அளவீட்டியல் | அலகு 1 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - முழுமையாக்கல் | 8th Science : Chapter 1 : Measurement
முழுமையாக்கல்
தற்காலத்தில் கணக்கீடுகளை மேற்கொள்வதற்கு பெரும்பாலும் கணிப்பான்களே
பயன்படுத்தப்படுகின்றன. கணிப்பான்களின் மூலம் கிடைக்கப்பேறும் மதிப்பானது அதிக எண்ணிக்கையிலான
இலக்கங்களைக் கொண்டிருக்கும். எனவே, அதிக இலக்கங்களைக் கொண்டுள்ள இம்மதிப்புகளை முழுமையாக்க
வேண்டியுள்ளது. முழுமையாக்கும் முறையானது, இயற்பியலின் பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படுகின்றது.
1. முழுமையாக்கலுக்கான விதிகள்
• முழுமையாக்கப்படவேண்டிய எண்ணில் கடைசி இலக்கத்தைக் கண்டறிய
வேண்டும்.
• அடுத்த இயக்கத்தில் உள்ள எண்ணின் மதிப்பு 5 ஐ விடக் குறைவாக
இருப்பின், முழுமையாக்கப்படவேண்டிய இலக்கத்திலுள்ள எண்ணை மாற்ற வேண்டியதில்லை.
• அடுத்த இலக்கத்தில் உள்ள எண்ணின் மதிப்பு 5 அல்லது 5ஐ விட
அதிகமாக இருப்பின், முழுமையாக்கப்படவேண்டிய இலக்கத்தின் மதிப்பை ஒன்று அதிகரிக்க வேண்டும்.
கணக்கீடு 4
1.864
என்ற எண்ணை இரண்டு தசம் இலக்கங்களுக்கு முழுமையாக்குக.
தீர்வு
கொடுக்கப்பட்ட
எண்ணை நாம் இரண்டு தசம இலக்கங்களுக்கு முழுமையாக்கவேண்டும். முழுமையாக்கப்பட வேண்டிய
எண்ணிற்கு அடுத்த எண் 4 ஆகும். இந்த எண்ணின் மதிப்பு 5ஐ விடக் குறைவாக இருப்பதால் முழுமையாக்கப்பட
வேண்டிய எண்ணை மாற்ற வேண்டியதில்லை. எனவே, சரியான மதிப்பு 1.86 ஆகும்.
கணக்கீடு 5
1.868
என்ற எண்ணை இரண்டு தசம் இலக்கங்களுக்கு முழுமையாக்குக.
தீர்வு
கொடுக்கப்பட்டுள்ள
எண்ணை நாம் இரண்டு தசம இலக்கங்களுக்கு
முழுமையாக்க வேண்டும். முழுமையாக்கபட வேண்டிய எண்ணிற்கு அடுத்த எண் 8 ஆகும். இந்த எண்ணின்
மதிப்பு 5ஐ விட அதிகமாக இருப்பதால் முழுமையாக்கப்படவேண்டிய இலக்கத்திலுள்ள எண்ணுடன்
1 ஐக் கூட்ட வேண்டும். எனவே, சரியான மதிப்பு 1.87 ஆகும்.