Home | 12 ஆம் வகுப்பு | 12வது இயற்பியல் | கிர்க்காஃப் முதல் விதி (மின்னோட்டவிதி அல்லது சந்தி விதி)

விளக்கம், சூத்திரங்கள், தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு சிக்கல்கள் - கிர்க்காஃப் முதல் விதி (மின்னோட்டவிதி அல்லது சந்தி விதி) | 12th Physics : UNIT 2 : Current Electricity

   Posted On :  16.10.2022 07:41 pm

12 வது இயற்பியல் : அலகு 2 : மின்னோட்டவியல்

கிர்க்காஃப் முதல் விதி (மின்னோட்டவிதி அல்லது சந்தி விதி)

எந்த ஒரு சந்தியிலும் சந்திக்கின்ற மின்னோட்டங்களின் குறியியல் கூட்டுத்தொகை (Algebraic Sum) சுழியாகும்.

கிர்க்காஃப் விதிகள் (KIRCHHOFF'S RULES)

ஓம் விதி எளிய மின்சுற்றுகளுக்கு மட்டுமே பயன்படும். சிக்கலான மின் சுற்றுகளில் மின்னோட்டம் மற்றும் மின்னழுத்த வேறுபாட்டை கணக்கிட கிர்க்காஃப் விதிகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை

i) கிர்க்காஃப் மின்னோட்ட விதி

ii) கிர்க்காஃப்மின்னழுத்த வேறுபாட்டு விதி ஆகும்.

 

கிர்க்காஃப் முதல் விதி (மின்னோட்டவிதி அல்லது சந்தி விதி)

எந்த ஒரு சந்தியிலும் சந்திக்கின்ற மின்னோட்டங்களின் குறியியல் கூட்டுத்தொகை (Algebraic Sum) சுழியாகும். இது மின் துகள்களில் உள்ள மின்னூட்டங்களின் அழிவின்மை விதியின் அடிப்படையில் அமைகிறது. சந்திகளில் மின் துகள்கள் உருவாக்கப்படுவதோ அழிவதோ இல்லை. அதாவது சந்தியில் நுழையும் மின் துகள்கள் அனைத்தும் சந்தியை விட்டு வெளியேறும். கிர்க்காஃப் முதல் விதியைப் பயன்படுத்தும் போது சந்தியை நோக்கிச் செல்லும் மின்னோட்டம் நேர்க்குறி எனவும் சந்தியை விட்டு வெளியேறும் மின்னோட்டம் எதிர்க்குறி எனவும் எடுத்துக்கொள்ளப்படும்.


A சந்திக்கு இவ்விதியை பயன்படுத்த (படம் 2.23)

I1+I2-I3–I– I= 0 (அல்லது)

I1+I2=I3+ I+ I5

 

எடுத்துக்காட்டு 2.20

பின்வரும் மின்சுற்றில் Iன் மதிப்பை கண்டுபிடி.



தீர்வு

மின்சுற்றில் P என்ற புள்ளிக்கு கிர்க்காஃப் முதல் விதியை பயன்படுத்த,

P ஐ நோக்கி செல்லும் அம்புக்குறிகளை (மின்னோட்டத்தை) நேர்குறியாகவும், P விட்டு விலகிச் செல்லும் அம்புக்குறிகளை (மின்னோட்டங்கள்) எதிர்க்குறியாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே,

0.2A - 0.4A + 0.6A - 0.5A + 0.7A - I = 0

1.5A - 0.9A - I = 0

0.6A - I = 0

I = 0.6 A

Tags : Explanation, Formulas, Solved Example Problems விளக்கம், சூத்திரங்கள், தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு சிக்கல்கள்.
12th Physics : UNIT 2 : Current Electricity : Kirchhoff’s first rule (Current rule or Junction rule) Explanation, Formulas, Solved Example Problems in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது இயற்பியல் : அலகு 2 : மின்னோட்டவியல் : கிர்க்காஃப் முதல் விதி (மின்னோட்டவிதி அல்லது சந்தி விதி) - விளக்கம், சூத்திரங்கள், தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு சிக்கல்கள் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது இயற்பியல் : அலகு 2 : மின்னோட்டவியல்