கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | எண்கள் | பருவம் 1 அலகு 1 | 6 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 1.6 | 6th Maths : Term 1 Unit 1 : Numbers

   Posted On :  21.11.2023 03:07 am

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : எண்கள்

பயிற்சி 1.6

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : எண்கள் : பயிற்சி 1.6 : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 1.6


பல்வகைத் திறனறிப் பயிற்சிக் கணக்குகள்

1. என்னுடைய பூட்டப்பட்ட பெட்டியைத் திறக்கப் பயன்படும் கடவுச் சொல்லானது மிகப்பெரிய 5 இலக்க ஒற்றை எண் ஆகும். இது 7, 5, 4, 3 மற்றும் 8 ஆகிய இலக்கங்களைக் கொண்டது எனில் அக்கடவுச் சொல்லைக் கண்டறிக.

விடை : 87543


2. 2001 இல் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நான்கு மாநிலங்களின் மக்கள் தொகை கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மக்கள் தொகையின்படி அம்மாநிலங்களை ஏறு மற்றும் இறங்கு வரிசையில் வரிசைப்படுத்துக.


விடை

ஏறு வரிசை: 6, 85, 48, 437 < 7, 21, 47, 030 < 7, 26, 26, 809 < 9, 12, 76, 115 

இறங்கு வரிசை: 9, 12, 76, 115 > 7, 26, 26, 809  > 7, 21, 47, 030 > 6, 85, 48, 437


3. பின்வரும் அட்டவணையை உற்றுநோக்கி, கீழேயுள்ள வினாக்களுக்கு விடையளிக்கவும்.


(i) 2011 இல் இருந்த புலிகள் எத்தனை?

விடை: 1706 

(ii) 1990 விட 2008 இல் எத்தனை புலிகள் குறைந்துள்ளன?

விடை: 2100

(iii) 2011 மற்றும் 2014 இக்கும் இடையே உள்ள புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா அல்லது குறைந்துள்ளதா?

விடை: 2011 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கு இடையே புலிகளின் எண்ணிக்கை 520 அதிகரித்துள்ளது.


4. முல்லைக்கொடி, ஒவ்வொரு பையிலும் 9 ஆப்பிள்கள் கொண்ட 25 பைகள் வைத்திருந்தாள். அவளுடைய 6 நண்பர்களுக்கு அவற்றைச் சமமாகப் பங்கிட்டுக் கொடுத்தாள் எனில், ஒவ்வொரு நண்பரும் எத்தனை ஆப்பிள்களைப் பெற்றிருப்பர்? ஆப்பிள்கள் மீதமிருக்க வாய்ப்புண்டா? உண்டெனில் எத்தனை?

விடை

ஆப்பிள் பைகளின் எண்ணிக்கை = 25 

ஒவ்வொரு பையிலும் உள்ள ஆப்பிள்களின் எண்ணிக்கை = 9 

மொத்த ஆப்பிள்கள் = 25 × 9

= 225 

அவளுடைய 6 நண்பர்களுக்கு அவற்றைச் சமமாகப் பங்கிட்டுக் கொடுத்தாள் எனில், ஒவ்வொரு நண்பருக்கும் கிடைக்கக் கூடிய ஆப்பிள்கள்

 = 225 ÷  6 = 37 

மீதமிருக்கும் ஆப்பிள்கள் = 3


5. ஒரு கோழிப்பண்ணையிலிருந்து 15472 முட்டைகளை, ஓர் அடுக்கு அட்டையில் 30 முட்டைகள் வீதம் அடுக்கினால், மொத்தம் எத்தனை அடுக்கு அட்டைகள் தேவைப்படும்?

விடை

மொத்த முட்டைகள் = 15472 

ஒரு அடுக்கு அட்டையில் அடுக்கப்படும் முட்டைகள் = 30 

தேவைப்படும் அடுக்கு அட்டைகள்

= 15472 ÷ 30 

 =515 + 1 (மீதமுள்ள 22 முட்டைகளை அடுக்கி வைக்க)

= 516

ஈவு = 515 

மீதி = 22



மேற்சிந்தனைக் கணக்குகள்


6. அட்டவணையைப் படித்துப் பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க.


(i) அகத்தியம் விண்மீன் விட்டத்தை இந்திய மற்றும் பன்னாட்டு முறையில் எழுதுக.

விடை

இந்திய முறை: இரண்டு கோடி ஐம்பத்து ஒன்பது இலட்சத்து நாற்பத்து ஓராயிரத்து தொள்ளாயிரம்

பன்னாட்டு முறை: இருபத்து ஐந்துமில்லியன்தொள்ளாயிரத்து நாற்பத்து ஓராயிரத்துதொள்ளாயிரம் 

(ii) சிரியஸ் விண்மீன் விட்டத்தில் உள்ள 5இன் மதிப்புகளின் கூடுதலை இந்திய முறையில் எழுதுக.

விடை

5,50,500 

(iii) எண்ணூற்று அறுபத்து நான்கு மில்லியன் எழுநூற்று முப்பது என்பதை இந்திய முறையில் எழுதுக.

விடை:

864,000,730(86,40,00,730) 

எண்பத்து ஆறு கோடி நாற்பது இலட்சத்து எழுநூற்று முப்பது

(iv) சுவாதி விண்மீன் விட்டத்தைப் பன்னாட்டு முறையில் எழுதுக.

விடை:

பத்தொன்பது மில்லியன் எண்ணூற்று எண்பத்து எட்டு ஆயிரத்து எண்ணூறு (19,888,800) 

(v) அகத்தியம் மற்றம் சுவாதி விண்மீன்களின் விட்டங்களின் வேறுபாட்டை இந்திய மற்றும் பன்னாட்டு முறையில் எழுதுக.

விடை:

இந்திய முறை: 60,53,100 – அறுபது இலட்சத்து ஐம்பத்து மூன்றாயிரத்து நூறு

பன்னாட்டு முறை: 6,053,100 – ஆறு மில்லியன் ஐம்பத்து மூன்று ஆயிரத்து நூறு 


7. அன்பு, அறிவுச்செல்வியிடம் ஓர் ஐந்து இலக்க ஒற்றைப்படை எண்ணை நினைவில் கொள்ளுமாறுக் கூறினான். மேலும் பின்வரும் குறிப்புகளைக் கூறுகிறான்.

● 1000 ஆவது இட மதிப்பில் உள்ள இலக்கம் 5 விடக் குறைவு.

● 100 ஆவது இடமதிப்பில் உள்ள இலக்கம் 6 விடக் குறைவு.

● 10 ஆவது இடமதிப்பில் உள்ள இலக்கம் 8.

அறிவுச்செல்வி கூறிய விடை என்னவாக இருக்கும்? அவள் ஒன்றுக்கு மேற்பட்ட விடைகளைக் கூறுவாளா?

விடை

63785

53781


8. ஓர் அரங்கில் இசை நிகழ்ச்சி ஒன்று நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 7689 நாற்காலிகளை வரிசைக்கு 90 நாற்காலிகள் வீதம் போடப்படுகிறது எனில்.

(i) எத்தனை வரிசைகளில் இருக்கும்?

(ii) எத்தனை நாற்காலிகள் மீதம் இருக்கும்?

விடை: 

மொத்த நாற்காலிகள் =7689

ஒரு வரிசையிலுள்ள நாற்காலிகளின் எண்ணிக்கை = 90

வரிசைகளின் எண்ணிக்கை = 7689 ÷ 90

84 + 1 = 85

மீதமுள்ள நாற்காலிகள் = 39


9. ஏழு இலக்க எண் 29,75,842 இலட்சம் மற்றும் பத்து இலட்சத்துக்கு முழுமையாக்குக. அம்மதிப்புகள் சமமாக இருக்குமா?

விடை: ஆம், இரண்டும் சமமானது (30,00,000)


10. செய்தித்தாள் மற்றும் இதழ்களிலிருந்து 5 அல்லது 6 அல்லது 7 இலக்க எண்களைக் கண்டுபிடித்துப் பத்தாயிரத்துக்கு முழுமையாக்குக.

விடை: 

(i) 14276    10000

(ii) 1,86945   1,90000

Tags : Questions with Answers, Solution | Numbers | Term 1 Chapter 1 | 6th Maths கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | எண்கள் | பருவம் 1 அலகு 1 | 6 ஆம் வகுப்பு கணக்கு.
6th Maths : Term 1 Unit 1 : Numbers : Exercise 1.6 Questions with Answers, Solution | Numbers | Term 1 Chapter 1 | 6th Maths in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : எண்கள் : பயிற்சி 1.6 - கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | எண்கள் | பருவம் 1 அலகு 1 | 6 ஆம் வகுப்பு கணக்கு : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : எண்கள்