அளவீட்டியல் | அலகு 1 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - வினா விடை | 8th Science : Chapter 1 : Measurement

   Posted On :  09.09.2023 02:28 am

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 1 : அளவீட்டியல்

வினா விடை

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 1 : அளவீட்டியல் : புத்தக வினாக்கள், கேள்வி பதில்கள்

மதிப்பீடு

 

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

 

1. கீழ்க்கண்டவற்றுள் எது ஆங்கிலேய அலகு முறை?

அ) CGS

ஆ) MKS

இ) FPS

ஈ) SI

விடை : இ) FPS

 

2. மின்னோட்டம் என்பது -------------------- அளவு ஆகும்.

அ) அடிப்படை

ஆ) துணை நிலை

இ) வழி

ஈ) தொழில் சார்ந்த

விடை : அ) அடிப்படை

 

3. வெப்பநிலையின் SI அலகு --------------------------

அ) செல்சியஸ்

இ) கெல்வின்

ஆ) ஃபாரன்ஹீட்

ஈ) ஆம்பியர்

விடை : இ) கெல்வின்

 

4. ஒளிச்செறிவு என்பது --------------------- யின் ஒளிச்செறிவாகும்.

அ) லேசர் ஒளி

ஆ) புற ஊதாக் கதிரின் ஒளி

இ) கண்ணுறு ஒளி

ஈ) அகச்சிவப்புக்கதிரின் ஒளி

விடை : இ) கண்ணுறு ஒளி

 

5. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புகள் நெருங்கி இருப்பது. ------------

அ) துல்லியம்

ஆ) நுட்பம்

இ) பிழை

ஈ) தோராயம்

விடை : ஆ) நுட்பம்

 

6. பின்வரும் கூற்றுகளில் எது தவறானது?

அ) தோராயம் என்பது துல்லியமான மதிப்பைத் தரும்

ஆ) தோராயம் என்பது கணக்கிடுதலை எளிமையாக்குகிறது.

இ)  தோராயம் என்பது குறைவான தகவல்கள் மட்டும் உள்ளபோது பயனுள்ளதாக அமைகிறது.

ஈ) தோராயம் என்பது உண்மையான மதிப்புக்கு நெருக்கமாக உள்ள மதிப்பினைத் தருகிறது.

விடை : அ) தோராயம் என்பது துல்லியமான மதிப்பைத் தரும்

 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

 

1. திண்மக்கோணம் என்ற ஸ்ட்ரேடியன் (Sr) அலகில் அளக்கப்படுகிறது.

2. ஒரு பொருளின் குளிர்ச்சி அல்லது வெப்பத்தின் அளவானது வெப்பநிலை என குறிப்படப்படுகிறது.

3. மின்னோட்டத்தினை அளவிடப் பயன்படும் கருவி அம்மீட்டர் ஆகும்.

4. ஒரு மோல் என்பது 6.023 x 10+23 அணுக்கள் அல்லது மூலக்கூறுகளைக் கொண்டுள்ளது.

5. அளவீடுகளின் நிலையற்ற தன்மை பிழைகள் என அழைக்கப்படுகிறது.

6. அளவிடப்பட்ட மதிப்பு உண்மை மதிப்புடன் நெருங்கி இருப்பது துல்லியத்தன்மை எனப்படும்.

7. இரண்டு நேர்க்கோடுகளின் குறுக்கீட்டினால் தளக்கோணம் உருவாகிறது.

 

III. சரியா அல்லது தவறா எனக் கூறுக. தவறான கூற்றைத் திருத்தி எழுதுக.

 

1. ஓர் அமைப்பில் உள்ள துகள்களின் மொத்த இயக்க ஆற்றலின் அளவே வெப்பநிலை ஆகும். விடை : தவறு, சராசரி இயக்க ஆற்றல்

2. ஒரு கூலும் மின்னூட்டம் ஒரு நிமிடத்தில் பாயும் எனில், அது ஓர் ஆம்பியர் அழைக்கப்படுகிறது. விடை : தவறு, வினாடி

3. ஒரு பொருளில் அடங்கியுள்ள துகள்களின் எண்ணிக்கையே பொருளின் அளவாகும். விடை : சரி

4. ஒரு மெழுகுவர்த்தியிலிருந்து வெளியாகும் ஒளிச்செறிவின் தோராயமான மதிப்பு ஒரு கேண்டிலாவிற்குச் சமமாகும். விடை : சரி

5. குவார்ட்ஸ் கடிகாரங்கள் GPS கருவிகளில் பயன்படுகின்றன. விடை : தவறு, அணுக் கடிகாரங்கள்

6. 4.582 எண்ணின் முழுமையாக்கப்பட்ட மதிப்பு 4.58 விடை : சரி

 

IV. பொருத்துக.


வெப்பநிலை - உண்மையான மதிப்பின் நெருங்கிய அளவு

தளக்கோணம் - குளிர்ச்சி அல்லது வெப்பத்தின் அளவு

திண்மக் கோணம் - இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அளவீடுகளின் நெருங்கிய தன்மை

துல்லியத் தன்மை  - உண்மையான மதிப்பின் நெருங்கிய அளவு

நுட்பம் - இரண்டு தளங்களின் குறுக்கீட்டினால் ஏற்படும் கோணம்

 

விடை :

வெப்பநிலை - குளிர்ச்சி அல்லது வெப்பத்தின் அளவு

தளக்கோணம் - இரண்டு தளங்களின் குறுக்கீட்டினால் ஏற்படும் கோணம்

திண்மக் கோணம் - மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட தனங்களின் குறுக்கீட்டினால் ஏற்படும் கோணம்

துல்லியத் தன்மை  - மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட தனங்களின் குறுக்கீட்டினால் ஏற்படும் கோணம்

நுட்பம் - இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அளவீடுகளின் நெருங்கிய தன்மை

 

 

 

V. கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்ந்து சரியான ஒன்றைத் தேர்வு செய்.


1. கூற்று : SI அலகுமுறை அளவீடுகளுக்கான மிகச் சரியான முறையாகும்.

காரணம்: வெப்பநிலைக்கான SI அலகு கெல்வின். 2.கூற்று : மின்னோட்டம், பொருளின் அளவு, ஒளிச்செறிவு ஆகியவை அடிப்படை இயற்பியல் அளவுகளாகும்.

காரணம்: அவை ஒன்றோடொன்று சார்புடையவை. 3.கூற்று: திண்மக் கோணத்தின் அலகு ரேடியன். காரணம்: ஒரு வட்டத்தின் ஆரத்திற்குச் சமமான வில் ஒன்று வட்டத்தின் மையத்தில் ஏற்படுத்தும் கோணமே ஒரு ரேடியன் எனப்படும்.

அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம் ஆகும்.

ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம் அல்ல.

இ) கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.

ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

விடை : அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம் ஆகும்.

 

2. கூற்று : மின்னோட்டம், பொருளின் அளவு, ஒளிச்செறிவு ஆகியவை அடிப்படை இயற்பியல் அளவுகளாகும்.

காரணம் : அவை ஒன்றோடொன்று சார்புடையவை விடை : அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம் ஆகும்.

விடை : அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம் ஆகும்.

 

3. கூற்று : திண்மக் கோணத்தின் அலகு ரேடியன்

காரணம் : ஒரு வட்டத்தின் ஆரத்திற்குச் சமமான வில் ஒன்று வட்டத்தின் மையத்தில் ஏற்படுத்தும் கோணமே ஒரு ரேடியன் எனப்படும்.

விடை : ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

 

VI. மிகச் சுருக்கமாக விடையளி.

 

1. SI முறையில் உள்ள அடிப்படை அளவுகள் எத்தனை?

ஏழு

 

 2. வெப்பநிலையை அளக்க உதவும் கருவியின் பெயரினைத் தருக.

வெப்பநிலை மானிகள்

 

3. ஒளிச்செறிவின் SI அலகு என்ன?

கேண்டிலா (Cd)

 

4. அணுக் கடிகாரங்களில் பயன்படும்அலைவுகளின் வகை என்ன?

அணு அலைவு

 

5. காட்சிப்படுத்துதலின் (Display) அடிப்படையில் அமைந்த கடிகாரங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

> ஒப்புமை வகைக் கடிகாரங்கள்

> எண்ணிலக்க வகைக் கடிகாரங்கள்

 

6. கடிகாரத்தில் ஒருமணி நேரத்தில் நிமிட முள் எத்தனை முறை சுற்றிவரும்?

ஒரு முறை

 

7. ஒரு நிமிட நேரத்தில் எத்தனை மணி நேரம் உள்ளது?

1 மணி = 60 நிமிடம்

60 நிமிடம் = 1 மணி

1 நிமிடம் =1/6 = 0.01667

= 0.02 மணி


VII. சுருக்கமாக விடையளி.

 

1. அளவீடு என்றால் என்ன?

மதிப்புத் தெரிந்த திட்ட அளவினைக் கொண்டு, தெரியாத அளவின் மதிப்பைக் கண்டறிவதே அளவீட்டியல் ஆகும்.

 

2. வெப்பநிலையை அளவிடப் பயன்படும் அலகுகளைக் கூறுக.

1. செல்சியஸ் 2. பாரன்ஹீட் 3. கெல்வின்

ஆகியவை வெப்பநிலையை அளவிடப் பயன்படும் அலகுகள் ஆகும்.

 

3. ஆம்பியர்-வரையறு.

ஒரு கடத்தியின் வழியே ஒரு விநாடியில் ஒரு கூலும் மின்னூட்டம் சென்றால், மின்னோட்டத்தின் மதிப்பு ஆம்பியர் எனப்படும்.

 

4. மின்னோட்டம் என்றால் என்ன?

> ஒரு குறிப்பிட்ட திசையில் மின்னூட்டங்கள் பாய்வதை மின்னோட்டம் என்கிறோம்.

> மின்னோட்டத்தின் SI அலகு ஆம்பியர் (A)

 

5. ஒளிச்செறிவு பற்றி நீ அறிவது யாது?

> ஒளிமூலத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட திசையில் ஓரலகு திண்மக் கோணத்தில் வெளிவரும் ஒளியின் அளவு ஒளிச்செறிவு எனப்படும்.

> மின்னோட்டத்தின் SI அலகு கேண்டிலா (Cd)


6. மோல்- வரையறு.

6.023x1023 துகள்களை உள்ளடக்கிய பொருளின் அளவானது மோல் எனவரையறுக்கப்படுகிறது.

 

7. தளக்கோணம் மற்றும் திண்மக்கோணத்திற்கு இடையே உள்ள வேறுபாடுகளைத் தருக.



தளக்கோணம்

> இருகோடுகள் அல்லது இருதளங்கள் வெட்டி கொள்வதால் உருவாகும் கோணம்

> இது இரு பரிமாணம் கொண்டது

> இதன் அலகு ரேடியன்

 

திண்மக்கோணம்

> மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட தளங்கள் ஒரு பொதுவான புள்ளியில் வெட்டிக் கொள்வதால் உருவாகும் கோணம்

> இது முப்பரிமாணம் கொண்டது

> இதன் அலகு ஸ்ட்ரேடியன்


 

VIII. விரிவாக விடையளி.

 

1. அடிப்படை அளவுகளை அவற்றின் அலகுகளுடன் பட்டியலிடுக.



2. கடிகாரங்களின் வகைகளைப்பற்றி சிறு குறிப்பு வரைக.

கடிகாரங்களின் வகைகள்:

1. காட்சியின் அடிப்படையில் கடிகாரத்தின் வகைகள்

2. செயல்படும் முறையின் அடிப்படையில் கடிகாரத்தின் வகைகள்

காட்சியின் அடிப்படையில் கடிகாரத்தின் வகைகள்:

1. ஒப்புமை வகைக் கடிகாரங்கள்

2. எண்ணிலக்க வகைக் கடிகாரங்கள்



ஒப்புமை வகைக் கடிகாரங்கள்

> இது மூன்று குறிமுள்கள் மூலம் நேரத்தைக் காட்டுகின்றன

மணிமுள்: குட்டையாகவும், தடிமனாகவும் அமைந்திருக்கும் கடிகாரத்தில் மணியை காட்டுகிறது.

நிமிடமுள் : நீளமாகவும் மெல்லியதாகவும் இருக்கும் கடிகாரத்தில் நிமிடத்தை காட்டுகிறது.

வினாடிமுள் : நீளமாகவும் மிகவும் மெல்லியதாகவும் இருக்கும் கடிகராத்தில் வினாடியைக் குறிக்கிறது.

ஒரு நிமிடத்திற்கு ஒருமுறையும் ஒரு மணிக்கு 60 முறையும் சுற்றுகிறது.

> எந்திரவியல் அல்லது மின்னியல் தொழிற்நுட்பத்தில் செயல்படும்


எண்ணிலக்க வகைக் கடிகாரங்கள் :

> நேரத்தை நேரடியாகக் காட்டுகின்றன.

> நேரத்தை எண்களாகவோ அல்லது குறியீடுகளாகவோ காட்டுகின்றன.


> 12 மணி நேரம் அல்லது 24 மணி நேரத்தை காட்டும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன.

> மின்னியல் கடிகாரங்கள் என அழைக்கப்படுகிறது.


செயல்படும் முறையின் அடிப்படையில் கடிகாரத்தின் வகைகள் :

1. குவார்ட்ஸ் கடிகாரங்கள்

2. அணுக்கடிகாரங்கள்

குவார்ட்ஸ் கடிகாரங்கள் :

> குவார்ட்ஸ் எனப்படும் படிகத்தினால் கட்டுப்படுத்தப்படும் மின்னனு அலைவுகள் மூலம் இயங்குகின்றன.


> இப்படிக அதிர்வுகளின் அதிர்வெண்ணானது மிகத் துல்லியமானது

> இயந்திரவியல் கடிகாரங்களை விட மிகவும் துல்லியமானது.

> துல்லியத்தன்மையானது 10 வினாடிக்கு ஒரு வினாடி

அணுக்கடிகாரங்கள் :

> அணுவினுள் ஏற்படும் அதிர்வுகளை அடிப்படையாக கொண்டு செயல்படுகின்றன.

> துல்லியத்தன்மையானது 10'வினாடிக்கு ஒரு வினாடி


> பூமியில் இருப்பிடத்தை காட்டும் அமைப்பு, பூமியில் வழி காட்டும் செயற்கைகோள் அமைப்பு மற்றும் பன்னாட்டு நேரப் பங்கீட்டு அமைப்பு ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது.

 

IX. உயர் சிந்தனை வினாக்கள்.

 

1. உனது நண்பன் நேற்று பள்ளிக்கு வருகை தரவில்லை. ஏன் பள்ளிக்கு வரவில்லை எனக் கேட்டதற்கு, தனக்கு 100°C காய்ச்சல் இருந்ததாகவும் மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்றுக் கொண்டதாகவும் அவன் கூறுகிறான். 100°C காய்ச்சல் இருப்பதற்கு வாய்ப்பு உள்ளதா? அவன் கூறியது தவறு. எனில், அதனைச் சரிசெய்து அவனுக்குப்புரிய வைக்கவும்.


இது பிழையே ஏனென்றால்

> மருத்துவர்கள் பயன்படுத்தும் வெப்பமானியில் ஃபாரன்ஹீட் அளவு குறிக்கப்பட்டிருக்கும்

> சராசரியாக மனித உடலின் சாதாரண வெப்பநிலையின் அளவு 98.4° ஃபாரன்ஹீட் (F) அது செல்சியஸ் அளவில் குறிக்கப்பட மாட்டாது.

> செல்சியஸ் அளவானது வானிலை அறிக்கையில் பயன்படுத்தப்படுகிறது.

> அதனால் நான் என் நண்பனிடம் உன் காய்ச்சலின் அளவு 212° ஃபாரன்ஹீட் (F) என்று சொல்ல வேண்டும். 100°செல்சியஸ் (C) என்பது ஃபாரன்ஹீட்டில் 212°F ஆகும். எனவே 100°Cஎன்று சொல்லகூடாது என்று சொல்லி அவருக்கு புரிய வைத்தேன்.

Tags : Measurement | Chapter 1 | 8th Science அளவீட்டியல் | அலகு 1 | 8 ஆம் வகுப்பு அறிவியல்.
8th Science : Chapter 1 : Measurement : Questions Answers Measurement | Chapter 1 | 8th Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 1 : அளவீட்டியல் : வினா விடை - அளவீட்டியல் | அலகு 1 | 8 ஆம் வகுப்பு அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 1 : அளவீட்டியல்