விளக்கம், சூத்திரங்கள், தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு சிக்கல்கள் - மின்தடை எண் | 12th Physics : UNIT 2 : Current Electricity

   Posted On :  15.10.2022 01:51 am

12 வது இயற்பியல் : அலகு 2 : மின்னோட்டவியல்

மின்தடை எண்

இயற்பியல் : மின்னோட்டவியல்: மின்தடை எண்

மின்தடை எண்

ஒரு கடத்தியின் மின்தடை


என முன்பகுதியில் கண்டோம். இங்கு σஎன்பது அக்கடத்தியின் மின்கடத்து எண் ஆகும். இது கடத்தி செய்யப்பயன்படும் பொருளின் தன்மையை மட்டுமே சார்ந்தது. ஆனால் கடத்தியின் அளவையோ, வடிவத்தையோ பொறுத்தது அல்ல.

ஒரு பொருளின் மின்தடை எண் என்பது அதன் மின்கடத்து எண்ணின் தலைகீழ் மதிப்புக்குச் சமமாகும்.


சமன்பாடு (2.19) ஐப் பயன்படுத்தி சமன்பாடு (2.18) ஐ மாற்றி அமைக்க


எனவே ஒரு பொருளின் மின்தடையானது அதன் நீளத்திற்கு நேர்த்தகவிலும், அப்பொருளின் குறுக்கு வெட்டு பரப்பிற்கு எதிர்த்தகவிலும் அமையும்.மேலே காணும் சமன்பாட்டில் உள்ள தகவு மாறிலிp ஆனது பொருளின் மின்தடை எண் எனப்படும்.

l = 1 m மற்றும் A = 1 m2 எனில், மின்தடை R = P ஆகும். இதனை வேறுவிதமாக கூறினால் பொருளின் மின்தடை எண் என்பது ஓரலகு நீளமும் ஓரலகு குறுக்கு வெட்டு பரப்பும் கொண்ட கடத்தியானது மின்னோட்டத்திற்கு அளிக்கும் மின்தடை ஆகும். இதன் SI அலகு ஓம் - மீட்டர் (m).

மின்தடை எண்ணைப் பொருத்து பொருட்களை கடத்திகள், குறைக்கடத்திகள், மின் கடத்தாப்பொருட்கள் (Insulators) என வகைப்படுத்தலாம். கடத்திகள் மிகக் குறைந்த மின் தடை எண்ணையும், மின்கடத்தாப்பொருட்கள் மிக அதிக மின்தடை எண்ணையும் மற்றும் குறைகடத்திகளின் மின்தடை எண் கடத்திகளை விட அதிகமாகவும் ஆனால் மின்கடத்தாப்பொருட்களை விட குறைவாகவும் அமையும்.

அட்டவணை (2.1) ல் சில கடத்திகள், மின்கடத்தாப் பொருட்கள் மற்றும் குறை கடத்திகளின் மின்தடை எண்கள் தரப்பட்டுள்ளன.


 

எடுத்துக்காட்டு 2.6

ஒரு கம்பியின் மின்தடை 20 . இக்கம்பி தனது ஆரம்ப நீளத்திலிருந்து எட்டு மடங்கு நீளம் அதிகரிக்குமாறு சீராக நீட்டப்பட்டால், கம்பியின் புதிய மின்தடை என்ன?


தீர்வு

R1 = 20, R2= ?

ஆரம்ப நீளம் I1, என்பதை l எனக் கொள்வோம்.

புதிய நீளம், I2, = 8l1, அதாவது l2, = 8l

ஆரம்ப மின்தடை, 

புதிய மின்தடை 

கம்பி நீட்டப்பட்டாலும், அதன் பருமன் மாறாது.

ஆரம்ப பருமன் = இறுதி பருமன்



எனவே, கம்பியை நீட்டும் போது அதன் மின்தடையும் அதிகரிக்கிறது.

 

எடுத்துக்காட்டு 2.7

படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு A உயரம், B அகலம் மற்றும் C நீளம் கொண்ட ஒரு செவ்வக வடிவ உலோக பெட்டியைக் கருதுவோம்.


பெட்டியின் A மற்றும் B முகங்களுக்கிடையே V என்ற மின்னழுத்த வேறுபாடு அளிக்கப்படுகிறது எனில் (படம் (அ)) IABஎன்றமின்னோட்டம் பாய்கிறது. பெட்டியின் B மற்றும் C முகங்களுக்கிடையே V என்ற அதே மின்னழுத்த வேறுபாட்டை அளித்தால் (படம் (ஆ)) உருவாகும் மின்னோட்டத்தை கண்டுபிடி. உனது விடையை மின்னோட்டம் IAB மதிப்பின் மடங்காக எழுதுக?


தீர்வு

முதல் நேர்வில், பெட்டியின் மின்தடை


Tags : Explanation, Formulas, Solved Example Problems விளக்கம், சூத்திரங்கள், தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு சிக்கல்கள்.
12th Physics : UNIT 2 : Current Electricity : Resistivity Explanation, Formulas, Solved Example Problems in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது இயற்பியல் : அலகு 2 : மின்னோட்டவியல் : மின்தடை எண் - விளக்கம், சூத்திரங்கள், தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு சிக்கல்கள் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது இயற்பியல் : அலகு 2 : மின்னோட்டவியல்