Home | 6 ஆம் வகுப்பு | 6வது கணிதம் | பெரிய எண்களின் உருவாக்கம்

எண்கள் | பருவம் 1 அலகு 1 | 6 ஆம் வகுப்பு கணக்கு - பெரிய எண்களின் உருவாக்கம் | 6th Maths : Term 1 Unit 1 : Numbers

   Posted On :  20.11.2023 06:26 am

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : எண்கள்

பெரிய எண்களின் உருவாக்கம்

பெரிய எண்களின் உருவாக்கம் பற்றி இப்பொழுது நாம் அறியப் போகிறோம். பின்வரும் அட்டவணையை உற்றுநோக்கி மற்றும் பூர்த்தி செய்து பெரிய எண்களின் வளர் படிநிலையைப் பற்றி அறிவோம்.

பெரிய எண்களின் உருவாக்கம்

பெரிய எண்களின் உருவாக்கம் பற்றி இப்பொழுது நாம் அறியப் போகிறோம். பின்வரும் அட்டவணையை உற்றுநோக்கி மற்றும் பூர்த்தி செய்து பெரிய எண்களின் வளர் படிநிலையைப் பற்றி அறிவோம்.


(நான்காம் மற்றும் ஐந்தாம் நிரலில் (Column), மிகச்சிறிய எண்ணும் அவற்றின் எண் பெயரும் கொடுக்கப்பட்டுள்ளன.) அடுத்து வரும் நிரைகளை (Row) உற்று நோக்குகையில் 10 உடன் பூச்சியம் (சுழியம்) கூடுதலாக சேர்ந்து கொண்டே செல்வதை காண்கிறோம். முக்கியத்துவம் வாய்ந்த 10– அடிப்படையாகக் கொண்ட இந்த எண்முறையினம் முதலில் இந்தியர்களால் கண்டறியப்பட்டது. தற்போது உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

10 இன் வளர்ச்சியைப் பின்வரும் அட்டவணையில் காண்போம்.


ஒவ்வொரு புதிய வரிசையும் ஓர் எண்ணின் பத்து மடங்காகவும், 2 வரிசைகளைக் கடந்து சென்றால் எண்ணின் மதிப்பானது நூறு மடங்காகவும் அதிகரிக்கிறது.

எடுத்துக்காட்டாக, 1000 = 10 இன் 100 மடங்கு அல்லது ஓராயிரத்தில் நூறு பத்துகள் இருக்கும்!

குறிப்பு

எண்களின் மதிப்பு அதிகமாகும்போது, இலக்கங்களின் எண்ணிக்கையையும், இடமதிப்பையும் காணுவது கடினம். பெரும்பாலான நேரங்களில் இலட்சம் மற்றும் கோடியை பூச்சியங்களால் விரித்தெழுதுவதற்குப் பதிலாகச் சொற்களைப் பயன்படுத்துகிறோம். இருப்பினும், தேவை எனில் பெரிய எண்களின் சரியான மதிப்பையும் எழுதுதல் வேண்டும்.


இவற்றை முயல்க

1. 5 இலக்க எண் அல்லது அதற்கு மேலான இலக்கங்களுடைய எண்கள் வருமாறு அமைந்த மூன்று பொருட்களின் பெயர்களை எண்களுடன் கூறுக.

தீர்வு : 

(i) சர்வதேச வர்த்தக சபையில் (ஐசிசி) சர்வதேச அளவில் 100 நாடுகளில் 60,00,000 உறுப்பினர்கள் உள்ளனர்  

(ii) 2017 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த விபத்துக்களில் தொடர்புடைய 5,00,116 பேரில் 21,477 பேர் 10–ம் வகுப்புக்கு மேல் பயின்றவர்கள் ஆவர்

(iii) வானத்தில் உள்ள விண் மீன்களின் எண்ணிக்கை.

 (iv) தமிழ்நாட்டிலுள்ள மக்களின் எண்ணிக்கை.

2. ஒரு மாவட்டத்தில் 10 இலட்சம் மக்கள் உள்ளனர். அதே போன்று 10 மாவட்டங்களில் உள்ள மொத்த மக்கள் தொகை யாது?

தீர்வு

ஒரு மாவட்டத்தின் மக்கள் தொகை = 10,00,000 

அதே போல் 10 மாவட்டங்களின் மக்கள் தொகை = 10,00,000 × 10 = 1,00,00,000 

10 மாவட்டங்களின் மக்கள் தொகை = 1,00,00,000 (ஒரு கோடி)

3. அரசானது கல்விக்காகக் குறிப்பிட்ட ஒரு மாவட்டத்திற்கு ஒவ்வொரு மாதமும் ₹2 கோடியைச் செலவு செய்கிறது எனில், 10 மாதத்தில் செலவிடப்படும் மொத்தத் தொகை யாது?

தீர்வு :

கல்விக்கான 1 மாத செலவு = 2 கோடி

10 மாத செலவு = 10 × 2 கோடி = 20 கோடி

குறிப்பிட்ட மாவட்டத்திற்கு கல்விக்கான 10 மாத செலவு = 20 கோடி

Tags : Numbers | Term 1 Chapter 1 | 6th Maths எண்கள் | பருவம் 1 அலகு 1 | 6 ஆம் வகுப்பு கணக்கு.
6th Maths : Term 1 Unit 1 : Numbers : Formation of large numbers Numbers | Term 1 Chapter 1 | 6th Maths in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : எண்கள் : பெரிய எண்களின் உருவாக்கம் - எண்கள் | பருவம் 1 அலகு 1 | 6 ஆம் வகுப்பு கணக்கு : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : எண்கள்