பருவம் 1 அலகு 1 | 6 ஆம் வகுப்பு கணக்கு : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : எண்கள்