Home | 12 ஆம் வகுப்பு | 12வது இயற்பியல் | மின்னழுத்தமானி

விளக்கம், சூத்திரங்கள், தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு சிக்கல்கள் | கிர்க்காஃப் விதி மற்றும் வீட்ஸ்டோன் சமனச் சுற்று - மின்னழுத்தமானி | 12th Physics : UNIT 2 : Current Electricity

   Posted On :  16.10.2022 07:43 pm

12 வது இயற்பியல் : அலகு 2 : மின்னோட்டவியல்

மின்னழுத்தமானி

மின்னழுத்தமானியானது மின்னழுத்த வேறுபாடு, மின்னோட்டம் மற்றும் மின்தடைகளை துல்லியமாக அளவிட பயன்படுகிறது.

மின்னழுத்தமானி

மின்னழுத்தமானியானது மின்னழுத்த வேறுபாடு, மின்னோட்டம் மற்றும் மின்தடைகளை துல்லியமாக அளவிட பயன்படுகிறது. இதில் பத்து மீட்டர் நீளமுள்ள சீரான மேங்கனின் அல்லது கான்ஸ்டாண்டன் கம்பியானது 1 மீட்டர் நீளமுள்ள இணையான வரிசைகளாக நீட்டப்பட்டு மரப்பலகையில் பொருத்தப்பட்டுள்ளது. கம்பியின் இணைக்கப்படாத A மற்றும் B முனைகள் ஒரே பக்கத்திற்கு கொண்டு வரப்பட்டு இணைப்புத்திருகுகளுடன் தாமிரப்பட்டைகளில் பொருத்தப்பட்டுள்ளன. ஒரு மீட்டர் அளவு கோல் கம்பிக்கு இணையாக பொருத்தப்பட்டுள்ளது.

மின்னழுத்தமானியின் தத்துவம் படம் 2.27 இல் காட்டப்பட்டுள்ளது. கம்பி CD வழியே ஒரு நிலையான மின்னோட்டம் ஏற்படுத்தப்படுகிறது.

மின்கலத்தொகுப்பு, சாவி மற்றும் மின்னழுத்தமானி கம்பி ஆகியவை தொடரிணைப்பில் இணைக்கப்பட்டு முதன்மைச் சுற்றாக அமைகிறது. மின்னியக்கு விசை ε கொண்ட மின்கலத்தின் நேர்மின்முனை C புள்ளியுடனும், எதிர் மின்முனை கால்வானா மீட்டர் மற்றும் உயர் மின்தடை வழியாக தொடுசாவியுடனும் இணைக்கப்பட்டுள்ளன. இது துணைச் சுற்றாக அமைகிறது.


தொடு சாவி உதவியுடன் J என்ற புள்ளியில் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது. CJ பகுதியின் குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாடு, மின்கலத்தின் மின்னியக்கு விசைεக்கு சமமானால் கால்வானாமீட்டர் வழியே எவ்வித மின்னோட்டமும் பாயமால் அது சுழி விலக்கத்தை காட்டும். எனவே CJ என்பது சமன்செய் நீளம் l என்று அழைக்கப்படும். CJ க்கு குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாடு Irl. இங்கு r என்பது ஓரலகு நீளத்திற்கான மின்தடை ஆகும்.


இங்கு I மற்றும் r மாறிலிகள் என்பதால் ∈ ∝  I  மின்கலத்தின் மின்னியக்கு விசை சமன்செய் நீளத்திற்கு நேர்த்தகவில் அமையும்.

 

Tags : Explanation, Formulas, Solved Example Problems | Kirchhoff’s rule and Wheatstone’s bridge விளக்கம், சூத்திரங்கள், தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு சிக்கல்கள் | கிர்க்காஃப் விதி மற்றும் வீட்ஸ்டோன் சமனச் சுற்று.
12th Physics : UNIT 2 : Current Electricity : Potentiometer Explanation, Formulas, Solved Example Problems | Kirchhoff’s rule and Wheatstone’s bridge in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது இயற்பியல் : அலகு 2 : மின்னோட்டவியல் : மின்னழுத்தமானி - விளக்கம், சூத்திரங்கள், தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு சிக்கல்கள் | கிர்க்காஃப் விதி மற்றும் வீட்ஸ்டோன் சமனச் சுற்று : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது இயற்பியல் : அலகு 2 : மின்னோட்டவியல்