அளவீட்டியல் | அலகு 1 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - கடிகாரங்கள் | 8th Science : Chapter 1 : Measurement
கடிகாரங்கள்
கால இடைவெளியை அளவிடுவதற்கு கடிகாரங்கள் பயன்படுகின்றன. பண்டைய காலத்திலிருந்து பல்வேறு விதமான கடிகாரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. காலத்தைத், துல்லியமாகக் கணக்கிடுவதற்காக அறிவியல் அறிஞர்கள், கடிகாரம் செயல்படும் முறைகளில் பல்வேறு மாற்றங்களைச் செய்துள்ளனர்.
1. காட்சியின் அடிப்படையில் கடிகாரத்தின் வகைகள்
காட்சியின் அடிப்படையில் இருவகைக் கடிகாரங்கள் உள்ளன. அவை:
1. ஒப்புமை வகைக் கடிகாரங்கள்
2. எண்ணிலக்க வகைக் கடிகாரங்கள்
1. ஒப்புமை வகைக் (Analog) கடிகாரங்கள்
இவை பாரம்பரியமான கடிகாரங்களை ஒத்திருக்கின்றன. இவை மூன்று குறிமுள்கள்
மூலம் நேரத்தைக் காட்டுகின்றன.
மணி முள்
இது குட்டையாகவும், தடிமனாகவும் அமைந்திருக்கும். இது கடிகாரத்தில்
மணியைக் (Hour) காட்டுகிறது.
நிமிட
முள்
இது நீளமாகவும், மெல்லியதாகவும் இருக்கும். இது நிமிடத்தைக்
காட்டுகிறது.
வினாடி
முள்
இது நீளமாகவும், மிகவும் மெல்லியதாகவும் இருக்கும் இது வினாடியைக்
குறிக்கிறது. இது ஒரு நிமிடத்திற்கு ஒரு முறையும், ஒரு மணிக்கு 60 முறையும் கடிகாரத்தைச்
சுற்றி வருகிறது.
ஒப்புமை வகைக் கடிகாரங்கள் எந்திரவியல் தொழில் நுட்பம் அல்லது
மின்னியல் தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் வகையில் உருவாக்கப்படுகின்றன.
செயல்பாடு
4
அட்டையைப்
பயன்படுத்தி ஒப்புமை வகைக் கடிகாரத்தின் மாதிரியை உருவாக்கவும்
2. எண்ணிலக்க வகைக் (Digital) கடிகாரங்கள்
எண்ணிலக்க வகைக் கடிகாரங்கள் நேரத்தை நேரடியாகக் காட்டுகின்றன.
இவை நேரத்தை எண்களாகவோ அல்லது குறியீடுகளாகவோ காட்டுகின்றன. இவை 12 மணி நேரம் அல்லது
24 மணி நேரத்தைக் காட்டும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன. தற்காலக் கடிகாரங்கள் நாள்,
கிழமை, மாதம், ஆண்டு, வெப்பநிலை போன்றவற்றைக் காட்டுகின்றன. எண்ணிலக்க வகைக் கடிகாரங்கள்,
பொதுவாக மின்னியல் கடிகாரங்கள் என அழைக்கப்படுகின்றன.
செயல்பாடு 5
தீக்குச்சிகளை
ஒரு அட்டையின் மேல் வைத்து நாள் மற்றும் நேரத்தைக் காட்டும் எண்ணிலக்க வகைக் கடிகாரத்தை
உருவாக்கவும்.
2. செயல்படும்
முறையின் அடிப்படையில் கடிகாரத்தின் வகைகள்
செயல்படும் முறையின் அடிப்படையில் இருவகைக் கடிகாரங்கள் உள்ளன.
அவை:
1. குவார்ட்ஸ் கடிகாரங்கள்
2. அணுக்கடிகாரங்கள்
1. குவார்ட்ஸ் கடிகாரங்கள்
இவை 'குவார்ட்ஸ்' எனப்படும் படிகத்தினால் கட்டுப்படுத்தப்படும்
'மின்னணு அலைவுகள்' (Electronic Oscillations) மூலம் இயங்குகின்றன. இப் படிக அதிர்வுகளின்
அதிர்வெண்ணானது மிகத் துல்லியமானது. எனவே, குவார்ட்ஸ் கடிகாரங்கள் இயந்திரவியல் கடிகாரங்களைவிட
மிகவும் துல்லியமானவை. இக்கடிகாரங்களின் துல்லியத் தன்மையானது 10 வினாடிக்கு ஒரு வினாடி
என்ற அளவில் இருக்கும்.
2. அணுக்கடிகாரங்கள்
க்கடிகாரங்கள் அணுவின் உள்ளே ஏற்படும் அதிர்வுகளை அடிப்படையாகக்
கொண்டு செயல்படுகின்றன. இவை 1013 வினாடிக்கு ஒரு வினாடி என்ற அளவில் துல்லியத்தன்மை
கொண்டவை. இவை பூமியில் இருப்பிடத்தைக் காட்டும் அமைப்பு (GPS), பூமியில் வழிகாட்டும்
செயற்கைக் கோள் அமைப்பு (GLONASS) மற்றும் பன்னாட்டு நேரப்பங்கீட்டு அமைப்பு ஆகியவற்றில்
பயன்படுத்தப்படுகின்றன.
செயல்பாடு 6
நீங்கள்
சூரியக் கடிகாரங்கள் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு சூரியகடிகாரத்தை உருவாக்கி,
காலை முதல் மாலை வரை நேரத்தைக் குறித்துவைக்கவும். இந்த மதிப்புகளை நவீனகடிகாரங்களின்
மதிப்புகளுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கவும்.
கிரீன்விச் சராசரி நேரம்
(GMT)
இது
இங்கிலாந்து நாட்டின் லண்டன் மாநகருக்கு அருகில், கிரீன்விச் என்னுமிடத்தில் உள்ள இராயல்
வானியல் ஆய்வுமையத்தின் (Royal Astronomical Observatory) நேரமாகும். இது 0° தீர்க்கக்
கோட்டில் கணக்கிடப்படுகிறது. புவியானது, 15° இடைவெளியில் அமைந்த தீர்க்கக் கோடுகளின்
அடிப்டையில் 24 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை நேரமண்டலங்கள் (Time
Zones) என்று அழைக்கப்படுகின்றன. அடுத்தடுத்த இரண்டு நேர மண்டலங்களுக்கு இடையே உள்ள
காலஇடைவெளி 1 மணி நேரம் ஆகும்.
இந்திய திட்ட நேரம்
(IST)
இந்தியாவின்
உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மிர்சாபூர் (Mirzapur) எனும் இடத்தின் வழியாகச் செல்லும்
தீர்க்கக் கோட்டை ஆதாரமாகக் கொண்டு இந்திய திட்ட நேரம் கணக்கிடப்படுகிறது. இக்கோடானது
82.5° (கிழக்கு) தீர்க்கக் கோட்டில் அமைந்துள்ளது.
IST
= கிரீன்விச் சராசரி நேரம் + 5.30 மணி