அளவீட்டியல் | அலகு 1 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - தோராயமாக்கல் (Approximation) | 8th Science : Chapter 1 : Measurement
தோராயமாக்கல் (Approximation)
நாம் உணவு தயாரிக்கும்போது, அதற்குத் தேவையான பொருள்களை தோராயமாகவே
தேர்வு செய்கிறோம். நாம் அவற்றைத் துல்லியமாக அளவிடுவது இல்லை. அதைப்போலவே, நாம் மேற்கொள்ளும்போது,
அளவீடுகளை உண்மையான மதிப்பைப் பெறுவது அவ்வளவு சாத்தியமில்லை. சிலநேரங்களில் நாம் தோராயமான
மதிப்பையே எடுத்துக் கொள்கிறோம். 'தோராய முறை' என்பது ஒரு இயற்பியல் அளவை அளவிடும்போது,
உண்மையான மதிப்பிற்கு மிக நெருக்கமாக அமைந்த மதிப்பைக் கண்டறியும் ஒரு வழிமுறையாகும்.
இது அளவிடப்பட்ட எண்ணின் இடமதிப்பை முழுமைப்படுத்துவதன் மூலம், அதனை உண்மை மதிப்பிற்கு
அருகாமையிலுள்ள எண்ணாக மாற்றி மதிப்பிடும் முறையாகும்
போதுமான தகவல்கள் கிடைக்காதபோது, பிரச்சனைகளுக்குத் தீர்வு இயற்பியலாளர்கள்
தோராய காண்பதற்கு முறையைக் கையாளுகின்றனர். தோராய முறையானது, அறிவியல் பூர்வமான குறிப்பிட்ட
சில அனுமானங்ளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. துல்லியத் தன்மை தேவைப்படும் இடங்களில்
இத்தோராய மதிப்புகள் தேவைக்கேற்ப மாற்றியமைக்கப்படுகின்றன.
செயல்பாடு 7
ஒரு
நாளில் மனிதனின் இதயத் துடிப்புகளின் எண்ணிக்கையை தோராயமாகக் கணக்கிடுக (இதயம் தோராயமாக
ஒரு நிமிடத்தில் 75 முறை துடிப்பதாகக் கொள்க).